எல்லாம் NOKIA மயம்.. டாப் 6 பீச்சர் போன்களின் பட்டியலில் எல்லாமே நோக்கியா தான்.. இதோ லிஸ்ட்!

|

பயணங்களின் போது நம்மிடம் எவ்வளவு அருமையான ஸ்மார்ட்போன் இருந்தாலும் கூட அதன் சார்ஜ் விரைவில் தீர்ந்துவிட வாய்ப்பு உள்ளது. அதாவது கேமராக்களை அதிக நேரம் இயக்குவது, ஓடிடி-ல் படங்கள்,பாடல் கேட்பது போன்றவற்றின் மூலம் ஸ்மார்ட்போனின் சார்ஜ் சில மணி நேரங்களில் தீர்ந்துவிடும்.

பீச்சர் போனின் மிகச் சிறப்பான அம்சம்

எனவே இதுபோன்ற நேரங்களில் எப்போதுமே ஒரு பீச்சர் போனை வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதாவது பீச்சர் போனின் மிகச் சிறப்பான அம்சம் என்னவென்றால், நாள் கணக்கில் சார்ஜ் குறையாமல் பயன்படுத்த முடியும். குறிப்பாக நோக்கியா, லாவா, சாம்சங் போன்ற நிறுவனங்கள் தரமான பீச்சர் போன்களை அறிமுகம் செய்து வருகின்றன.

 பீச்சர் போன்

குறிப்பாக பயணங்களின் போது கண்டிப்பாக இதுபோன்ற பீச்சர் போன் அதிகமாக உதவும் என்றே கூறலாம். சரி இப்போது விஷயத்து வருவோம். அதாவது இந்தியாவில் வாங்கச் சிறந்த நோக்கியா பீச்சர் போன்களின் பட்டியலை இப்போது பார்ப்போம்.

நோக்கியா 105

நோக்கியா 105

பிளிப்கார்ட் தளத்தில் 105 பீச்சர் போன் மாடலை ரூ.1,299-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த போன் 800 எம்ஏஎச் பேட்டரி,32எம்பி ரேம், 32எம்பி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 1.77-இன்ச் டிஸ்பிளே, SC6531E பிராசஸர் ஆதரவைக் கொண்டுள்ளதுஇந்த அட்டகாசமான பீச்சர் போன். அதேபோல் இந்த போன் சிறந்த பேட்டரி பேக்கப் வழங்கும்.

 நோக்கியா 110

நோக்கியா 110

பிளிப்கார்ட் தளத்தில் நோக்கியா 110 பீச்சர் போனின் விலை ரூ.1730-ஆக உள்ளது. குறிப்பாக இந்த போன் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு, 1.7-இன்ச் டிஸ்பிளே, இன்-பில்ட் டார்ச், 800 எம்ஏஎச் பேட்டரி, எஃப்எம் ரேடியோ மற்றும் ப்ரீ-லோடட் கேம்களை கொண்டு வெளிவந்துள்ளது.

Samsung நிறுவனத்திடம் பட்ஜெட் விலையில் என்னென்ன 5G போன் இருக்கு: வாங்க பார்க்கலாம்.!Samsung நிறுவனத்திடம் பட்ஜெட் விலையில் என்னென்ன 5G போன் இருக்கு: வாங்க பார்க்கலாம்.!

நோக்கியா 225 4ஜி

நோக்கியா 225 4ஜி

பிளிப்கார்ட் தளத்தில் நோக்கியா 225 4ஜி மாடலை ரூ.4,030-விலையில் வாங்க முடியும். இந்த போன் Unisoc பிராசஸர் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் 2.4-இன்ச் டிஸ்பிளே, 0.3எம்பி கேமரா, 1150 எம்எஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்புஅம்சங்களை கொண்டுள்ளது. அதேபோல் இந்த போன் 4ஜி ஆதரவுடன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

நோக்கியா 5310

நோக்கியா 5310

நோக்கியா 5310 பீச்சர் போன் ஆனது டூயல் சிம் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போனை அமேசான் தளத்தில் ரூ.3499-விலையில் வாங்க முடியும். 1200 எம்ஏஎச் பேட்டரி, எம்பி3 பிளேயர், எஃப்எம் ரேடியோ ஆதரவு, 2.4-இன்ச் டிஸ்பிளே, ப்ளூடூத் 3.0 உள்ளிட்ட பல சிறப்பு
அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த நோக்கியா 5310 மாடல்.

 நோக்கியா 5710 எக்ஸ்பிரஸ் ஆடியோ

நோக்கியா 5710 எக்ஸ்பிரஸ் ஆடியோ

நோக்கியா 5710 எக்ஸ்பிரஸ் ஆடியோ மொபைல் போன் பின்புறத்தில் ஸ்லைடு-டவுன் பேனலுடன் சாதாரண தோற்றமுடைய ஒரு ஃபீச்சர் போனைப் போல் காட்சியளிக்கிறது. ஆனால் இந்த போனில் இருக்கும் டிவிஸ்ட்டே இந்த ஸ்லைடரின் பின்பக்கம் ஒளிந்துள்ளது. அதாவது இதைத் திறக்கும் போது TWS இன் ஒரு ஜோடி இயர்பட்ஸ் கருவிகள் வெளிப்படுத்துகிறது.

குறிப்பாக இந்த பீச்சர் போனை அமேசான் தளத்தில் ரூ.4998 விலையில் வாங்க முடியும். மேலும் எம்பி3 பிளேயர், வயர்லெஸ் எஃப்எம், Unisoc T107 சிப்செட், 2.4-இன்ச் QVGA டிஸ்பிளே வசதி, விஜிஏ கேமரா வசதி, 1450 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த பீச்சர் போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா 2660 பிளிப்

நோக்கியா 2660 பிளிப்

அமேசான் தளத்தில் இந்த நோக்கியா 2660 பிளிப் போனை ரூ.4,698-விலையில் வாங்க முடியும். நோக்கியா 2660 பிளிப் போன் 2.8-இன்ச் QVGA பிரைமரி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த போனில் 1.77-இன்ச் QQVGA அவுட்சைடு டிஸ்பிளே கூட உள்ளது.

நோக்கியா 2660 பிளிப் போனில் 1450 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த நோக்கியா போனில் வயர்டு மற்றும் வயர்லெஸ் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும் எஃப்எம் ரேடியோ வசதி உள்ளது. பின்பு எம்பி3 பிளேயர், புளூடூத் வி4.2, 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

Best Mobiles in India

English summary
List of top 6 best NOKIA feature mobile phone to buy in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X