Home
Mobile

அள்ளு அள்ளு.. லேட்டஸ்ட் Vivo 5ஜி போன் மீது டிஸ்கவுண்ட்.. 6500mAh பேட்டரி, IP64 ரேட்டிங், 50MP கேமரா!

கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகமான விவோ நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன மாடல்? அதன் அசல் அறிமுகம் விலை என்ன? தற்போது கிடைக்கும் ஆபர் விலை என்ன? அது என்னென்ன முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? அது விவோ டி4எக்ஸ் 5ஜி (Vivo T4x 5G) ஸ்மார்ட்போனாகும். பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் சிறப்பு விற்பனையின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் ரூ.13,499 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் மார்ச் 2025 இல் அறிமுகம் செய்யப்படும் போது, விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 6ஜிபிரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.13,999 க்கு வாங்க கிடைத்தது.

அள்ளு அள்ளு.. லேட்டஸ்ட் Vivo 5ஜி போன் மீது டிஸ்கவுண்ட்!

தற்போது ரூ.500 தள்ளுபடியை பெற்று ரூ.13,499 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த தள்ளுபடி கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு பரிவர்த்தனை செய்வதன் மூலம் அணுக கிடைக்கும். நோ காஸ்ட் இஎம்ஐ-யின் கீழ் இந்த ஸ்மார்ட்போனை வாங்க விரும்பினால், மாதாந்தம் ரூ.4667 முதல் தொடங்கும் விருப்பங்களை தேர்வு செய்யலாம். எக்ஸ்சேன்ஜ் போனஸ்-ஐ பொறுத்தவரை ரூ.8450 வரை டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

மேற்குறிப்பிட்ட (பேங்க், நோ காஸ்ட் இஎம்ஐ மற்றும் எக்ஸ்சேன்ஜ்) சலுகைகள் ஆனது விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 2 கலர் ஆப்ஷன்கள் மீதும் கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இது மெரைன் ப்ளூ (Marine Blue) மற்றும் ப்ரோடான் பர்பிள் (Proton Purple) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது.

விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- பிளாஸ்டிக் பாடி
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங்
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்
- லைவ் டெக்ஸ்ட், சர்க்கிள் டு சர்ச் மற்றும் ஏஐ ஸ்கிரீன் டிரான்ஸ்லேஷன் போன்ற ஸ்மார்ட் அம்சங்கள்

- டூயல் கேமரா செட்டப்
- 50எம்பி ப்ரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார்
- 8எம்பி செல்பீ கேமரா
- ஏஐ ஏரேசர் உட்பட பல ஏஐ கேமரா அம்சங்கள்
- 30 fps இல் 4K வீடியோ ரெக்கார்டிங்
- பெரிய 6,500mAh பேட்டரி
- 44W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

இங்கே கவனிக்கப்பட வேண்டிய சுவாரசியமான விஷயம் என்னவென்றால் விவோ டி4எக்ஸ் மாடலுக்கு முன் அறிமுகமான விவோ டி3எக்ஸ் ஸ்மார்ட்போனும் கூட அதே ரூ.13,999 க்கு தான் பிளிப்கார்ட் வழியாக விற்பனை செய்யப்படுகிறது. ஒருவேளை உங்களுக்கு இந்த 2 மாடல்களையும் ஒப்பிட்டு பார்த்து, அதன் பின்னர் ஏதேனும் ஒன்றை வாங்க வேண்டும் என்றால்.. விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள் இதோ:

விவோ டி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் சிம் (நானோ-சிம்) ஆதரவுடன் வரும் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஃபன்டச் ஓஎஸ் 14 மூலம் இயங்குகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை, 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.72-இன்ச் எஃப்எச்டி எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ப்ராசஸரை பொறுத்தவரை இது 4என்எம் அடிப்படையிலான ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8ஜிபி வரையிலான LPDDR4X ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான UFS 2.2 ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் எக்ஸ்டென்டட் ரேம் 3.0 அம்சத்தின்கீழ் பில்ட்-இன் ரேம்-ஐ மேலும் 8ஜிபி வரை விரிவாக்க முடியும். மறுகையில் உள்ள இன்டர்னல் ஸ்டோரேஜை, மைக்ரோஎஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை விரிவாக்க முடியும்.

கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் எப்f/1.8 அபெக்ஷர் கொண்ட 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் + எப்/2.4 அபெக்ஷர் கொண்ட 2 மெகாபிக்சல் சென்சார் உள்ளன. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக, முன்பக்கத்தில் எப்/2.05 அபெர்க்ஷர் உடனான 8 மெகாபிக்சல் செல்பீ கேமராவும் உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான பெரிய 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. விவோவின் கூற்றுப்படி இதை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 68 மணிநேரம் வரையிலான மியூசிக் பிளேபேக் டைம்-ஐ வழங்கும். இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங் மற்றும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது.

அஃபிலியேட் லிங்க் வெளிப்படுத்துதல்: இந்த வலைத்தளத்தில் உள்ள அஃபிலியேட் லிங்க் மூலம் செய்யப்படும் கொள்முதல்களில் இருந்து கிஸ்பாட் வலைத்தளம் கமிஷன்களை சம்பாதிக்கிறது. தயாரிப்புகள் நேர்மையான கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன, உங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Looking for Best 5G Phone Under Rs 15000 in Flipkart Sale Check Out Vivo T4x 5G Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X