நல்ல மாசம் பொறக்குது! ஆர்டர் போட அமௌன்ட் ரெடியா? 2024 பிப்ரவரியில் அறிமுகமாகும் 10 புதிய போன்கள்!
புத்தம் புதிய அம்சங்களை உள்ளடக்கிய, புதுப்புது ஸ்மார்ட்போன்களை எதிர்பார்த்தவர்களுக்கு, 2024 ஆம் ஆண்டின் முதல் மாதமே.. ஒரு அட்டகாசமான மாதமாக இருந்தது. ஏனென்றால் கிட்டத்தட்ட அனைத்து ஸ்மார்ட்போன் பிராண்டுகளுமே தத்தம் புதிய மாடல்களை - இந்தியாவிலும், உலக அளவிலும் - அறிமுகப்படுத்தின.
ஜனவரி 2024-ல் விவோ எக்ஸ்100 (Vivo X100), ரெட்மி நோட் 13 ப்ரோ சீரீஸ் (, Redmi Note 13 Pro series), போக்கோ எக்ஸ்6 சீரீஸ் (, POCO X6 series), ஒன்பிளஸ் 12 சீரீஸ் (OnePlus 12 Series), சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் (Samsung Galaxy S24 Series) என பல புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகின.

இது தவிர மோட்டோரோலா ஜி24 பவர் (Motorola G24 Power), ஆசஸ் ஆர்ஓஜி போன் 8 சீரீஸ் (, ASUS ROG Phone 8), டெக்னோ பாப் 8 (Tecno POP 8), ரியல்மி 12 சீரீஸ் ( Realme 12 Series) மற்றும் பல ஸ்மார்ட்போன்களும் கூட அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 2024 ஜனவரி மாதமானது.. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் பல குறிப்பிடத்தக்க ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை கண்டது.
அதற்கு சற்றும் குறை இல்லாதபடி.. பிப்ரவரி 2024 (February 2024) மாதமும் கூட பல எண்ணிக்கையிலான புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தை காண உள்ளது. பிப்ரவரி 2024-ல் 10-க்கும் மேற்பட்ட புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளன? என்னென்ன போன்கள்.. எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

01. ஐக்யூ நியோ 9 ப்ரோ (iQOO Neo 9 Pro): இது பிப்.22 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட், டூயல்-டோன் வேகன் லெதர் பேக் பேனல், 12ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 144ஹெர்ட்ஸ் டிஸ்பிளே போன்ற முக்கிய அம்சங்கள் பேக் செய்யும். இது ரூ.40,000-க்குள் என்கிற பட்ஜெட்டில் வெளியாகலாம்.
02. ஹானர் எக்ஸ்9பி (Honor X9b): இது பிப்.15 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இது 108எம்பி மெயின் கேமரா 5800mAh பேட்டரி, 6.78-இன்ச் கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான மேஜிக்ஓஎஸ் 7.2 போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யும். இந்தியாவில் இது சுமார் ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

03, நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a): நத்திங் நிறுவனத்தின் இந்த பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போன் ஆனது பிப்ரவரி 26 முதல் 29 ஆம் தேதி வரை நடக்கவுள்ள எம்டபுள்யூசி 2024 நிகழ்வின் (MWC 2024 Event) போது அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நத்திங் போன் 2ஏ மாடலானது 50எம்பி மெயின் கேமரா + 50MP அல்ட்ரா-வைட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப், 120ஹெர்ட்ஸ் அமோஎல்இடி டிஸ்பிளே, 32எம்பி அல்லது 16எம்பி செல்பீ கேமரா, மீடியாடெக் டைமன்சிட்டி 7200 சிப்செட் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யலாம்; இது சுமார் ரூ.33,000 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.
04. ஹானர் மேஜிக் 6 சீரீஸ் (Honor Magic 6 Series) மற்றும் ஹானர் மேஜிக் வி2 (Honor Magic V2): ஹானரின் இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி 25 ஆம் தேதியன்று உலகளவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஹானர் மேஜிக் 6 ப்ரோ மாடலானது ரூ.65,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
05. ஷாவ்மீ 14 அல்ட்ரா (Xiaomi 14 Ultra): இது பிப்ரவரி 26 முதல் பிப்ரவரி 29 வரை பார்சிலோனாவில் நடைபெறும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் (MWC) 2024 நிகழ்வின் போது, உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இது ரூ.74,990 க்கு (12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்) அறிமுகம் செய்யப்படலாம்.
06. விவோ வி30 5ஜி (Vivo V30 5G): விவோ வி30 5ஜி ஸ்மார்ட்போனின் க்ளோபல் வேரியண்ட் ஆனது கூடிய விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3, 3டி கர்வ்டு டிஸ்பிளே, 12ஜிபி + 12ஜிபி விர்ச்சுவல் ரேம் போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யலாம். இது ரூ.30,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வெளியாகலாம்.
07. புதிய டெக்னோ ஸ்மார்ட்போன்கள்: இந்தியாவில் 24 புதிய டெக்னோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக டெக்னோ நிறுவனத்தின் சிஇஓ கூறி இருந்தார். அந்த 24 மாடல்களில் ஏதேனும் ஒன்று பிப்ரவரி மாதத்தில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாடல் பெயர், அம்சங்கள் மற்றும் பட்ஜெட் குறித்து எந்த தகவலும் இல்லை.
08. புதிய ஐடெல் ஸ்மார்ட்போன்கள்: டெக்னோவை போலவே ஐடெல் நிறுவனமும் தனது புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யலாம். பட்ஜெட் விலையில் சிறந்த அம்சங்களை வழங்குவதில் பெயர்போன ஐடெல் நிறுவனமானது.. என்ன மாடலை, என்ன விலைக்கு, எப்போது அறிமுகம் செய்யும் என்கிற எந்த விவரங்களையும் இன்னும் பகிரவில்லை.


Click it and Unblock the Notifications








