Home
Mobile

அவசரப்படாதீங்க.. அடுத்த வாரம் ஆர்டர் போடுங்க.. வருகிறது 4 அட்டகாசமான 5ஜி போன்கள்.. எந்தெந்த மாடல்கள்?

தற்போது பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே தான் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு பட்ஜெட் விலையில் போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது அடுத்த வாரம் அறிமுகமாகும் 5ஜி ஸ்மார்ட்போன்களின் (Smartphones) பட்டியலை இப்போது பார்க்கலாம்.

ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G): வரும் நவம்பர் 20-ம் தேதி இந்தியாவில் ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த போன் ரூ.10,000-க்கும் குறைவான விலையில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 6.88 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன்.

அவசரப்படாதீங்க.. அடுத்த வாரம் ஆர்டர் போடுங்க.. வருகிறது 4 போன்கள்..

மேலும் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 (Snapdragon 4s Gen 2) சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 5160mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங், 128ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம், சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor), டூயல் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த ரெட்மி ஏ4 5ஜி போன் வெளிவரும்.

விவோ ஒய்300 5ஜி (Vivo Y300 5G): வரும் நவம்பர் 21-ம் தேதி இந்தியாவில் புதிய விவோ ஒய்300 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது. குறிப்பாக இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 6.67-இன்ச் E4 அமோலெட் டிஸ்பிளே (E4 AMOLED display) வசதி கொண்டுள்ளது விவோ ஒய்300 5ஜி.

அதேபோல் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 (Snapdragon 4 Gen 2) சிப்செட், 5000mAh பேட்டரி, 50எம்பி டூயல் ரியர் கேமரா, 32எம்பி செல்பி கேமரா, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட வசதிகளுடன் இந்த விவோ ஒய்300 5ஜி போன் வெளிவரும்.

விவோ எக்ஸ்200 ப்ரோ (Vivo X200 Pro):சீனாவில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட விவோ எக்ஸ்200 (Vivo X200) மற்றும் விவோ எக்ஸ்200 ப்ரோ (Vivo X200 Pro) போன்கள் வரும் நவம்பர் 19-ம் தேதி உலக சந்தையிலும் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கும்.

அவசரப்படாதீங்க.. அடுத்த வாரம் ஆர்டர் போடுங்க.. வருகிறது 4 போன்கள்..

200எம்பி கேமரா, 6000mAh பேட்டரி, 90W சார்ஜிங்,ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9400 (Dimensity 9400 SoC) சிப்செட், 6.78-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன இந்த அசத்தலான விவோ எக்ஸ்200 (Vivo X200) மற்றும் விவோ எக்ஸ்200 ப்ரோ (Vivo X200 Pro) போன்கள்.

அசுஸ் ஆர்ஓஜி போன் 9 (ASUS ROG Phone 9): வரும் நவம்பர் 21-ம் தேதி அசுஸ் ஆர்ஓஜி போன் 9 அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த போன் 6.79-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே, 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், 32எம்பி செல்பி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite chipset) சிப்செட், 5800எம்ஏஎச் பேட்டரி, 68W சார்ஜிங் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும்.

photo credit: redmi, digit.in, mobiledokan, Android Headlines

Best Mobiles in India

English summary
List of Smartphones Launching Next Week: Redmi A4 5G, Vivo Y300 5G And More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X