Home
Mobile

சரியான நேரத்தில் தரமான Price Cut.. இனிமேல் இந்த Samsung 5G போன் ரூ.11,000 பட்ஜெட்டில் கிடைக்கும்!

சாம்சங் (Samsung) நிறுவனம் - இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் - ஒரு புத்திசாலித்தனமான வேலையை செய்துள்ளது.

அதாவது 5ஜி போன்களுக்கான (5G Phone) தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகும் சூழ்நிலையில் - பட்ஜெட் விலையின் கீழ் - ஒரு புதிய 5ஜி மொபைல் போனை அறிமுகம் செய்வதற்கு பதிலாக தன்னிடம் ஏற்கனவே உள்ள 5ஜி ஸ்மார்ட்போனின் விலையை தாறுமாறாக குறைத்து (Price Cut) அதை பட்ஜெட் விலைக்குள் கொண்டு வந்துள்ளது.

அதென்ன மாடல்? அதன் பழைய விலை மற்றும் புதிய விலை விவரங்கள் என்ன? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? கொடுக்கும் பணத்திற்கு இந்த ஸ்மார்ட்போன் வொர்த்து தானா? இதோ விவரங்கள்:

Samsung-ன் எந்த ஸ்மார்ட்போன் விலைக்குறைப்பை பெற்றுள்ளது?

Samsung-ன் எந்த ஸ்மார்ட்போன் விலைக்குறைப்பை பெற்றுள்ளது?

சாம்சங் நிறுவனத்திடம் இருந்து வாங்க கிடைக்கும் மிகவும் மலிவான 5ஜி ஸ்மார்ட்போன் என்றதுமே உங்களில் சிலர் அது என்ன மாடல் என்பதை யூகித்து இருக்கலாம்.

அது சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி (Samsung Galaxy M13 5G) மாடல் ஆகும். நினைவூட்டும் வண்ணம் இந்த 5ஜி-எனேபிள்டு சாம்சங் ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு ஸ்டோரேஜ் வகைகளின் கீழ் வாங்க கிடைக்கிறது மற்றும் அந்த இரண்டுமே விலைக் குறைப்பைப் பெற்றுள்ளன!

எவ்வளவு விலைக்குறைப்பை பெற்றுள்ளது?

எவ்வளவு விலைக்குறைப்பை பெற்றுள்ளது?

முன்னரே குறிப்பிட்டபடி, சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அது 4ஜிபி + 64ஜிபி மற்றும் 6ஜிபி + 128ஜிபி ஆப்ஷன்கள் ஆகும். இந்த வேரியண்ட்களின் விலைகள் முறையே ரூ.13,999 மற்றும் ரூ.15,999 ஆகும்.

தற்போது இந்த 2 ஸ்டோரேஜ் வேரியண்ட்களின் மீதும் ரூ.2,000 என்கிற விலைக்குறைப்பு அறிவிக்கபட்டுள்ளது. இதன் சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.11,000 என்கிற பட்ஜெட்டிற்கு இறங்கி வந்துள்ளது!

கேலக்ஸி எம்13 5ஜி போனின் புதிய விலை விவரங்கள்:

கேலக்ஸி எம்13 5ஜி போனின் புதிய விலை விவரங்கள்:

ரூ.2000 என்கிற விலை குறைப்பிற்கு பின்னர் சாம்சங் கேலக்ஸி எம்13 5ஜி போனின் 4ஜிபி ரேம் ஆப்ஷன் ஆனது ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது. மறுகையில் உள்ள 6ஜிபி ரேம் ஆப்ஷன் ஆனது ரூ.13,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மிட்நைட் ப்ளூ, ஸ்டார்டஸ்ட் பிரவுன் மற்றும் அக்வா கிரீன் என்கிற 3 கலர் ஆப்ஷன்களின் கீழ் விற்பனை செய்யப்படும் இந்த ஸ்மார்ட்போனின் மீது விலைக்குறைப்பு மட்டும் அல்ல; வேறு சில சலுகைகளும் உள்ளன!

அதென்ன சலுகைகள்?

அதென்ன சலுகைகள்?

சாம்சங் ஷாப் ஆப் (Samsung Shop App) வழியாக சாம்சங் கேலக்ஸி M13 5G ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.2000 வரையிலான தள்ளுபடியை பெறுவார்கள்.

அதுமட்டுமின்றி, நீங்கள் எச்டிஎப்சி வங்கியின் (HDFC Bank) கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் பட்சத்தில் ரூ.1,000 என்கிற உடனடி கேஷ்பேக்கையும் (Cashback) பெறலாம்.

ரூ.11,999 க்கு இது வொர்த்-ஆ?

ரூ.11,999 க்கு இது வொர்த்-ஆ?

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் - தாராளமாக நம்பி வாங்கலாம்! ஏனென்றால் இது ரூ.12,000 க்குள் பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் மட்டுமல்ல; 2022 ஆம் ஆண்டில் வெளியான பெஸ்ட் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களில் ஒன்றும் கூட!

இது 6.5 இன்ச் அளவிலான HD+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. அது 90Hz ரெஃப்ரெஷ் ரேட்-ஐ வழங்குகிறது. இது ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 சிப்செட்டை கொண்டுள்ளது.

இது 6ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இது 128ஜிபி வரையிலான ஸ்டோரேஜை வழங்குகிறது. கூடுதலாக மைக்ரோ எஸ்டி கார்டை சேர்ப்பதன் மூலம் இதன் ஸ்டோரேஜை 1TB வரை விரிவாக்கலாம்.

வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது?

வேறு என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது?

- டூயல் சிம் ஆதரவு
- ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த ஒன் யுஐ கோர் 4 (One UI Core 4)
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 50MP மெயின் கேமரா + 2MP டெப்த் சென்சார்
- 5MP செல்பீ சென்சார்
- 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5000mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Looking For Affordable 5G Smartphone Samsung Announced Rs 2000 Price Cut On Galaxy M13 5G
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X