Home
Mobile

ஆளுக்கு 2 ஆர்டர் போட்றாங்க.. ரூ.6799 க்கு 120Hz டிஸ்பிளே, IP64, 2TB மெமரி, 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

ரூ.7000 க்குள் என்கிற பட்ஜெட்டில்.. நல்ல-நல்ல அம்சங்களை கொண்ட ஒரு என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனை (Entry Level Smartphone Under Rs.7000) தேடுகிறீர்கள் என்றால்.. இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 10 (Infinix Smart 10) ஸ்மார்ட்போனை நீங்கள் நிச்சயம் கருத்தில் கொள்ள வேண்டும்.

ரூ.6799 என்கிற ஆரம்ப விலையில் கடந்த ஜூலை 25 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை இன்று (ஆகஸ்ட் 2 ஆம் தேதி) முதல் தொடங்கியது. ரூ.7000 க்குள் என்கிற பட்ஜெட்டில்.. இந்த ஸ்மார்ட்போன் அப்படி என்னென்ன "நல்ல-நல்ல" அம்சங்களை பேக் செய்கிறது? வாருங்கள் விரிவாக பார்ப்போம்:

ஆளுக்கு 2 ஆர்டர் போட்றாங்க.. ரூ.6799 தான்.. எந்த மாடல்?

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 10 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.67-இன்ச் எச்டி பிளஸ் (720 x 1600 பிக்சல்ஸ்) ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது, இதில் 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 700 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் மற்றும் 240ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்ப்ளிங் ரேட் ஆகியவைகளும் உள்ளது

சிப்செட்டை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் யுனிசாக் டி7250 சிப்செட் உடன் இணைக்கப்பட்டுள்ளது, இது 4ஜிபி LPDDR4x ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 2டிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜையும் ஆதரிக்கிறது. இந்த போன் 4 வருட லேக்-ப்ரீ அனுபவத்திற்காக TÜV SÜD சான்றிதழை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 10 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான எக்ஸ்ஓஎஸ் 15.1 உடன் வருகிறது. இது தனிப்பட்ட வாய்ஸ் அசிஸ்டென்ட், ஃபோலாக்ஸ் ஏஐ உட்பட பல இன்பினிக்ஸ் ஏஐ அம்சங்களுடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் டாக்குமெண்ட் அசிஸ்டென்ட் மற்றும் ரைட்டிங் அசிஸ்டென்ட் போன்ற ஏஐ ஆதரவு கொண்ட ப்ரொடெக்டிவ் டூல்களையும் ஆதரிக்கிறது.

கேமராக்களை பொறுத்தவரை இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 10 ஸ்மார்ட்போன் ஆனது 8 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா யூனிட் மற்றும் 8 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டரை பேக் செய்கிறது. இது டூயல் வீடியோ மோட் ரெக்கார்டிங்கை ஆதரிக்கிறது. மேலும் பின்பக்க மற்றும் முன்பக்க கேமராக்கள் இரண்டும் 30fps வேகத்தில் 2கே வீடியோ பதிவை ஆதரிக்கின்றன.

பேட்டரியை பொறுத்தவரை இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 10 ஸ்மார்ட்போன் ஆனது யூஎஸ்பி டைப்-சி போர்ட் வழியாக 15W சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை ஐபி64 ரேட்டிங் தூசி மற்றும் ஸ்பிளாஸ்-எதிர்ப்பு கட்டமைப்பை கொண்டுள்ளது

கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை டிடிஎஸ் (DTS) ஆல் டியூன் செய்யப்பட்ட டூயல் ஸ்பீக்கர்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 4ஜி, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், எப்எம் ரேடியோ மற்றும் ஓடிஜி ஆகிய கனெக்டிவிட்டி ஆப்ஷன்களையும் கொண்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி இந்த ஸ்மார்ட்போன் இன்பினிக்ஸ் அல்ட்ராலிங்க் அம்சத்தையும் ஆதரிக்கிறது, இது செல்லுலார் நெட்வொர்க் இல்லாத பகுதிகளில் தகுதியான பிற இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்களுக்கு வாய்ஸ் கால்களை செய்ய அனுமதிக்கும்.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 10 விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 10 ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.6,799 க்கு வாங்க கிடைக்கிறது. இது ஐரிஸ் ப்ளூ, ஸ்லீக் பிளாக், டைட்டானியம் சில்வர் மற்றும் ட்விலைட் கோல்ட் ஆகிய 4 கலர்களில் பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட் (Flipkart) வழியாக விற்பனை செய்யப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X