Home
Mobile

இந்த Samsung போன்கள் உங்ககிட்ட இருக்கா? அப்போ 2025 ஆம் ஆண்டுடன் கதை முடிஞ்சது.. Software சப்போர்ட் கிடைக்காது!

புத்தம் புதிய ஜி சீரீஸ் ஸ்மார்ட்போன் (Galaxy G Fold), முதல் ட்ரை ஃபோல்ட் ஸ்மார்ட்போன் (Tri Fold Smartphone) மற்றும் "வழக்கம் போல" பல எண்ணிக்கையிலான பட்ஜெட், மிட்ரேன்ஜ் போன்களின் அறிமுகம் என.. இந்த 2025 ஆம் ஆண்டானது சாம்சங் (Samsung) நிறுவனத்திற்கும், அதன் ரசிகர்களுக்கும் ஒரு "ரோலர் கோஸ்டர் இயர்" ஆக இருக்க போகிறது!

இதே போல சாம்சங்கின் சாஃப்ட்வேர் சப்போர்ட்-ஐ (Samsung Software Support) இழக்கும் ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கையும் இந்தாண்டு ஏராளமாக உள்ளன. அப்படியாக 2025 ஆம் ஆண்டு உடன் சாம்சங் நிறுவனத்திடம் இருந்து மென்பொருள் ஆதரவை இழக்கும் அனைத்து கேலக்ஸி போன்களின் பட்டியல் (Samsung Galaxy Phones End Software Support in 2025) இதோ:

Samsung: 2025 ஆண்டுடன் கதை முடிஞ்சது.. Software சப்போர்ட் கிடைக்காது!

பொதுவாகவே சாம்சங் நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன்களுக்கு, குறிப்பாக பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு (Flagship Smartphones) மிக நீண்ட கால மென்பொருள் ஆதரவை வழங்குகிறது. மிகவும் சமீபத்தில் அறிமுகமான கேலக்சி எஸ்25 சீரீஸ் (Galaxy S25 Series) ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும், ஏனெனில் இந்த சீரீஸ் 7 வஸ்மார்ட்போன்களுக்கு 7 வருடங்களுக்கு ஓஎஸ் அப்டேட் கிடைக்கும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது சாம்சங் கேலக்ஸி எஸ்25 (Galaxy S25), சாம்சங் கேலக்ஸி எஸ்25 பிளஸ் (Galaxy S25 Plus) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Galaxy S25 Ultra) 3 ஆகாய ஸ்மார்ட்போன்களை 2032 ஆம் ஆண்டு வரை ஒன் யுஐ அல்லது ஆண்ட்ராய்டு அப்டேட்களை (One UI or Android Updates) பெறும் என்று அர்த்தம்.

ஆனால் ஒருமுறை இந்த வாக்குறுதிகளுக்கான காலம் முடிந்ததும், தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு மென்பொருள் அப்டேட்களை அனுப்பாது. புதிதாக அறிமுகமான அம்சங்களை உள்ளடக்கிய ஓஎஸ் அப்டேட்டை அல்லது புதிய மாடல்களுக்கான திறன்களை வழங்கும் ஓஎஸ் அப்டேட்களை சற்றே பழைய மாடல்களுக்கு அனுப்புவதில் உள்ள சிக்கல்கள் காரணமாகவே எல்லா நிறுவனங்களும் சாஃப்ட்வேர் சப்போர்ட்-ஐ நிறுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளன.

சரி ​​2025 ஆம் ஆண்டில் எந்தெந்த சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் சாஃப்ட்வேர் சப்போர்ட்-ஐ இழக்கின்றன?
சாம்சங் கேலக்ஸி ஏ02எஸ் (Samsung Galaxy A02s)
சாம்சங் கேலக்ஸி ஏ12 (Samsung Galaxy A12)
சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி (Samsung Galaxy S20 FE 5G)
சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ (Samsung Galaxy S20 FE)

சாம்சங் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா 5ஜி (Samsung Galaxy S20 Ultra 5G)
சாம்சங் கேலக்ஸி எஸ்20 (Samsung Galaxy S20 Ultra)
சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் 5ஜி (Samsung Galaxy S20 Plus 5G)
சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் (Samsung Galaxy S20 Plus)
சாம்சங் கேலக்ஸி எஸ்20 5ஜி (Samsung Galaxy S20 5G)
சாம்சங் கேலக்ஸி எஸ்20 (Samsung Galaxy S20)

இந்த பட்டியலில் சாம்சங் கேலக்ஸி டபுள்யூ21 5ஜி (Samsung Galaxy W21 5G) மாடலும் அடக்கம். இது சீனாவில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 2 5ஜி (Samsung Galaxy Z Fold 2 5G) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆகும். நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டன.

இவைகளில் சாம்சங் கேலக்ஸி ஏ02எஸ், சாம்சங் கேலக்ஸி ஏ12 மற்றும் சாம்சங் கேலக்ஸி டபுள்யூ21 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே ஜனவரி 2025 உடன் மென்பொருள் ஆதரவை இழந்துவிட்டன. மீதமுள்ளது சாம்சங் கேலக்ஸி எஸ்20 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் மட்டுமே. இந்த ஸ்மார்ட்போன்களுக்கான சாஃப்ட்வேர் சப்போர்ட் முடிய இன்னும் சிறிது காலம் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
List of Samsung Galaxy Smartphones Whose One UI Android Software Support Ends in 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X