Home
Mobile

2024 பெஸ்ட்.. Motorola முதல் OnePlus வரை.. பட்ஜெட் விலையில் கிடைக்கும் 5 சிறந்த ஸ்மார்ட்போன்கள்..

இந்த வருடம் பல முன்னணி நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அசத்தலான ஸ்மார்ட்போன்களை (smartphones) அறிமுகம் செய்தன. அதுவும் சில நிறுவனங்கள் மேம்பட்ட புதிய தொழில்நுட்ப அம்சங்களை கொண்ட போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ததால் நல்ல வரேவுற்பு இருந்தது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது 2024-ல் வாங்க சிறந்த பட்ஜெட் 5ஜி போன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

1.மோட்டோரோலா ஜி85 5ஜி (Motorola G85 5G) ஆனது ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்த போனுக்கு தற்போது கூட நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 (Snapdragon 6s Gen 3) சிப்செட் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

2024 பெஸ்ட்.. பட்ஜெட் விலையில் கிடைக்கும் 5 சிறந்த ஸ்மார்ட்போன்கள்..

மேலும் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்ட் பிஒஎல்இடி (curved pOLED) டிஸ்பிளே, 50எம்பி டூயல் ரியர் கேமரா, 32எம்பி செல்பி கேமரா, 5000mAh பேட்டரி, 33W டர்போ சார்ஜிங், ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்(Stereo speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos), டூயல் மைக்ரோபோன்கள் (dual microphones) உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது மோட்டோரோலா ஜி85 5ஜி.

2.ரியல்மி பி1 5ஜி (realme P1 5G) ஸ்மார்ட்போன் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி போன். அதேபோல் இந்த சாதனத்தில் சக்திவாய்ந்த டைமன்சிட்டி 7050 (Dimensity 7050) சிப்செட் வசதி உள்ளது.

அதேபோல் 6.67 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, 50 எம்பி டூயல் ரியர் கேமரர், 16எம்பி செல்பி கேமரா, 45W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SuperVOOC Fast Charging), 5000எம்ஏஎச் பேட்டரி, மாலி ஜி-68 ஜிபியு (Mali-G68 GPU) கிராபிக்ஸ் கார்டு, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன.

3.சாம்சங் கேலக்ஸி எம்35 5ஜி (Samsung Galaxy M35 5G) ஆனது 15,999 விலையில் வாங்க கிடைக்கிறது. தரமான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1380 (Octa Core Exynos 1380 Mobile) சிப்செட் உடன் இந்த போன் வெளிவந்தது.

6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி-ஓ டிஸ்பிளே (Super AMOLED Infinity-O Display),50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 13எம்பி செல்பி கேமரா, 6000எம்ஏஎச் பேட்டரி, 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

4.விவோ டி3எக்ஸ் 5ஜி (vivo T3x 5G) ஸ்மார்ட்போன் மேம்பட்ட பல புதிய அம்சங்களுடன் வெளிவந்தது. குறிப்பாக இந்த போன் ரூ.12,999-க்க வாங்க கிடைக்கிறது. அதேபோல் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 (Snapdragon 6 Gen 1) சிப்செட், ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் போன்ற தரமான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இதுதவிர 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (Full HD+) டிஸ்பிளே 50எம்பி டூயல் ரியர் கேமரா, ஐபி64 ரேட்டிங், 6000எம்ஏஎச் பேட்டரி, 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (44W fast charging) வசதி, 8எம்பி செல்பி கேமரா உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த விவோ டி3எக்ஸ் 5ஜி மாடல்.

2024 பெஸ்ட்.. பட்ஜெட் விலையில் கிடைக்கும் 5 சிறந்த ஸ்மார்ட்போன்கள்..

5.ஒன்பிளஸ் நோர்ட் சிஇ லைட் 5ஜி (OnePlus Nord CE4 Lite 5G) ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக ரூ.18,269-க்கு இந்த போன் வாங்க கிடைக்கிறது. 6.67 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

மேலும் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS), 50எம்பி டூயல் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 10x டிஜிட்டல் ஜூமிங், 5500mAh பேட்டரி, 80W சூப்பர்வூக் (SuperVOOC) சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ லைட் 5ஜி போனில் உள்ளன.

photo credit: cbeditz.com

More from GizBot

Best Mobiles in India

English summary
List of Best Budget Smartphones Launched in 2024: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X