Home
Mobile

2025 தீபாவளி பத்திக்கிச்சு.. ரூ.10,000 பட்ஜெட்ல 5ஜி, 5200mAh பேட்டரி, 50MP கேமரா, AI பட்டன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் பிக் பேங்க் தீபாவளி விற்பனை 2025 (Flipkart Big Bang Diwali Sale 2025) இல், ரூ.10,000 க்குள் என்கிற ஆபர் விலையில் ஒரு நல்ல 5ஜி ஸ்மார்ட்போனை தேடுகிறீர்கள் என்றால்.. நீங்களில் முதலில் கருத்தில் கொள்ள வேண்டியது - கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகமான இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் (Infinix Hot 60 5G Plus) மாடலை தான்!

தற்போது பிளிப்கார்ட் வலைதளத்தில் இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போனின் பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது, அதன் அசல் அறிமுக விலையான ரூ.10,499 க்கு பதிலாக வங்கி தள்ளுபடிக்கு பிறகு ரூ.9.974 க்கு வாங்க கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

2025 தீபாவளி பத்திக்கிச்சு.. ரூ.10,000 பட்ஜெட்ல 5ஜி, 5200mAh பேட்டரி!

இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 700 நிட்ஸ் ப்ரைட்னஸ் உடனான 6.7-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இது மீடியாடெக் டைமன்சிட்டி 7020 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 6ஜிபிஎல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் உள்ளது. இது டூயல்-மோட் வீடியோ ரெக்கார்டிங்கை ஆதரிக்கிறது. முன்பக்கத்தில் 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான எக்ஸ்ஓஎஸ் 15 உடன் வருகிறது.

பேட்டரியை பொறுத்தவரை இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 5,200mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது பைபாஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்கை ஆகிய இரண்டையும் ஆதரிக்கிறது. மேலும் 7.8 மிமீ தடிமன் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி64 மதிப்பீட்டையும் பெறுகிறது.

ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் முதலில் இன்பினிக்ஸ் ஹாட் 60 5ஜி பிளஸ் ஸ்மார்ட்போனை ஏன் கருத்தில் கொள்ள வேண்டும்? ஏனென்றால் இந்த ஸ்மார்ட்போனில் அல்ட்ராலிங்க் கனெக்ட்டிவிட்டி என்கிற அம்சம் உள்ளது, இது பயனர்கள் குறைந்த அல்லது நெட்வொர்க் இல்லாத பகுதிகளில் வாய்ஸ் கால்கள் செய்ய அனுமதிக்கிறது. இருப்பினும், இந்த அம்சம் இன்பினிக்ஸ்-டு-இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே ஆதரிக்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களில் ஒன்று - இதன் கஸ்டமைஸ்டு ஏஐ பட்டன் ஆகும். இது வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டனுக்கு கீழே வலது விளிம்பில் வைக்கப்பட்டுள்ளது. இது சிங்கிள்-பிரஸ் மற்றும் லாங்-பிரஸ் செயல்பாடுகளை வழங்குகிறது. இதன்கீழ் யூட்யூப் மற்றும் கூகுள் மேப்ஸ் உட்பட 30 க்கும் மேற்பட்ட ஆப்களை அணுகும்படி கஸ்டமைஸ் செய்யலாம்

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் போலாக்ஸ் ஏஐ அசிஸ்டென்ட்டும் உள்ளது. இதை ஆக்டிவேட் செய்ய பயனர்கள் ஏஐ பட்டனை லாங் பிரஸ் செய்யலாம். இதன்கீழ் ஏஐ கால் அசிஸ்டென்ட், ஏஐ ரைட் அசிஸ்டென்ட் மற்றும் கூகுளின் சர்க்கிள் டூ சேர்ச் ஆகிய அம்சங்களை அணுகலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஹைப்பர்எஞ்சின் 5.0 லைட் கேமிங் தொழில்நுட்பம் மற்றும் பிரத்யேக எக்ஸ்பூஸ்ட் ஏஐ கேம் மோட்-ஐயும் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Looking For Best 5G Phone Under Rs 10000 Check Out Infinix Hot 60 5G Plus Discount in Flipkart Diwali Sale
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X