Home
Mobile

இந்த லிஸ்ட்ல இருக்குற Samsung உங்ககிட்ட இருக்கா.. அப்போ ஏப்.14 - 24 குள்ள ரெடியா இருங்க!

சாம்சங் (Samsung) நிறுவனம், கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஒன் யுஐ 7 ஸ்டேபிள் அப்டேட்டை (Android 15 based One UI 7 stable update) வெளியிடத் தொடங்கி உள்ளதாக தெரிவித்து உள்ளது. முன்னதாக ஐரோப்பாவில் கேலக்ஸி எஸ்24 சீரீஸிற்கான ஒன் யுஐ 7-யின் ஸ்டேபிள் பில்ட்-ஐ வெளியிட்டது. இப்போது மற்ற பழைய சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு எப்போது ஒன் யுஐ 7 ஸ்டேபிள் அப்டேட் கிடைக்கும் என்கிற விவரங்கள் (தேதிகள்) வெளியாகியுள்ளது.

ஏப்ரல் 14: சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் (Samsung Galaxy S24 Series), சாம்சங் கேலக்ஸி எஸ்23 சீரீஸ் (Samsung Galaxy S23 Series), சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 6 (Samsung Galaxy Z Fold 6), சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 6 (Samsung Galaxy Z Flip 6), சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 5 (Samsung Galaxy Z Fold 5), சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 5 (Samsung Galaxy Z Flip 5) ஆகிய மாடல்களுக்கு ஒன் யுஐ 7 ஸ்டேபிள் அப்டேட் கிடைக்கும்.

Samsung அப்டேட்: ஏப்.14 - 24 குள்ள ரெடியா இருங்க!

ஏப்ரல் 23: சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ (Samsung Galaxy S24 FE) மாடலுக்கு ஒன் யுஐ 7 ஸ்டேபிள் அப்டேட் கிடைக்கும்
ஏப்ரல் 24: சாம்சங் கேலக்ஸி எஸ்23 எப்இ (Samsung Galaxy S23 FE), சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரீஸ் (Samsung Galaxy S21 Series) சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ, Samsung Galaxy S21 FE), சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 4 (Samsung Galaxy Z Fold 4), சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 4 (Samsung Galaxy Z Flip 4) ஆகிய மாடல்களுக்கு ஒன் யுஐ 7 ஸ்டேபிள் அப்டேட் கிடைக்கும்

ஏப்ரல் 28: கேலக்ஸி எஸ்22 சீரீஸ் (Samsung Galaxy S22 Series), சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 3 (Samsung Galaxy Z Fold 3), சாம்சங் கேலக்ஸி இஸட் பிளிப் 3 (Samsung Galaxy Z Flip 3) ஆகிய மாடல்களுக்கு ஒன் யுஐ 7 ஸ்டேபிள் அப்டேட் கிடைக்கும். இந்த அட்டவணை வியட்நாமுக்கான அட்டவணை என்பதை என்பதை நினைவில் கொள்ளவும், மற்ற பிராந்தியங்களில் உள்ள சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கான வெளியீடு சற்று மாறுபடலாம்.

ஒன் யுஐ7 அப்டேட்-ஐ எவ்வாறு பதிவிறக்குவது? உங்கள் ஸ்மார்ட்போனிற்கு ஒன் யுஐ7 அப்டேட் வந்துள்ளதா என்பதை சரிபார்க்க, செட்டிங்ஸ் > சாஃப்ட்வேர் அப்டேட் > டவுன்லோட் மற்றும் இன்ஸ்டால் என்பதற்கு செல்லவும். உங்கள் மாடலுக்கு அப்டேட் வந்து இருந்தால், அது தானாகவே பதிவிறக்க தொடங்கும். அப்டேட் செய்ய தொடங்குவதற்கு முன் உங்கள் ஸ்மார்ட்போன் வைஃபை உடன் இணைக்கப்பட்டு, போதுமான பேட்டரி அள்வு கொண்டு உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும்.

சமீபத்தில் சாம்சங் நிறுவனம் சாம்சங் ஸ்மார்ட் டிவிகள் மற்றும் மானிட்டர்களை கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் தற்போது எச்டிஆர் 10 பிளஸ் (HDR10+) ஃபார்மெட்டின் கீழ், நெட்பிளிக்ஸ் நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை பார்க்கலாம் என்று சாம்சங் நிறுவனம் அறிவித்து இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவுடன் உடன், சாம்சங் மற்றும் மானிட்டர் வாடிக்கையாளர்கள் அதிக காண்ட்ராஸ்ட் (richer contrast), ஆழமான கலர்கள் (deeper colours) மற்றும் ஈர்க்கக்கூடிய விஷூவல் டெப்த்-ஐ (impressive visual depth) காண முடியும் என்று சாம்சங் தெரிவித்து உள்ளது.

நெட்பிளிக்ஸ் கன்டென்ட்டிற்க்கான எச்டிஆர் 10 பிளஸ் வியூவிங் ஃபார்மெட் ஆனது 2025 சாம்சங் நியோ க்யூஎல்இடி (Samsung Neo QLED), ஓஎல்இடி (OLED) மற்றும் லைஃப்ஸ்டைல் (Lifestyle) மாடல்களிலும், 2024 மற்றும் 2025 மானிட்டர் மாடல்களிலு அணுக கிடைக்கும் என்றும், வரவிருக்கும் டிவி மாடல்களும் இதை ஆதரிக்கும் என்றும் சாம்சங் உறுதிப்படுத்தி உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
List of older Samsung Galaxy Phones will receive One UI 7 stable update From April 14 to April 28
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X