எகிறியது மவுசு.. ஆர்டர் போட்டுக்கிட்டே இருக்காங்க.. 5% டிஸ்கவுண்ட் உடன் மீண்டும் விற்பனைக்கு வந்த Realme போன்!
ரூ.10,000 பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன்களையும் ஓரங்கட்டும் அம்சங்களுடன் அறிமுகமான ஒரு லேட்டஸ்ட் ரியல்மி ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை, மே 1 நள்ளிரவு 12 மணிக்கு நடக்க உள்ளது. அதென்ன ஸ்மார்ட்போன்? இதை ஏன் நம்பி வாங்கலாம்? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது ரியல்மி சி65 5ஜி (Realme C65 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். நினைவூட்டும் வண்ணம் இது கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமானது. இது மீடியாடெக் நிறுவனத்தின் புதிய டைமன்சிட்டி 6300 5ஜி சிப்செட்டை பயன்படுத்தும் முதல் ரியல்மி ஸ்மார்ட்போனாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

என்ன விலை? ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போன் மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.10,499 க்கும், 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.11,499 க்கும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.12,499 க்கும் வாங்க கிடைக்கும்.
இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி நடந்து முடிந்தது. ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனையானது மே 1 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடக்கவுள்ளது. முதல் விற்பனையை போ;போலவே இது ப்ளிப்கார்ட் (Flipkart) மற்றும் ரியல்மி இந்தியா (Realme India) இணையதளம் வழியாக வாங்க கிடைக்கும்.

விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கார்டு வழியாக ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கினால் 5% கேஷ்பேக் கிடைக்கிறது. இந்த சலுகை ரியல்மி சி65 5ஜி ஸ்மார்போனின் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் மீதும் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் ஃபெதர் க்ரீன் (Feather Green) மற்றும் க்ளோயிங் பிளாக் (Glowing Black) கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.
ரியல்மி சி65 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 1604 x 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், 240ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் 625 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ப்ராசஸரை பொறுத்தவரை, 6என்எம் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் (6nm octa-core MediaTek Dimensity 6300) உடனான ஏஆர்எம் மாலி-ஜி57 ஜிபியு (Arm Mali-G57 MC2 GPU) மற்றும் 6ஜிபி வரையிலான LPDDR4x ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப்பில் ஏஐ-ஆதரவு உடனான 50-மெகாபிக்சல் மெயின் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 8-மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா யூனிட் ஆனது வினாடிக்கு 30 பிரேம்களில் 1080பி வீடியோ பதிவை ஆதரிக்கின்றன.
பேட்டரியை பொறுத்தவரை, இது 15W வயர்டு விரைவான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ, க்யூஇஸட்எஸ்எஸ் (QZSS) மற்றும் யூஎஸ்பி டைப்-சி போன்றவைகளை ஆதரிக்கிறது. மேலும் டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸிற்கான ஐபி54 ரேட்டிங், ரியல்மியின் சொந்த டைனமிக் பட்டன் மற்றும் ஏர் சைகை அம்சங்களையும் கொண்டுள்ளது.
மே மாதத்தில் என்னென்ன போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன?
1. ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4)
2. போக்கோ எப்6 (POCO F6)
3. கூகுள் பிக்சல் 8ஏ (Google Pixel 8a)
4. ரியல்மி ஜிடி 5 ப்ரோ (Realme GT 5 Pro)
5. மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Neo)
6. சாம்சங் கேலக்ஸி எப்55 (Samsung Galaxy F55)
7. விவோ வி30இ (Vivo V30e)
8. சாம்சங் கேலக்ஸி எம்35 (Samsung Galaxy M35)
9. ஐக்யூ இஸட்9எக்ஸ் (iQOO Z9x)
10. மோட்டோ இ14 (Moto E14)


Click it and Unblock the Notifications








