இதுக்குலாம் தனி தைரியம் வேணும்.. Best Selling போன்கள் மீது இவ்ளோ பெரிய ஆஃபர்-ஆ.. அடிச்சு தூக்கும் Amazon!
வழக்கமாக விலை போகாத மற்றும் சரியான விற்பனை ஆகாத "மொக்கை ஸ்மார்ட்போன்கள்" மீது தான் அபாரமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்படும். ஆனால் அமேசான் வலைத்தளமோ அதன் கிரேட் சம்மர் (Amazon Great Summer) விற்பனையில் ஒரு தைரியமான வேலையை பார்த்துள்ளது.
அமேசான் நிறுவனமானது தனது இ-காமர்ஸ் வலைத்தளத்தின் கீழ் வாங்க கிடைக்கும் டாப் ரேட்டிங் (Top Rating) மற்றும் பெஸ்ட் செல்லிங் (Best Selling) ஸ்மார்ட்போன்களின் மீது.. அதாவது விற்பனையில் பட்டையை கிளப்பும் டாப் ஸ்மார்ட்போன்கள் மீது நம்ப முடியாத ஆஃபர்களை அறிவித்து வாடிக்கையாளர்களை திக்குமுக்காட வைத்து வருகிறது.

அப்படியாக, வருகிற மே 8 ஆம் தேதி வரை நடக்கும் அமேசான் கிரேட் சம்மர் சேலின் போது ஐபோன் 14 (iPhone 14) முதல் ரெட்மி ஏ1 (Redmi A1) வரையிலாக எந்தெந்த டாப் ரேட்டிங் ஸ்மார்ட்போன்கள் மீது என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்கிற பட்டியல் இதோ.
ஐபோன் 14 (iPhone 14): பிளாட் தள்ளுபடியை பொறுத்தவரை இது ரூ.79,900 க்கு பதிலாக ரூ.66,999 க்கு வாங்க கிடைக்கும். ஒருவேளை அமேசான் கிரேட் சம்மர் சேல் 2023-யின் கீழ் கிடைக்கும் வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேன்ஜ் தள்ளுபடி உட்பட அனைத்து ஆஃபர்களையும் பயன்படுத்தினால் ஐபோன் 14 மாடலை வெறும் ரூ.39,293 வாங்க முடியும்.
ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி (OnePlus 11R 5G): கடந்த பிப்ரவரியில் ரூ.39,999 க்கு அறிமுகமான ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போனை இந்த அமேசான் கிரேட் சம்மர் சேலின் போது ரூ.38,999 க்கு (ஐசிஐசிஐ, கோடக் பேங்க் சலுகைகள் உட்பட) வாங்க முடியும். எக்ஸ்சேன்ஜ் ஆஃபரை பொறுத்தவரை ரூ.25,000 வரை கிடைக்கும். அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் ரூ.1,999 என்கிற கேஷ்பேக்கையும் பெறலாம்.
ஐக்யூ நியோ 7 5ஜி (iQoo Neo 7 5G): அமேசான் விற்பனையின் போது, ஐக்யூ நியோ 7 5ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ. 27,999 ஆக (வங்கி தள்ளுபடிகள் உட்பட) இருக்கும். நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.29,999 ஆகும். எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியை பொறுத்தவரை ரூ.25,000 வரை கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பம் ரூ.4833 முதல் தொடங்குகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்53 5ஜி (Samsung Galaxy M53 5G): இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது: 6ஜிபி + 128ஜிபி - ரூ.26,499 மற்றும் 8ஜிபி + 128ஜிபி - ரூ. 28,499. தற்போது இந்த இரண்டும் முறையே ரூ.21,999 மற்றும் ரூ.23,999 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.
ஒன்பிளஸ் நோர்ட் சி 2 லைட் 5ஜி (OnePlus Nord CE 2 Lite 5G): அமேசான் சம்மர் சேலின் போது ஒன்பிளஸ் நோர்ட் சி 2 லைட் 5ஜி ஸ்மார்ட்போனை ரூ18,499 க்கு வாங்க முடியும். கூடுதலாக நீங்கள் வங்கி தள்ளுபடிகளை பயன்படுத்தும் பட்சத்தில் மேலும் ரூ.1,000 என்கிற தள்ளுபடி கிடைக்கும்.
ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி (Realme Narzo 50 Pro 5G): இது கடந்த ஆண்டு மே மாதம் ரூ.21,999 என்கிற ஆரம்ப விலையின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது அமேசான் விற்பனையில் ரூ.17,499 க்கு வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் மீது கிரெடிட் கார்டு தள்ளுப்படு, இஎம்ஐ தள்ளுபடி மற்றும் ரூ.18,049 வரையிலான எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியும் கிடைக்கிறது.
லாவா பிளேஸ் 5ஜி (Lava Blaze 5G): இது அசல் விலையான ரூ.10,499 க்கு பதிலாக ரூ.9,499 வாங்க கிடைக்கும். அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுகள் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் கூடுதலாக ரூ.524 தள்ளுபடியும் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் நோ காஸ்ட் இஎம்ஐ ஆனது ரூ.1,750 முதல் தொடங்குகிறது.
ரெட்மி ஏ1 (Redmi A1): என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போனான ரெட்மி ஏ1 வங்கி சலுகைகள் உட்பட ரூ. 5,699 க்கு வாங்க கிடைக்கும். இது 2ஜிபி ரேம் + 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் விளையாகும். சுவாரசியமாக இந்த ஸ்மார்ட்போனின் இது ரூ.5,400 எக்ஸ்சேஞ்ச் சலுகையும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








