Home
Mobile

சாம்சங் கேலக்ஸி பிரிமியர் போனைப் பற்றி கசிந்திருக்கும் முக்கியத் தகவல்கள்

By Karthikeyan
சாம்சங் கேலக்ஸி பிரிமியர் போனைப் பற்றி கசிந்திருக்கும் முக்கியத் தகவல்கள்

சில நாள்களுக்கு முன்பு சாம்சங் ஒரு புதிய கேலக்ஸி போனைத் தயாரித்து வருகிறது என்ற செய்தி வந்தது. இந்த புதிய போன் கேலக்ஸ் எஸ் 3 மற்றும் எஸ்3 மினி ஆகியவற்றுக்கு இடையே வருவது போல் இருக்கும் என்று சொல்லப்பட்டது. மேலும் அந்த போனுக்கு சாம்சங் கேலக்ஸி பிரீமியர் என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. தற்போது அந்த போனைப் பற்றிய தகவல்கள் ஈவ்லீக்ஸ் என்பவருடைய டுவிட்டரில் வெளியாயிருக்கிறது.

அதில் இருக்கும் தகவல்கள் சாம்சங் ரசிகர்களைப் பரபரப்பி்ல் ஆழ்த்தி இருக்கிறது. குறிப்பாக இந்த புதிய பிரிமியர் போன் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் வருகிறது. அதோடு மிகவும் துல்லியமான 4.65 இன்ச் அளவில் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது.

மேலும் இந்த போன் டூவல் கோர் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த போனில் பவர் விஆர் எஸ்ஜிஎக்ஸ் 544 க்ராபிக்ஸையும் மற்றும் டிஐ ஒஎம்எபி 4470 சிப் செட்டையும் கொண்டிருக்கிறது. அதோடு எல்இடி ப்ளாஷ் கொண்ட 8எம்பி பின்பக்க கேமராவையும், 2எம்பி முகப்புக் கேமராவையும் இந்த போன் கொண்டிருக்கிறது.

இந்த போனில் இருக்கும் 8ஜிபி அல்லது 16ஜிபி மெமரியை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 32ஜிபி அளவு விரிவு செய்ய முடியும். மேலும் இந்த போனில் எச்எஸ்டிபிஎ. டூவல்பேண்ட் வைபை மற்றும் ப்ளூடூத் போன்ற இணைப்பு வசதிகளையும் பார்க்கலாம்.

இந்த பிரிமியர் போன் இந்த ஆண்டு இறுதிக்குள் ஜெர்மனியில் களம் இறங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் விலை 480 ஈரோவாக இருக்கும், அதாவது ரூ.32,912ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் சாம்சங் கேலக்ஸி எஸ்3 மினி என்ற போனையும் களமிறக்கி இருக்கிறது. இந்த போன் ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக 4 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, டபுள்யுவிஜிஎ ரிசலூசன், 3ஜி, எட்ஜ், ஜிபிஆர்எஸ், வைபை மற்றும் என்எப்சி வசதி, யுஎஸ்பி, ப்ளூடூத், எல்இடி ப்ளாசுடன் கூடிய 5எம்பி பின்பக்க கேமரா, விஜிஎ முகப்புக் கேமரா மற்றும் 16 மற்றும் 32ஜிபி மெமரி போன்ற எல்லா வசதிகளையும் இந்த போன் கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X