Home
Mobile

இந்த நவம்பரில்.. கண்ணை மூடிக்கிட்டு.. ரூ.15000 பட்ஜெட்ல.. எந்தெந்த 5G போன்களை நம்பி வாங்கலாம்?

இந்த நவம்பர் மாதத்தில் ரூ.15,000 என்கிற பட்ஜெட்டில், எந்த சமரசமும் இல்லாத ஒரு நல்ல ஸ்மார்ட்போனை (Best Smartphone Under Rs.15000 November 2023) வாங்க வேண்டும் என்கிற தேடலில் உள்ளீர்களா? ஆம் என்றால், கவலையை விடுங்கள்! நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்!

ஏனென்றால்.. பெர்ஃபார்மென்ஸ் (செயல்திறன்), கேமரா குவாலிட்டி மற்றும் பேட்டரி லைஃப் என கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் சமநிலையை வழங்கும்.. அதே சமயம் ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் 3 ஸ்மார்ட்போன்களை பற்றித்தான் நாம் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம்.

ரூ.15000 பட்ஜெட்ல.. எந்தெந்த 5G போன்களை நம்பி வாங்கலாம்?

நீங்கள் ஒரு சோஷியல் மீடியா லவ்வர் ஆக இருந்தாலும் சரி, அல்லது மொபைல் கேமிங் மீது பேரார்வம் கொண்டவராக இருந்தாலும் சரி.. அல்லது அன்றாடப் பயன்பாட்டிற்கு நம்பகமான ஒரு ஸ்மார்ட்போனை தேடுபவராக இருந்தாலும் சரி.. கீழ்வரும் 3 ஸ்மார்ட்போன்களில் 1 உங்களுக்கானதாக இருக்கலாம்.

01. போக்கோ எம்6 ப்ரோ 5ஜி (Poco M6 Pro 5G): போக்கோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான போக்கோ எம்6 ப்ரோ 5ஜி உடன் நாங்கள் இந்த பட்டியலை தொடங்குகிறோம். இந்த நவம்பரில் ரூ.15,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் நீங்கள் நம்பி வாங்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் இது முதலிடம் வகிக்கிறது.

ரூ.15000 பட்ஜெட்ல.. எந்தெந்த 5G போன்களை நம்பி வாங்கலாம்?

ஏனென்றால், இது 5ஜி ஆதரவுடன் வருகிறது. மேலும் இதன் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது வெறும் ரூ.9,999 க்கு தொடங்குகிறது. ஒருவேளை உங்களுக்கு மேலதிக ரேம் மற்றும் ஸ்டோரேஜ் தேவைப்பட்டால், நீங்கள் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை வாங்கலாம். இதன் விலை நிர்ணயம் ரூ.10,99 ஆகும். கடைசியாக உள்ள 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.11,999 ஆம்.

ஒட்டுமொத்தமாக, இந்த ஸ்மார்ட்போனின் விலையை கருத்தில் கொண்டால்.. வேகமான 5ஜி இணைப்பு (Fast 5G Connectivity), மென்மையான செயல்திறன் (Smooth Performance) மற்றும் ஒழுக்கமான கேமராக்கள் (Decent Cameras) கொண்ட பட்ஜெட் போனை தேடும் அனைவருக்கும் போக்கோ எம்6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இரு சிறந்த தேர்வாக இருக்கும்.
.
02. சாம்சங் கேலக்ஸி எம்14 5ஜி (Samsung Galaxy M14 5G): இந்த பட்டியலில் இரண்டாவதாக உள்ள ஸ்மார்ட்போன்- சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்14 5ஜி மாடல் தான். சுவாரஸ்யமாக இதுவும் 5ஜி ஆதரவுடன் வருகிறது. கூடுதலாக இது மென்மையான 90ஹெர்ட்ஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவையும் வழங்குகிறது.

கேலக்ஸி எம்14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 5என்எம் எக்ஸிநோஸ் 1330 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது அன்றாட பணிகள் மற்றும் இலகுவான மல்டி டாஸ்கிங்கை கையாளும் திறனை கொண்டது. எல்லாவற்றை விட முக்கியமாக இது ஒரு பெரிய 6,000mAh பேட்டரியை பேக் செய்கிறது.

ரூ.15000 பட்ஜெட்ல.. எந்தெந்த 5G போன்களை நம்பி வாங்கலாம்?

நீங்கள் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் உள்ளவராக இருந்தால், இந்த ஸ்மார்ட்போனில் உள்ள ரியர் கேமரா செட்டப் ஆனது பல்வேறு ஒளி நிலைகளில் தெளிவான மற்றும் வண்ணமயமான புகைப்படங்களை எடுக்கும் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம். கடைசியாக இது சாம்சங்கின் யூசர் ஃபிரெண்ட்லியான மற்றும் தனித்துவமான அம்சங்கள் நிறைந்த ஒன்யுஐ (OneUI) சாஃப்ட்வேர் உடன் வருகிறது. தற்போது இது ரூ.119,90 என்கிற சலுகை விலையிகள் வாங்க கிடைக்கிறது.

3. லாவா பிளேஸ் ப்ரோ 5ஜி (Lava Blaze Pro 5G): இந்த பட்டியலில் உள்ள கடைசியாக உள்ள ஸ்மார்ட்போன்- லாவா பிளேஸ் ப்ரோ 5ஜி ஆகும். இது ஒரு நேர்த்தியான மற்றும் ஸ்டைலான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது டைமன்சிட்டி 6020 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது ஒரு திறமையான மிட்ரேன்ஜ் சிப்செட் ஆகும். கூடவே இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது, இது பெரும்பாலான பயனர்களுக்கு போதுமானதாக இருக்கும்.

ரூ.15000 பட்ஜெட்ல.. எந்தெந்த 5G போன்களை நம்பி வாங்கலாம்?

ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்டு இயங்கும் இந்த லாவா 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஒரு பெரிய 5000mAh பேட்டரியையையும் கொண்டுள்ளது, இதை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் ஒரு நாள் முழுவதுமான பேட்டரி லைஃப்பை வழங்குகிறது. சுவாரசியமாக இந்த ஸ்மார்ட்போன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது, நிறுவனத்தின் கூற்றுப்படி, இது வெறும் ஒரு மணி நேரத்திற்குள் பேட்டரியை 0 முதல் 100% வரை சார்ஜ் செய்யும்.

இதிலுள்ள 50எம்பி ப்ரைமரி ரியர்கேமராவானது நல்ல லைட்டிங் நிலையில் நல்ல புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டது, ஆனால் குறைந்த வெளிச்சத்தில் நல்ல அவுட்புட்களை வழங்க போராடுகிறது. ஒட்டுமொத்தமாக, லாவா பிளேஸ் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது, வடிவமைப்பு, செயல்திறன், பேட்டரி ஆயுள் மற்றும் கேமரா தரம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு நல்ல ஆல்-ரவுண்டர் ஆகும். இது ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Looking For Best 5G Phones Under Rs 15000 in India in November 2023 Check Out This List
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X