Home
Mobile

Xiaomi முதல் OnePlus வரை.. புதிய Snapdragon 8 Gen 3 சிப்செட் உடன் வரவிருக்கும் புதிய போன்களின் பட்டியல்!

குவால்காம் டெக்னாலஜிஸ் அதன் பிளாக்ஷிப் மொபைல் பிளாட்ஃபார்மான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை (Snapdragon 8 Gen 3 Chipset) அறிமுகம் செய்துள்ளது. எதிர்பார்க்கப்பட்டபடியே இது குவால்காம் நிறுவனத்தின் வருடாந்திர ஸ்னாப்டிராகன் உச்சிமாநாட்டில் (Annual Snapdragon Summit) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தபட்டது.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்டின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் (Upgraded Version) ஆக ஆவெளியாகி உள்ள ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டின் சிறப்புகள் என்ன? இந்த சிப்செட்டை எந்தெந்த நிறுவனங்கள் தத்தம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த உள்ளன? இதோ விவரங்கள்:

புதிய Snapdragon 8 Gen 3 சிப்செட் உடன் வரவிருக்கும் புதிய போன்கள்!

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டின் சிறப்புகள் என்ன? குவால்காமின் கூற்றுப்படி, இந்த புதிய பிளாக்ஷிப் சிப்செட் ஆனது புதிய செயற்கை நுண்ணறிவு திறன்கள் (Artificial intelligence capabilities), மேம்பட்ட கேமரா திறன்கள் (Advanced camera capabilities), கன்சோலை-டீஃபையிங் கேமிங் (Console-defying gaming) மற்றும் ஸ்டுடியோ-குவாலிட்டி ஆடியோ (Studio-quality audio) ஆகியவற்றை வழங்கும்.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் எந்தெந்த ஸ்மார்ட்போன்களின் இடம்பெறும்? ஷாவ்மீ 14 சீரிஸ் (ஷாவ்மீ 14 மற்றும் ஷாவ்மீ 14 ப்ரோ) தான் இந்த சிப்செட்டை பேக் செய்யும் முதல் ஸ்மார்ட்போன்களாக இருக்கும். ஷாவ்மீயின் இந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆனது அக்டோபர் 26 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புதிய Snapdragon 8 Gen 3 சிப்செட் உடன் வரவிருக்கும் புதிய போன்கள்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகவுள்ள ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனில் நிச்சயம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் இடம்பெறும். இந்த ஸ்மார்ட்போன் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷாவ்மீ மற்றும் ஒன்பிளஸை தொடர்ந்து ரியல்மி நிறுவனத்தின் ஜிடி5 ப்ரோ (Realme GT5 Pro) ஸ்மார்ட்போனிலும் கூட ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் பேக் செய்யப்படும். ரியல்மியின் இந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த சிப்செட்டை ஆசஸ் (Asus), ஹானர் (Honor), மெய்ஸூ (Meizu), நியோ (Nio), நுபியா (Nubia), ரெட்மி (Redmi), ரெட்மேஜிக் (RedMagic), சோனி (Sony), விவோ (Vivo) மற்றும் இஸட்டிஇ (ZTE) உள்ளிட்ட பிராண்டுகளின், வரவிருக்கும்போன்களில் இந்த சிப்செட்இடம்பெறும்.

புதிய Snapdragon 8 Gen 3 சிப்செட் உடன் வரவிருக்கும் புதிய போன்கள்!

ஒன்பிளஸ் 12 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் மட்டுமல்ல, வேறொரு முக்கிய அம்சமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் 2600 நிட்ஸ் பிரைட்னஸ் உடனான 2கே ரெசல்யூஷன் BOE X1 ஓஎல்இடி எல்டிபிஓ டிஸ்பிளே இடம்பெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் யூஎஸ்பி 3.2 போர்ட் மற்றும் 50வாட் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை இன்ஃப்ராரெட் சென்சார், ஓஐஎஸ்-க்கான ஆதரவுடன் 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார், 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் டெலிஃபோட்டோ கேமரா மற்றும் 64 மெகாபிக்சல் ஓம்னிவிஷன் ஓவி64பி கேமராவை பேக் செய்யலாம்.

புதிய Snapdragon 8 Gen 3 சிப்செட் உடன் வரவிருக்கும் புதிய போன்கள்!

செல்பீ கேமராவை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா இடம்பெறலாம். இதில் அலெர்ட் ஸ்லைடர் இடம்பெறும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம். இதுதவிர்த்து ஒன்பிளஸ் 12-ல் இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், ஃபாஸ்ட் 100வாட் வயர்டு சார்ஜிங் ஆதரவு, 5400எம்ஏஎச் பேட்டரி போன்ற அம்சங்களையும் பேக் செய்யலாம்.

ஒன்பிளஸ் 12 5ஜி ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை இது ரூ.60,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இதற்கு முன் வந்த ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.56,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுன் விலை நிர்ணயம் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
List Of Upcoming Smartphones To Pack Qualcomm New Snapdragon 8 Gen 3 Chipset
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X