Home
Mobile

இந்த மே மாசத்துல.. புது போன் வாங்குற அம்புட்டு பேரும்.. இந்த 5-ல 1 மாடலை தான் வாங்குறாங்க!

மார்க்கெட்டில் ரூ.30,000, ரூ.40,000 மதிப்புள்ள ஸ்மார்ட்போன்களின் மீதும் பலருக்கும் க்ரேஸ் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் பிரீமியம் மற்றும் பிளாக்ஷிப் போன்களின் பக்கமே தலைவைத்து படுக்காத பலரும் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுடைய முழு கவனமும் ரூ.20,000-க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் இருக்கும்!

அப்படியான நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால்.. ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்க திட்டமிட்டு உள்ளீர்கள்; அதற்கான தேடலில் உள்ளீர்கள் என்றால்.. கவலையை விடுங்கள், நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். ஏனென்றால் இம்மாதம், அதாவது 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில்.. நீங்கள் தேடும் பட்ஜெட்டில் 5 தரமான ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் வாங்க கிடைக்கிறது.

மே 2024: ரூ.20,000 க்குள் கிடைக்கும் டாப் 5 பெஸ்ட் போன்கள்!

1. ரியல்மி பி1 (Realme P1): இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,999 க்கும் வாங்க கிடைக்கிறது. இது பீகாக் கிரீன் மற்றும் பீனிக்ஸ் ரெட் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு உள்ளது.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, வண்ணங்களில் கிடைக்கும். விவரக்குறிப்புகளைப் பற்றி பேசுகையில், இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் ஃபுல் எச்டி+ அமோஎல்இடி டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட், 8ஜிபி வரையிலான LPDDR4x ரேம் மற்றும் 256ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜ், 50எம்பி டூயல் கேமரா செட்டப் ,16எம்பி செல்பீ, 5000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது

2. மோட்டோ ஜி54 5ஜி (Moto G54 5G): ஆரம்பத்தில் இந்த ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,999 க்கும், 8ஜிபி ரேம் + 126ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.15,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும் தற்போது மேற்கண்ட 2 வேரியண்ட்களும் முறையே ரூ.15,999 க்கும் மற்றும் ரூ.13,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

விரிவான அம்சங்களை பொறுத்தவரை, இது டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் மோட்டார் ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான மை யுஐ 5.0 உடன் இயங்குகிறது. இது ஆண்ட்ராய்டு 14-க்கான அப்டேட்டை பெறும் என்றும், மூன்று வருட செக்யூரிட்டி அப்டேட்களை பெறும் என்றும் மோட்டோரோலா உறுதியளித்துள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ உடனான 6.5-இன்ச் ஃபுல்-எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த மோட்டோரோலா ஸ்மார்ட்போன் 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7020 சிப்செட் உடன் வருகிறது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை, மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை விரிவாக்கக்கூடிய 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் குவாட் பிக்சல் (Quad Pixel) தொழில்நுட்பம் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் + 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் உள்ளது. முன்பக்கத்தில் செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான16 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இது வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ, பெய்டு, 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. மேலும் இது ஐபி52-ரேட்டிங் வாட்டர் ரெப்பல்லென்ட் கட்டமைப்பையும் கொண்டுள்ளது. பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வரும் இந்த மோட்டோ ஸ்மார்ட்போனில் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் உள்ளன.

கடைசியாக மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் ஒரு பெரிய 6000mAh பேட்டரியுடன் வருகிறது. இது 33W டர்போபவர் பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. மோட்டோரோலா நிறுவனத்தின் கூற்றுப்படி இந்த பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமானது வெறும் 66 நிமிடங்களில் பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 90 சதவிகிதம் வரை சார்ஜ் செய்யும்.

3. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் (OnePlus Nord CE 3 Lite): ஆரம்பத்தில் இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.19,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.21,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும் தற்போது விலைக்குறைப்பை பெற்று மேற்கண்ட 2 வேரியண்ட்களும் முறையே ரூ.17,999 க்கும் மற்றும் ரூ.19,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 6.72-இன்ச் ஃபுல்-எச்டி+ எல்சிடி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 ஓஎஸ், ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 695 ப்ராசஸர், 108 மெகாபிக்சல் மெயின் கேமரா உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா, 67W சூப்பர்வூக் வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரி போன்றவைகளை கொண்டுள்ளது.

4. ஐக்யூ இஸட்9 5ஜி (iQOO Z9 5G): இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோஎல்இடி டிஸ்பிளே, ஐபி54 ரேட்டிங், மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட், OIS மற்றும் EIS உடனான 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 மெயின் கேமரா மற்றும் 16எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது

5. ரெட்மி நோட் 13 (Redmi Note 13): இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது மீடியாடெக் டைமன்சிட்டி 6080 சிப்செட், 108எம்பி மெயின் கேமரா, 16எம்பி செல்பீ கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் ரீடெயில் பாக்ஸில் 33W சார்ஜர் போன்றவைகளை கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Looking For Best Mobile Phone under Rs 20000 in India in May 2024 Then You Have 5 Options
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X