Home
Mobile

எவ்ளோ பணம் கொடுத்தாலும் வெளி ஆட்களுக்கு கிடைக்காது.. ஒலிம்பிக்ஸ் வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட ஸ்பெஷல் போன்!

இதற்கு முன் நடந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகளை விட, தற்போது நடக்கும் 2024 பாரீஸ் ஒலிம்பிக்ஸ் (Paris 2024 Olympics) மிகவும் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கோவிட்-19 தொற்றுநோய் தாக்கிய பிறகு "பயந்து பயந்து" நடந்தப்பட்ட 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸிற்கு (Tokyo 2020 Olympics) பிறகு.. மிகவும் நம்பிக்கையுடன், வழக்கமான போட்டிமனப்பான்மை உடன் நடக்கும் ஒலிம்பிக்ஸ் இதுவாகும். இதை இன்னும் சிறப்பிக்கும் வகையில், சாம்சங் (Samsung) நிறுவனமானது ஒலிம்பிக்ஸ் வீரர்களுக்கு மட்டுமே பிரத்யேகமான ஒரு ஸ்பெஷல் ஸ்மார்ட்போனை (Special Smartphone For Olympics Athletes) அறிமுகம் செய்துள்ளது.

வழக்கமான ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள், ஸ்மார்ட்போன் உள்ளிட்ட தனிப்பட்ட பொருட்களை போடியமிற்கு கொண்டு வர அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் தற்போது முதன்முறையாக, பாரிஸ் 2024 ஒலிம்பிக்ஸில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் போடியமில் ஸ்மார்ட்போனை எடுத்து செல்லவும் மற்றும் பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதுவும் சாதாரண ஸ்மார்ட்போனை அல்ல, சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 6 ஒலிம்பிக் எடிஷன் (Samsung Galaxy Z Flip 6 Olympic Edition) ஸ்மார்ட்போனை!

ஒலிம்பிக்ஸ் வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட ஸ்பெஷல் போன்!

2024 ஒலிம்பிக்கிற்காக தயாரிக்கப்பட்ட சாம்சங்கின் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 6 ஒலிம்பிக் எடிஷன் ஸ்மார்ட்போனில் அப்படி என்ன ஸ்பெஷல்? இது தங்க நிறத்திலான ஒலிம்பிக் வளையங்கள் மற்றும் பாராலிம்பிக் அகிடோஸ் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட மஞ்சள் நிறத்தில் வருகிறது. ஒவ்வொரு டிவைஸிற்கும் ஒரு கேஸை வடிவமைக்க, சாம்சங் நிறுவனமானது இன்னொரு தொழில்நுட்ப நிறுவனமான பாரிசியன் மென்ஸ் லக்சுரி மைசன் (Parisian Men's Luxury Maison) உடன் கூட்டு சேர்ந்துள்ளது.

இந்த ஒலிம்பிக் எடிஷன் ஸ்மார்ட்போனின் கேஸ் ஆனது வெனிசியா லெதரில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ளது மற்றும் ஒலிம்பிக் ரிங்ஸ் ஆனது ஈர்க்கப்பட்ட வண்ண கலவையுடன் ஒரு தனித்துவமான பாட்டினாவை (Unique patina) கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஸ்டாண்டர்ட் எடிஷன் (சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 6) இன்னும் பலரது கைகளுக்கு வரவில்லை. அதற்கு முன்பாகவே இது பாரிஸ் 2024 ஒலிம்பிக்ஸில் பங்கேற்கும் ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது இந்த ஸ்மார்ட்போன் பொது மக்களுக்கு கிடைக்காது என்று அர்த்தம். 2024 ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே கிடைக்கும். கிடைக்கப்பெற்ற தகவலின்படி, பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் பங்கேற்கும் சுமார் 17,000 விளையாட்டு வீரர்களுக்கு சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 6 ஒலிம்பிக் எடிஷன் ஸ்மார்ட்போன் வழங்கப்படுகிறது.

இந்த ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனுடன் சேர்த்து 100 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் டெக்ஸ்ட் மெசேஜ்கள் மற்றும் வாய்ஸ் கால்கள் போன்ற நன்மைகளும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 2024 ஒலிம்பிக்ஸ் விளையாட்டு வீரர்கள் ஆன்லைனில் இருக்க முடியும் என்றும்.. ஒலிம்பிக்ஸ் போட்டி முழுவதும் தத்தம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்திருக்க முடியும் என்று சாம்சங் நிறுவனம் நம்புகிறது.

ஸ்டாண்டர்ட் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 6 ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் என்ன? இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 6 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,09,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,21,999 க்கும் வாங்க கிடைக்கிறது. இது ப்ளூ, மின்ட் மற்றும் சில்வர் ஷேடோ கலர்களில் வாங்க கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 6 உடன் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 6 ஸ்மார்ட்போனின் விலையை பொறுத்தவரை, பேஸிக் 12ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,61,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,76,999 க்கும் மாறட்டும் 12ஜிபி ரேம் + 1டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.2,00,999 க்கும் வாங்க கிடைக்கிறது. இது நேவி, பிங்க் மற்றும் சில்வர் ஷேடோ கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Look At Samsung Galaxy Z Flip Olympic Edition Smartphone Which General Public Cannot Buy
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X