என்னது ரூ.13,600-ஆ.. எந்தெந்த நாடுகளில் iPhone 15 விலை இந்தியாவை விட கம்மியா இருக்கு?
கடந்த செப்.12 ஆம் தேதி ஐபோன் 15 சீரிஸ் (iPhone 15 Series) அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டன. எப்போதும் போல, இம்முறையும் கூட "கிட்னியை விற்றால் தான் ஐபோன் வாங்க முடியும் போலயே" என்கிற மீம்ஸ்கள் பறக்கும் அளவிற்கு, புதிய ஐபோன்களின் விலை நிர்ணயங்கள் "தக்கவைக்கப்பட்டு" உள்ளன.
அதாவது "அதிர்ஷ்டவசமாக" ஆப்பிள் நிறுவனத்தின் பேஸிக் ஐபோன் 15 மாடலின் விலையானது கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 14 (iPhone 14) மாடலின் அறிமுக விலையுடன் ஒற்றுப்போகிறது. ஆனால் இதனுடன் அறிமுகமான ப்ரோ மாடல்கள் கணிசமான விலை அதிகரிப்பை கண்டுள்ளன.

எடுத்துக்காட்டாக, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max) இப்போது அமெரிக்காவில் $100 அதிகமாகவும், இந்தியாவில் ரூ.20,000 விலை உயர்ந்ததாகவும் உள்ளது. ப்ரோ மாடல் மீதெல்லாம் உங்களுக்கு கவனம் இல்லை.. மிகவும் பட்ஜெட் விலையில் வாங்க கிடைக்கும் ஐபோன் 15 மீதுதான் உங்களுடைய முழு கவனமும் என்றால்.. இந்த கட்டுரை முழுக்க-முழுக்க உங்களுக்கானது தான்!
ஏனென்றால், எந்தெந்த நாடுகளில் ஐபோன் 15 மாடலானது மிகவும் மலிவான விலைக்கு கிடைக்கிறது? அதாவது இந்தியாவில் கிடைப்தை விட எங்கே குறைவான விலைக்கு வாங்க கிடைக்கிறது? என்பதை பற்றித்தான் நாம் இங்கே விரிவாக பார்க்க உள்ளோம்.
அமெரிக்காவில் ஆப்பிள் ஐபோன் 15 மாடலின் விலை (iPhone 15 Price in US): அமெரிக்காவில் ஐபோன் 15 மாடலின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை, அதாவது 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரும் மாடலின் விலை 999 அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்த தொகையை அப்படியே இந்திய ரூபாயாக மாற்றினால் ரூ.66,208 ஆக இருக்கும்.
சீனாவில் ஆப்பிள் ஐபோன் 15 மாடலின் விலை (iPhone 15 Price in China): சீனாவில் ஐபோன் 15 மாடலின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை, அதாவது 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரும் மாடலின் விலை ஆர்எம்பி 5,999 ஆகும். இந்த தொகையை அப்படியே இந்திய ரூபாயாக மாற்றினால் ரூ.69,124 ஆக இருக்கும்.
தாய்லாந்தில் ஆப்பிள் ஐபோன் 15 மாடலின் விலை (iPhone 15 Price in Thailand): தாய்லாந்தில் ஐபோன் 15 மாடலின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை, அதாவது 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரும் மாடலின் விலை 32,900 தாய் பாட் ஆகும். இந்த தொகையை அப்படியே இந்திய ரூபாயாக மாற்றினால் ரூ.76,472 ஆக இருக்கும்.
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் 15 மாடலின் விலை (iPhone 15 Price in India): ஐபோன் 15 மாடலின் பேஸிக் 128 ஜிபி ஸ்டோரேஜுன் விலை நிர்ணயம் ரூ 79,900 ஆகும். அதாவது அப்படியே ரூபாய் மதிப்பின்படி பார்த்தால் அமெரிக்க சந்தையை விட ரூ.13,692 அதிகம், சீன சந்தையை விட ரூ.10,776 அதிகம் மற்றும் தாய்லாந்து சந்தையை விட ரூ.3428 அதிகமாகும்.
ஐபோன் 15 மாடலின் மற்ற ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, 256 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் ஐபோன் 15 ரூ.89,900 க்கும் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் ஐபோன் 15 ரூ.1,09,900 க்கும் வாங்க கிடைக்கும். அனைத்து ஐபோன் 15 சீரீஸ் மாடல்களின் முன்பதிவுகளும் ஏற்கனவே தொடங்கிவிட்டன; ஷிப்பிங் செப்.22 முதல் தொடங்கும்
நினைவூட்டும் வண்ணம் ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus) மாடலின் இந்திய விலை நிர்ணயம் ரூ 89,900 க்கும், ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) ரூ.1,34,900, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ரூ.1,59,900 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ப்ரோ மேக்ஸ் மாடலின் 1டிபி ஸ்டோரேஜுன் விலை ரூ.1,99,900 ஆகும். ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் ஒன்று முதல் முறையாக ரூ.2 லட்சம் என்கிற புள்ளியை தொடுவது, இதுவே முதல் முறையாகும்.


Click it and Unblock the Notifications








