என்னப்பா சொல்றீங்க? நிஜமாவா! புது Phone வாங்க போனவர்களை அப்படியே நிப்பாட்டும் ஒரு தகவல்!

|

"சூப்பரா போட்டோ எடுக்கணும்.. அதே சமயம் நல்லா வீடியோ ரெக்கார்டிங்கும் இருக்கணும்" என்கிற எதிர்பார்ப்புடன் ஒரு நல்ல கேமரா போனை (Camera Phone) வாங்க வேண்டும் என்கிற தேடலில் உள்ள பலரையும், அப்படியே நிப்பாட்டும் படியான ஒரு தகவல் வெளியாகி உள்ளது!

அதென்ன தகவல்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

64MP அல்லது 108MP இருந்தா மட்டும் போதுமா?

64MP அல்லது 108MP இருந்தா மட்டும் போதுமா?

ஒரு ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப்பில் 64MP அல்லது 108MP சென்சார் இருந்தால் மட்டுமே அதுவொரு நல்ல கேமரா போனாகி விடாது.

அது நல்ல அவுட்-புட்களை வழங்கும் திறன்களை / அம்சங்களை கொண்டிருக்க வேண்டும்; அப்போதுதான் அதுவொரு நல்ல கேமரா போன்!

கதை முடிஞ்சது போங்க! தண்ணீ தெளிச்சு.. துணி வச்சி TV-ஐ துடைப்பீங்களா? அலெர்ட் ஆகிக்கோங்க!கதை முடிஞ்சது போங்க! தண்ணீ தெளிச்சு.. துணி வச்சி TV-ஐ துடைப்பீங்களா? அலெர்ட் ஆகிக்கோங்க!

டிவிஸ்ட் மேல டிவிஸ்ட்!

டிவிஸ்ட் மேல டிவிஸ்ட்!

"கேமரா சென்சார் முக்கியம் அல்ல; கேமராவின் திறன்கள் தான் முக்கியம்" என்கிற விஷயத்தை கையில் எடுத்த ஒரு மொபைல் போன் நிறுவனம், மிகவும் பேமஸ் ஆன தனது ஸ்மார்ட்போன் ஒன்றில் - எக்கச்சக்கமான டிவிஸ்ட்களை சேர்த்துள்ளது!

அதுபற்றி தகவல் அறிந்த போட்டோகிராஃபி மற்றும் வீடியோகிராஃபி விரும்பிகள் அனைவருமே "வாங்குறதே வாங்குறோம் அதையே வாங்கிடலாம்!" என்கிற காத்திருப்பில் இறங்கி உள்ளனர்!

அதென்ன ஸ்மார்ட்போன்?

அதென்ன ஸ்மார்ட்போன்?

நாம் இங்கே பேசுவது - சியோமி நிறுவனத்தின் துணை பிராண்டான ரெட்மியின் அடுத்த கே சீரிஸ் (K Series) ஸ்மார்ட்போன்களை பற்றியே ஆகும்.

பொதுவாகவே ரெட்மியின் கே சீரீஸ் மாடல்களுக்கு ஏகபோகமாக வரவேற்பு இருக்கும். தற்போது அந்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி உள்ளது. ஏனென்றால் வரவிருக்கும் ரெட்மி கே60 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் OIS என்கிற ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilisation) தொழில்நுட்பம் சேர்க்கப்பட உள்ளது!

ஷாக் ஆகிப்போன சயின்டிஸ்ட்கள்.. இது எப்படி தப்பிச்சது? அதுவும் இவ்ளோ பக்கத்துல இருந்தும் கூட!ஷாக் ஆகிப்போன சயின்டிஸ்ட்கள்.. இது எப்படி தப்பிச்சது? அதுவும் இவ்ளோ பக்கத்துல இருந்தும் கூட!

இதனால் என்ன பயன்?

இதனால் என்ன பயன்?

டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக வெளியான ஒரு அறிக்கையின்படி, ரெட்மி K60 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் ஒன்று ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) தொழில்நுட்பத்துடன் கூடிய 48MP மெயின் சென்சாரை பேக் செய்யும்.

அறியாதோர்களுக்கு, OIS என்பது சற்றே மென்மையான வீடியோ ரெக்கார்டிங், வேகமான ஷட்டர் ஸ்பீட் மற்றும் குறைந்த வெளிச்சத்தில் கூட ஒளிமிகுந்த புகைப்படங்களை எடுக்க உதவும் திறன்களை வழங்கும் ஒரு தொழில்நுட்பம் ஆகும்!

கேமரா மட்டும் தான் வெயிட்-ஆ இருக்குமா?

கேமரா மட்டும் தான் வெயிட்-ஆ இருக்குமா?

வரவிருக்கும் ரெட்மி கே60 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் கேமரா செட்டப் மட்டும் தான் வெயிட்டாக இருக்குமா என்று கேட்டால்.. இல்லவே இல்லை!

ரெட்மி கே60 சீரிஸில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 5500mAh பேட்டரி இடம்பெறும் என்கிற தகவலும் கிடைத்துள்ளது. அது 30W வயர்லெஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கலாம்!

2கே டிஸ்பிளே வேற!

2கே டிஸ்பிளே வேற!

ரெட்மி K60 சீரீஸில், ஹோல் பஞ்ச் டிஸ்ப்ளே கட்அவுட்டுடன் கூடிய 2K டிஸ்ப்ளே பேக் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. அது Dolby Vision HDR மற்றும் 120Hz AMOLED பேனலை "தக்கவைக்கும்" என்று அனுமானிக்கப்படுகிறது!

ப்ராசஸரை பொறுத்தவரை, இது Dimensity 8100 சிப், Dimensity 8200 க்கு அடுத்ததாக இயங்கும் என்று கூறப்படுகிறது.

வெறும் ரூ.12,249 க்கு இப்படி ஒரு 5G Phone கிடைக்குறப்ப.. ரூ.20,000 5ஜி போன்லாம் எதுக்கு?வெறும் ரூ.12,249 க்கு இப்படி ஒரு 5G Phone கிடைக்குறப்ப.. ரூ.20,000 5ஜி போன்லாம் எதுக்கு?

என்ன விலைக்கு அறிமுகமாகும்?

என்ன விலைக்கு அறிமுகமாகும்?

எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, Redmi K60 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.35,000 என்கிற பட்ஜெட்டை சுற்றியதொரு புள்ளியில் அறிமுகம் செய்யப்படலாம்.

அறிமுகத்தை பொறுத்தவரை, இது இந்த நவம்பர் மாத இறுதிக்குள் வெளியாகலாம்!

Best Mobiles in India

English summary
Looking for best camera phone with ois support upcoming Redmi K60 fufill your expecatations

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X