Home
Mobile

பட்ஜெட் விலையில் 5G போன் வாங்க விருப்பமா? 1 இல்ல 5 இருக்கு: வாங்க பார்ப்போம்.!

இந்தியாவில் 5ஜி சேவை மக்கள் பயன்படுத்த துவங்கிவிட்டனர். அதேபோல் செல்போன் நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு 5ஜி போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. குறிப்பாக சில நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் 5ஜி போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது ரியல்மி, போக்கோ, மோட்டோ உள்ளிட்ட சில நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றன. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்த பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

பட்ஜெட் விலையில் 5G போன் வாங்க விருப்பமா? 1 இல்ல 5 இருக்கு.!

போக்கோ எம்4 5ஜி

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,999-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் இன்னும் கூடுதல் சலுகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்கோ எம்4 5ஜி அம்சங்கள்
போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போன் 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் மீடியாடெக் Dimensity 700 சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எம்4 5ஜி போன்.

சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி

அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்23 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.15,999-விலையில் வாங்க முடியும். இந்த சாம்சங் போன் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி, குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி சிப்செட், 8எம்பி செல்பி கேமரா உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எப்23 5ஜி போன்.

பட்ஜெட் விலையில் 5G போன் வாங்க விருப்பமா? 1 இல்ல 5 இருக்கு.!

ஐக்யூ Z6 Lite

அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐக்யூ Z6 Lite ஸ்மார்ட்போன் ரூ.13,999-விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த 5ஜி போன் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 50எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஐக்யூZ6 Lite 5ஜி போன் வெளிவந்துள்ளது.

ரெட்மி 11 பிரைம் 5ஜி

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அமேசான் தளத்தில் ரூ.13,999-விலையில் வாங்கக் கிடைக்கும் மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை இன்னும் குறைவான விலையில் வாங்க முடியும்.

ரெட்மி 11 பிரைம் 5ஜி அம்சங்கள்

ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 50எம்பி டூயல் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி 11 பிரைம் 5ஜி போன்.

பட்ஜெட் விலையில் 5G போன் வாங்க விருப்பமா? 1 இல்ல 5 இருக்கு.!

மோட்டோரோலா ஜி62 5ஜி

பிளிப்கார்ட் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோரோலா ஜி62 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.14,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த மோட்டோரோலா போன் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அதேபோல் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 16எம்பி செல்பி கேமரா, 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் ஆதரவு உள்ளிட்ட அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த மோட்டோரோலா ஜி62 5ஜி போன்.

More from GizBot

Best Mobiles in India

English summary
List of Best 5G Smartphones to Buy at Budget Prices: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X