டிஜிட்டல் கேமராவை தூக்கி சாப்பிட்ட போன்கள்: 2022 இன் டாப் 5 Camera Smartphone!

|

ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு விலைப்பிரிவில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி 2022 இல் எந்தத் துறை சிறப்பாக இருந்ததோ இல்லையோ ஸ்மார்ட்போன் துறை என்பது சீரும் சிறப்புமாக இருந்தது. ஏணைய புதுப்புது அம்சங்களோடு இந்த ஆண்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்

பல்வேறு நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு புதுப்புது அம்சங்களோடு வெவ்வேறு விலைப் பிரிவின் கீழ், ஆண்ட்ராய்டு போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. ஆனாலும் கூட எந்தவொரு மாடலாலும் ஆப்பிளின் ஐபோனுக்கு அருகில் நெருங்க முடியவில்லை என்பதே நிதர்சனம்.

சென்சார் என்பது மிக அவசியம்

சென்சார் என்பது மிக அவசியம்

இதற்கு ஒரு சின்ன எடுத்துக் காட்டு சொல்லலாம். ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள 108 எம்பி கேமராவில் எடுக்கப்படும் புகைப்படம் ஐபோனின் 12 எம்பி கேமரா புகைப்படத்துக்கு ஈடாகாது. எத்தனை மெகாபிக்சல் கேமரா என்பதை விட என்ன சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

2022 பெஸ்ட் கேமரா ஸ்மார்ட்போன்

2022 பெஸ்ட் கேமரா ஸ்மார்ட்போன்

அதன்படி 2022 இல் வெளியான சிறந்த கேமரா அம்சங்கள் கொண்ட போன்களின் பட்டியலை விரிவாக பார்க்கலாம். அதிக மெகாபிக்சல் ஆதரவுகள் உடன் சிறந்த கேமரா சென்சார்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது.

Google Pixel 7 Pro

Google Pixel 7 Pro

கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த Google Pixel 7 Pro ஸ்மார்ட்போன் இந்த பட்டியலில் பிரதான இடத்தை பிடித்திருக்கிறது. இந்த கேமராவில் 50 எம்பி பிரதான கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைட் ஷூட்டர் மற்றும் 10x ஜூம் வரை வழங்கும் 48எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் என டிரிபிள் ரியர் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. குறைந்த லைட்டிங் உள்ள இடத்திலும் மேம்பட்ட புகைப்படங்களை இதில் பதிவு செய்யலாம்.

OnePlus 10 Pro

OnePlus 10 Pro

OnePlus 10 Pro ஸ்மார்ட்போனிலும் மேம்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. இதில் சக்திவாய்ந்த 48MP Sony IMX789 சென்சார் முதன்மை கேமராவாக பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த கேமரா பிரிவில் சோனி கேமரா சென்சார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

அதேபோல் இதில் 50MP சாம்சங் JN1 அல்ட்ராவைட் ஷூட்டர் மற்றும் 8MP லென்ஸ் என டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது.

Vivo X80 Pro

Vivo X80 Pro

Vivo X80 Pro ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொறுத்தவரையில், இதில் 50MP Samsung GNV முதன்மை சென்சார், 12MP போர்ட்ரெய்ட் சென்சார், 8MP பெரிஸ்கோப் லென்ஸ் உள்ளிட்ட குவாட் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. குவாட் ரியர் கேமராவில் நான்காவது கேமராவாக 48MP சோனி IMX598 அல்ட்ராவைட் சென்சார் பொருத்தப்பட்டிருக்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் DSLR கேமராவுக்கு இணையான புகைப்படங்களை இதில் பதிவு செய்யலாம்.

Motorola Edge 30 Ultra

Motorola Edge 30 Ultra

Motorola Edge 30 Ultra என்பது மோட்டோ நிறுவனத்தின் சமீபத்திய ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போனில் 200MP சாம்சங் ISOCELL HP1 பிரைமரி சென்சார் இடம்பெற்றிருக்கிறது. அதோடு 50 எம்பி சாம்சங் ஜிஎன்5 அல்ட்ரா-வைட் ஷூட்டர் மற்றும் 12 எம்பி சோனி டெப்த் சென்சார் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள ஒவ்வொரு சென்சாரும் மேம்பட்டு மற்றும் உயர்தரமாக இருக்கிறது.

Samsung Galaxy S22 Ultra

Samsung Galaxy S22 Ultra

Samsung Galaxy S22 Ultra ஸ்மார்ட்போன் என்பது பக்கா ப்ரீமியம் போன் ஆகும். Galaxy S22 அல்ட்ரா போனில் 108 எம்பி மெயின் சென்சார், டூயல் 10 எம்பி டெலிஃபோட்டோ ஷூட்டர்கள், 12 எம்பி ஆங்கிள் லென்ஸ் கேமராக்கள் இடம்பெற்றிருக்கிறது. அதனுடன் இதில் 40 எம்பி செல்பி கேமரா இடம்பெற்றுள்ளது. இது சாம்சங் ISOCELL HM3 சென்சார் ஆகும்.

Best Mobiles in India

English summary
List of Best Camera Smartphones of 2022: Perfect way to become a Camera Man

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X