Home
Mobile

மே மாசம் சும்மா களைகட்ட போகுது.. வரிசைகட்டும் 5 புது போன்கள்.. OnePlus, Google, Realme-னு எல்லாமே ரெடி!

ஏப்ரல் மாதமே இன்னும் முடிவடையவில்லை, அதற்குள் அடுத்த மாதத்தில் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் என்கிற பட்டியல் தயாராகி விட்டது போல் தெரிகிறது. அப்படியாக ரியல்மி தொடங்கி கூகுள் வரையிலாக மே 2023 இல் மொத்தம் 5 புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

ரியல்மி 11 ப்ரோ மற்றும் ரியல்மி 11 ப்ரோ பிளஸ்: இந்த 2 புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகமும் இந்த ஆண்டு மே மாதத்தில் நடக்குமென்று ரியல்மி (Realme) நிறுவனமே உறுதிப்படுத்தி விட்டதால், வாங்கினால் ரியல்மி போன்களை தான் வாங்குவேன் என்பவர்கள், நம்பி காத்திருக்கலாம்!

வரிசைகட்டும் 5 புது போன்கள்.. OnePlus, Google, Realme-னு எல்லாமே ரெடி!

இந்த இரண்டுமே நிறுவனத்தின் மிட்-ரேஞ்ச் போன்களாக (Mid-range Phones) இருக்கும் கூடவே புதிய மீடியாடெக் டைம்சிட்டி 7000 சிப்செட்டை (Mediatek Dimensity 7000 SoC) பேக் செய்யும். குறிப்பாக ரியல்மி 11 ப்ரோ பிளஸ் மாடலில் 200எம்பி மெயின் கேமரா இடம்பெறுமென்று கூறப்படுகிறது.

மேலும் இந்த ப்ரோ பிளஸில் 6.7 இன்ச் எஃப்எச்டி+ அமோஎல்இடி டிஸ்ப்ளே, 16எம்பி செல்பீ கேமரா, 80W அல்லது 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களையும் கொண்டிருக்கலாம். மறுகையில் உள்ள ப்ரோ மாடலானது 108எம்பி கேமரா, 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடனான 5000mAh பேட்டரி இடம்பெறலாம்.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை ரியல்மி 11 ப்ரோ பிளஸ் (Realme 11 Pro Plus) ரூ.34,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். அடுத்ததாக உள்ள ரியல்மி 11 ப்ரோவானது (Realme 11 Pro) ரூ.28,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம். இருப்பினும் சரியான அறிமுக தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

கூகுள் பிக்சல் 7ஏ: இந்த பட்டியலில் மூன்றாவதாக உள்ள ஸ்மார்ட்போன் பிக்சல் 7ஏ (Pixel 7a). இது வருகிற மே 10 ஆம் தேதியன்று நடக்கும் அன்று கூகுளின் ஐ/ஓ நிகழ்வில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவொரு உலகளாவிய அறிமுகமாக இருக்குமென்றும் கூறப்படுகிறது.

அம்சங்களை பொறுத்தவரை, இது பிக்சல் 6ஏ (Pixel 6a) ஸ்மார்ட்போனை விட பெரிய அளவிலான மேம்படுத்தல்களை பெறலாம். உதாரணத்திற்கு பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனில் சற்றே பெரிய பேட்டரி, 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, கூகுளின் புதிய சிப்செட் மற்றும் சிறந்த பின்புற கேமரா செட்டப் இடம்பெறலாம்.

ஆனால் பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் பழையதை விட மிகவும் அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கிடைக்கப்பெற்ற தஃவளின்பொடி, பிக்சல் 6ஏ உடன் ஒப்பிடும்போது பிக்சல் 7ஏ ஸ்மார்ட்போனின் விலையானது சுமார் ரூ.7000 அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு ரூ.50,999 க்கு வெளியாகலாம்!

கூகுள் பிக்சல் ஃபோல்ட்: இந்த பட்டியலில் நான்காவதாக இருப்பது கூகுளின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான பிக்சல் ஃபோல்ட் (Google Pixel Fold). இதுவும் வருகிற மே 10 ஆம் தேதி நடக்கும் கூகுள் ஐ/ஓ நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்சங்களை பொறுத்தவரை, இதன் 5.8 இன்ச் டிஸ்பிளேவானது மடிந்திருக்கும் போது 7.6-இன்ச் டிஸ்பிளேவாக விரிவடையும். மேலும் இது டென்சர் ஜி2 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். இதன் ஆரம்ப விலை, இந்திய மதிப்பின்படி சுமார் ரூ.1,39,830 ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 4-ஐ விட குறைவாக இருக்கலாம்

ஒன்பிளஸ் நோர்ட் 3: இந்த பட்டியலில் நாம் கடைசியாக பார்க்க உள்ளது ஒன்பிளஸ் நோர்ட் 3 (OnePlus Nord 3). இது மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படலாம். இதுவொரு மிட்ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும். இது, இந்த ஆண்டு அறிமுகமாகும் பெஸ்ட் நோர்ட் சீரீஸ் போனாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

அம்சங்களை பொறுத்தவரை, 4,500mAh அல்லது 5,000mAh பேட்டரி, 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான FHD+ AMOLED டிஸ்பிளே, ஓஐஎஸ் (OIS) ஆதரவுடனான ட்ரிபிள் கேமரா செட்டப் போன்றவைகளை பேக் செய்யலாம். விலையை பொறுத்தவரை, ரூ.27,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
list of new smartphones could launching in may 2023 including google pixel fold and oneplus nord 3
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X