அப்படி போடு.. Android 15 அப்டேட் பெறும் மோட்டோரோலா போன்கள்.. உற்சாகத்தில் பயனர்கள்..
சாம்சங், விவோ, சியோமி நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது மோட்டோரோலா நிறுவனம். குறிப்பாக மோட்டோரோலா(Motorola) நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் போன்களை அறிமுகம் செய்வதால் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சில மோட்டோரோலா போன்கள் ஆண்ட்ராய்டு 15 (Android 15) அப்டேட் பெற தொடங்கியுள்ளது.
அதாவது gizmochina இணையதளம் ஆண்ட்ராய்டு 15 அப்டேட் பெறும் சில மோட்டோரோலா போன்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்போது ஆண்ட்ராய்டு அப்டேட் பெறும் மோட்டோரோலா போன்களின் பட்டியலை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

1.மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் (Motorola Edge 50 Fusion)
2.மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா (Motorola Edge 50 Ultra)
3.மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro)
4.மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ (Motorola Edge 50 Neo)
5.மோட்டோரோலா மோட்டோ ஜி பவர் 5ஜி 2024 (Motorola Moto G Power 5G 2024)
தற்போது மேலே உள்ள மோட்டோரோலா போன்களுக்கு ஆண்ட்ராய்டு 15 அப்டேட் கிடைக்கத் தொடங்கியுள்ளன. விரைவில் இன்னும் பல மோட்டோரோலா போன்களுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது ஆண்ட்ராய்டு 15 அப்டேட் பெற்றுள்ள மோட்டோரோலா போன்களில் பல்வேறு புதிய அம்சங்களை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களைப் பார்க்கலாம்.
மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ அம்சங்கள் (Motorola Edge 50 Neo Specifications): 50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன். பின்பு 3X ஆப்டிகல் ஜூமிங் (Optical Zoom) ஆதரவு கொண்டுள்ளன இந்த ரியர் கேமராக்கள்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன். பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன. அதேபோல் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவு கொண்ட டூயல் ஸ்பீக்கர்கள் (Dual speakers) கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ சாதனம்.
6.4-இன்ச் 1.5கே பிஒஎல்இடி டிஸ்பிளே (pOLED display) உடன் இந்த புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன் வெளிவந்தது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (3000 nits peak brightness), கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 புரொடெக்சன் (Gorilla Glass 3 protection) உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்கள் இதில் உள்ளன.
மீடியாடெக் டைமன்சிட்டி 7300 (Mediatek Dimensity 7300 chipset) சிப்செட் உடன் இந்த மோட்டோரோலா போன் வெளிவந்தது. IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் (Water and dust resistant) உடன் மோட்டோரோலா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது.
மேலும் MIL-STD 810H சான்றிதழ் பெற்றுள்ளது இந்த போன்.

4310mAh பேட்டரி உடன் இந்த மோட்டோரோலா போன் அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ போன்.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.19,999 விலையில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








