Amazon பிரைம் டே சேல்.. ரெட்மி முதல் சாம்சங் வரை.. முதல் முறையாக விற்பனைக்கு வரும் போன்கள்.. இதோ லிஸ்ட்..
அமேசான் பிரைம் டேஸ் சேல் (Amazon Prime Day sale) எனும் சிறப்பு விற்பனை வரும் ஜூலை 20-ம் தேதி தொடங்குகிறது. குறிப்பாக இந்த அமேசான் சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன், டிவி, டேப்லெட், லேப்டாப், ஸ்பீக்கர்கள் எனப் பல்வேறு சாதனங்களையும் கம்மி விலையில் வாங்க முடியும். அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது புதிய ஸ்மார்ட்போனை முதல் முறையாக விற்பனைக்கு கொண்டுவர இருக்கிறது.
அதாவது வரும் நாட்களில் சாம்சங் கேலக்ஸி எம்35, ஒன்பிளஸ் நோர்ட் 4, ஹானர் 200 சீரிஸ், ரெட்மி 13 5ஜி, ஐக்யூ இசட்9 லைட், லாவா பிளேஸ் எக்ஸ் போன்ற போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அமேசான் (Amazon) தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த போன்கள் வங்கி சலுகைகளுடன் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போன்கள் குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.

ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G): இந்தியாவில் ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஜூலை 9-ம் தேதி அதாவது நாளை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த போன் அமேசான் பிரைம் டே விற்பனையில் முதல் முறையாக விற்பனைக்கு கொண்டுவரும். குறிப்பாக இந்த ரெட்மி போன் ஆனது ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட், 108எம்பி கேமரா, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் விற்பனைக்கு வரும்.
ஐக்யூ இசட்9 லைட் 5ஜி ( iQOO Z9 Lite 5G): இந்தியாவில் ஐக்யூ இசட்9 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஜூலை 15-ம் தேதி அறிமுகம் செய்யப்படும். இந்த போனும் அமேசான் சிறப்பு விற்பனையில் வாங்க கிடைக்கும். குறிப்பாக இந்த போன் 6.56-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே, மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட், 50எம்பி பிரைமரி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட அம்சங்களுடன் மலிவு விலையில் வெளிவரும்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் (OnePlus Nord CE4 Lite): இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட் ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஜூலை 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த ஒனிபிளஸ் போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும். குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 லைட்போன் உடன் ஒன்பிளஸ் பேட் 2 எனும் டேப்லெட், ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 ப்ரோ, ஒன்பிளஸ் வாட்ச் 2ஆர் உள்ளிட்ட சாதனங்களும் அறிமுகம் செய்யப்படும்.
ஹானர் 200 சீரிஸ் (Honor 200 series): இந்தியாவில் ஹானர் 200 சீரிஸ் போன்கள் வரும் ஜூலை 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த போன்களும் அமேசான் சிறப்பு விற்பனையில் முதல்முறையாக விற்பனைக்கு வரும். குவாட்-கர்வ் டிஸ்ப்ளே, 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஹானர் போன்கள்.
லாவா பிளேஸ் எக்ஸ் (Lava Blaze X): இந்தியாவில் லாவா பிளேஸ் எக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஜூலை 10-ம் தேதி அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போன் கூட அமேசான் சிறப்பு விற்பனையில் முதல் முறையாக விற்பனைக்கு வரும். மேலும் 64எம்பி டூயல் ரியர் கேமரா டைமன்சிட்டி 7050 சிப்செட், 256ஜிபி மெமரி மற்றும் பல சிறபபான அம்சங்களுடன் ரூ.15,000 பட்ஜெட்டில் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்35 (Samsung Galaxy M35): இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஜூலை 17-ம் தேதி அறிமுகம் செய்யப்படும். இந்த போனும் அமேசான் பிரைம் டே விற்பனையில் முதல் முறையாக விற்பனைக்கு வரும். குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எம்35 ஸ்மார்ட்போன் ஆனது 6000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது.
அதேபோல் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே (Super AMOLED Infinity-O Display), ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380 Mobile) சிப்செட், 50எம்பி பிரைமரி கேமரா, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட் அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி எம்35 விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








