Home
Mobile

1 இல்ல 9 ஆப்ஷன் இருக்கு.. டக்னு 0 - 100% சார்ஜ் ஆகுற.. பெஸ்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் போன்களின் லிஸ்ட் இதோ!

240W சப்போர்ட் உடன் அறிமுகமான ரியல்மியின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனானது ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast charging) துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ரியல்மியின் கூற்றுப்படி இது வெறும் 10 நிமிடங்களுக்குள் ரியல்மி ஜிடி3 ஸ்மார்ட்போனின் பேட்டரியை 100% சார்ஜ் செய்துவிடும்!

ஒருவேளை நீங்களும் ஒரு நல்ல ஃபாஸ்ட் சார்ஜிங் போனை தேடுகிறீர்கள் என்றால், அதிலும் குறிப்பாக 100W க்கு மேலான ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் போனை தேடுகிறீர்கள் என்றால்.. உங்களுக்கு ஒன்றல்ல, இரண்டல்ல - ரியல்மி ஜிடி3 மாடலையும் சேர்த்து - மொத்தம் 9 ஆப்ஷன்கள் உள்ளன!

ஒரு நல்ல ஃபாஸ்ட் சார்ஜிங் போனை தேடுறீங்களா? 1 இல்ல 9 ஆப்ஷன் இருக்கு!

01. ரியல்மி ஜிடி3 (Realme GT3)

ரியல்மி ஜிடி3 ஸ்மார்ட்போனானது 240W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் உலகின் முதல் போனாகும். ரியல்மியின் கூற்றுப்படி, இது வெறும் 80 வினாடிகளில் 4600mAh பேட்டரியின் 20%-ஐ நிரம்பிவிடும். அதுவே முழுமையாக சார்ஜ் செய்யப்பட 9 நிமிடங்கள் மற்றும் 30 வினாடிகள் மட்டுமே ஆகிறது. இந்த போனின் இந்திய விலை, விற்பனை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

02. ஒன்பிளஸ் 10டி (OnePlus 10T)

கடந்த ஆண்டு அறிமுகமான ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போனில் 150W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. ஒன்பிளஸின் கூற்றுப்படி இதை 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் ஒரு நாள் முழுவதுமான பேட்டரி பேக்கப் கிடைக்கும். ஒன்பிளஸ் 10டி மாடலானது ரூ.49,999 என்கிற ஆரம்ப விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது.

03. ஒன்பிளஸ் 10ஆர் (OnePlus 10R)

ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போனை போலவே, ஒன்பிளஸ் 10ஆர் மாடலும் 150W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இதுவும் வெறும் 10 நிமிட சார்ஜில் 24 மணிநேர பேட்டரி பேக்கப்பை வழங்கும் என்று உறுதியளிக்கிறது. ஒன்பிளஸ் 10ஆர் ஸ்மார்ட்போனானது ரூ.34,999 என்கிற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

04. சியோமி 13 ப்ரோ (Xiaomi 13 Pro)

சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போனானது 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. சியோமியின் கூற்றுப்படி, இது வெறும் 12 நிமிடங்களில் 100% பேட்டரியை சார்ஜ் செய்யும். இந்த ஸ்மார்ட்போனில் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவும் உள்ளது. இதன் இந்திய விலை நிர்ணயம் ரூ.79,999.

05. சியோமி 12 ப்ரோ (Xiaomi 12 Pro)

120W ஹைப்பர்சார்ஜ் தொழில்நுட்பத்துடன் வரும் சியோமி 12 ப்ரோவில் 4600mAh பேட்டரி உள்ளது. சியோமியின் கூற்றுப்படி, பூஸ்ட் மோட்-இன் கீழ் இந்த ஸ்மார்ட்போனை வெறும் 18 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்; அதுவே ஸ்டாண்டர்ட் மோட்-இன் கீழ் 24 நிமிடங்கள் ஆகும். இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.52,999.

06. ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் (Redmi Note 12 Pro Plus)

ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனானது 120W ஹைப்பர்சார்ஜ் ஆதரவுடன் வருகிறது. இது வெறும் 19 நிமிடங்களில் 100% வரை சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. சுவாரசியமாக இதில் 200MP மெயின் கேமராவும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999.

07. சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் (Xiaomi 11i Hypercharge)

இந்த ஸ்மார்ட்போன் 120W ஹைப்பர்சார்ஜ் சப்போர்ட் உடன் வருகிறது . சியோமி நிறுவனத்தின் கூற்றுப்படி இது வெறும் 15 நிமிடங்களில் 100% சார்ஜ் செய்யும். ரூ.26,999 க்கு வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 108எம்பி மெயின் சென்சார், 8எம்பி அல்ட்ரா-வைட் ஷூட்டர் மற்றும் 2எம்பி மேக்ரோ ஷூட்டர் என்கிற நல்ல கேமரா செட்டப்பும் உள்ளது.

08. ஐக்யூ 11 (iQOO 11)

ஐக்யூ 11 ஸ்மார்ட்போனானது 120W பிளாஷ்சார்ஜ் ஆதரவுடன் வருகிறது ஐக்யூ நிறுவனத்தின் கூற்றுப்படி, இது 25 நிமிடங்களில் ஸ்மார்ட்போனின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும். இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.59,999 இல் தொடங்குகிறது மற்றும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் உடன் வருகிறது.

09. ஐக்யூ நியோ 7 (iQOO Neo 7)

ஐக்யூ 11-ஐ போலவே ஐக்யூ நியோ 7 ஸ்மார்ட்போனும் 120W பிளாஷ்சார்ஜ் ஆதரவுடன் வருகிறது, இதுவும் 25 நிமிடங்களுக்குள் 100% வரை சார்ஜ் செய்யும் திறனை கொண்டுள்ளது. ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 8200 சிப்செட், 64எம்பி கேமரா செட்டப்பும் உள்ளது!

More from GizBot

Best Mobiles in India

English summary
Looking for Best Fast Charging Smartphones Check out These 9 phones Which Offer 240W, 120W and 150W Support
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X