மிட்ரேஞ்ச் விலையில் 2022ஐ கலக்கிய ஸ்மார்ட்போன்கள் லிஸ்ட்: யோசிக்காம இதை வாங்குங்க!

|

ரூ.25,000க்குள் உள்ளான விலை பிரிவில் பல ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் 2022 இல் வெளியாகின. எப்போது ஆரம்பித்தது எப்போது முடிந்தது என்றே தெரியாத அளவிற்கு 2022 முடிய இருக்கிறது. இன்னும் சில தினங்களில் நாம் 2023 இல் அடியெடுத்து வைக்க இருக்கிறோம். அதன்படி 2022 இல் ரூ.25000 விலை பிரிவில் அறிமுகமாகி ஸ்மார்ட்போன் சந்தையை கலக்கிய ஸ்மார்ட்போன்கள் குறித்து தான் பார்க்கப்போகிறோம்.

ரூ.25,000க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

ரூ.25,000க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

விரைவில் புதிய போன் வாங்க வேண்டும் என்று நீங்கள் திட்டமிட்டிருந்தால் இந்த தகவல் உங்களுக்கு உகந்ததாக இருக்கும். அல்லது புதிய போனை வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சிறந்த நேரமாகும். ரூ.25,000க்கு கீழ் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. மிட்ரேன்ஜ் விலையில் பல ஸ்மார்ட்போன்கள் சந்தையில் கிடைக்கிறது. இதில் 2022 இல் அறிமுகமாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ஸ்மார்ட்போனை தான் பார்க்கப் போகிறோம்.

vivo V21e 5G

vivo V21e 5G

ரூ.25,000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்று vivo V21e 5G ஆகும். இதன் விலை ரூ.23,690 ஆகும். இந்த காலக்கட்டத்துக்கு தேவையான 5ஜி ஆதரவு இதில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

64 எம்பி குவாட் ரியர் கேமரா

முழு எச்டி+ அமோலெட் டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் கேமரா அம்சங்களை பொறுத்தவரையில் 64 எம்பி குவாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 32 எம்பி செல்பி ஷூட்டர் ஆதரவு இருக்கிறது. 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கிறது. வெறும் 30 நிமிடங்களில் 72 சதவீதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும்.

iQOO Z6 Pro

iQOO Z6 Pro

ஐக்யூ ரசிகர்களிடையே மிகவும் புகழ் பெற்ற ஸ்மார்ட்போன் இது. iQOO Z6 Pro ஸ்மார்ட்போனானது ரூ.22,999 என கிடைக்கிறது. விவோவின் துணை பிராண்டான ஐக்யூ சமீப காலமாகவே கடுமையான வளர்ச்சியை அடைந்து வருகிறது.

ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட்

iQOO Z6 Pro ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 8 ஜிபி ரேம் இதில் இருக்கிறது. 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவு கொண்ட அமோலெட் டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. 1300 நிட்ஸ் உச்ச பிரகாச ஆதரவுடன் 64 எம்பி கேமரா ஆதரவு இதில் இருக்கிறது.

Realme Narzo 50 Pro 5G

Realme Narzo 50 Pro 5G

Realme Narzo 50 Pro ஸ்மார்ட்போனானது 5ஜி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 48 எம்பி சென்சார் உடனான நட்சத்திர கேமரா அமைப்பு இதில் இருக்கிறது. பகல் நேரத்தில் விரிவான மற்றும் வண்ண துல்லியமான காட்சிகளை பதிவு செய்ய இது ஆதரிக்கிறது.

டைமன்சிட்டி 920 எஸ்ஓசி சிப்செட்

இந்த ஸ்மார்ட்போனானது டைமன்சிட்டி 920 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. வேகமான செயல்திறன் ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன். 90 ஹெர்ட்ஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 5000 எம்ஏஎச் பேட்டரி இதில் இருக்கிறது.

மோட்டோ ஜி82

மோட்டோ ஜி82

மோட்டோ ஜி82 ஸ்மார்ட்போனானது ரூ.20,000க்கு கீழ் கிடைக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது தூய்மையான ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்குகிறது. Moto G82 இன் சிறப்பம்சங்கள் அதன் விலையை விட உயர்ந்ததாக இருக்கிறது.

00 நிட்ஸ் உச்ச பிரகாசம்

50 எம்பி பிரதான கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இதில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 700 நிட்ஸ் உச்ச பிரகாசம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவு கொண்ட 6.6 இன்ச் pOLED டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது.

OnePlus Nord CE 2 5G

OnePlus Nord CE 2 5G

ரூ.20,000க்கு கீழ் கிடைக்கும் மற்றொரு சிறந்த ஸ்மார்ட்போன் OnePlus Nord CE 2 5G ஆகும். OnePlus Nord CE 2 5G ஸ்மார்ட்போனானது திறம்பட செயல்திறன் கொண்ட சாதனமாகும். OnePlus Nord CE 2 5G ஆனது டைமன்சிட்டி 900 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள் மூலம் செய்ய முடியும் அனைத்து பணிகளையும் இதில் எளிதாக மேற்கொள்ளலாம். 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவு கொண்ட அமோலெட் டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. 64 எம்பி பிரதான கேமரா உட்பட டிரிபிள் லென்ஸ் அமைப்பு இதில் இருக்கிறது. 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 4500 எம்ஏஎச் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
List of Best Midrange Price Smartphones in 2022 in India: Check the list Before Buying New Smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X