Home
Mobile

iPhone வாங்குற ஆசையில் மண்ணள்ளி போட்ட Apple.. விரைவில் இந்த 4 ஐபோன்களும் வாங்க கிடைக்காதாம்! ஏன்?

ஒவ்வொரு ஆண்டும் புதிய ஐபோன் (New iPhone) மாடல்கள் அறிமுகமானதும், பழைய ஐபோன்களின் விலைகள் தாறுமாறாக குறைக்கப்படும்.. அந்த நேரம் பார்த்து ஒரு நல்ல ஐபோன் மாடலை வாங்கி விடலாம் என்கிற எண்ணம் உங்களிடம் இருந்தால்.. அதை இப்போதே குழித்தோண்டி புதைத்து விடுங்கள்!

ஏனென்றால் 2023 ஆம் ஆண்டிற்கான ஐபோன்கள் (2023 iPhones) அறிமுகமானதும், அதாவது புதிய ஐபோன் 15 சீரீஸ் (iPhone 15 Series) அறிமுகமானதும், மிகவும் பிரபலமான மற்றும் சற்றே பழைய 6 ஐபோன் மாடல்கள் 'டிஸ்கன்ட்டினியூ' (Discontinue) செய்யப்படலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இந்த 4 ஐபோன்களும் வாங்க கிடைக்காதாம்!

ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸின் அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மொத்தம் 4 புதிய மாடல்கள் அறிமுகமாகும்: ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (அல்லது ஐபோன் 15 ப்ரோ அல்ட்ரா).

இதற்கிடையில் டாம்ஸ் கைட்டின் புதிய அறிக்கையானது, ஐபோன் 15 சீரீஸ் அறிமுகமானதும், குறைந்தது 4 ஐபோன்களின் தயாரிப்பு நிறுத்தப்படலாம். அதாவது ஐபோன் 15 சீரீஸின் வெளியீட்டிற்கு பிறகு ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 மினி 'டிஸ்கன்ட்டினியூ' செய்யப்படலாம்.

நினைவூட்டும் வண்ணம், ​​ஆப்பிள் நிறுவனமானது தற்போது அதிகாரப்பூர்வமாக ஐபோன் 14 சீரீஸ், ஐபோன் 13 மற்றும் ஐபோன் 13 மினி, ஐபோன் 12 மற்றும் ஐபோன் எஸ்இ (2022) ஆகியவற்றை விற்பனை செய்கிறது. மேற்குறிப்பிட்ட 4 மாடல்களும் டிஸ்கன்ட்டினியூ செய்யப்படும் பட்சத்தில், ஐபோன் 13, ஐபோன் எஸ்இ (2022), ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மட்டுமே மீதமிருக்கும்.

கடந்த ஆண்டு ஐபோன் 14 சீரீஸ் (iPhone 14 Series) அறிமுகமான போதும் கூட, ஆப்பிள் நிறுவனம் இதேபோன்ற உத்தியை பின்பற்றியதால்.. நாம் இங்கே பேசும் ஊகங்கள், உண்மையாக அதிக வாய்ப்புள்ளது. மேலும் புதியவற்றின் விற்பனையை அதிகரிக்க பழைய ஜெனரேஷன் ப்ரோ மாடல்களை ஆப்பிள் கைவிடுவதொன்றும் புதிதும் அல்ல.

ஒருவேளை, பழைய ஐபோன்கள் டிஸ்கன்ட்டினியூ செய்யப்படாத பட்சத்தில், அவைகள் 100 அமெரிக்க டாலர்கள் வரையிலான விலைக்குறைப்பை சந்திக்கலாம். அதாவது இந்திய மதிப்பின்படி ரூ,10,000 வரையிலாக விலை குறைக்கப்படலாம். இந்த இரண்டில் எது நடக்கும், எது நடக்காது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதற்கிடையில் வருகிற ஜூன் 5 ஆம் தேதி தொடங்கவுள்ள டபுள்யூடபுள்யூடிசி 2023 (WWDC 2023) நிகழ்வில், ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மிக்ஸடு-ரியாலிட்டி ஹெட்செட்டை (Mixed-reality headset) அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நிகழ்வில் ஆப்பிள் அதன் சொந்த எஸ்ஓசி-களை பேக் செய்யும் புதிய மேக்களை காட்சிப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
list of iphones which may get discontinued after apple iphone 15 launched officially
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X