Home
Mobile

ரூ.20,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் தரமான 5G ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்.!

இந்தியாவில் தற்போது 4ஜி ஸ்மார்ட்போன்களை விட 5ஜி போன்களுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. அதாவது 5ஜி சேவை இருப்பதால் 4ஜி ஸ்மார்ட்போன்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. எனவே தான் 5ஜி போன்களை மக்கள் போட்டிப்போட்டுக் கொண்டு வாங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் பல முன்னணி செல்போன் நிறுவனங்கள் தற்போது 5ஜி போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த அதிக ஆர்வம் காட்டுகின்றன. அதேபோல் சில நிறுவனங்கள் ஏற்கனவே அறிமுகம் செய்த 5ஜி போன்களின் விலையை குறைத்தும் வருகின்றன. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது இந்தியாவில் ரூ.20,000-க்குள் கிடைக்கும் 5ஜி போன்களின் பட்டியலை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

ரூ.20,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் தரமான 5G ஸ்மார்ட்போன்கள்.!

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி

அமேசான் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி போன் ஆனது ரூ.18,999-க்கு வாங்கக் கிடைக்கிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போனை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும். இப்போது இதன் சிறப்பு அம்சங்களைப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி போன் ஆனது 64எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 16எம்பி செல்பி கேமரா, 6.59-இன்ச் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி,33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் ஆதரவு, உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 2 லைட் 5ஜி போன் வெளிவந்துள்ளது.

ரூ.20,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் தரமான 5G ஸ்மார்ட்போன்கள்.!

ரெட்மி நோட் 12 5ஜி

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.17,999-விலையில் வாங்க முடியும். மேலும் 6.67-இன்ச் டிஸ்பிளே,48எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு,13எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி,ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 அக்டோ-கோர் பிராஸசர் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்33 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.16,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த போன் எக்ஸிநோஸ் 1280 ஆக்டோ-கோர் 5என்எம் பிராசஸர் வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 6.6-இன்ச் டிஸ்பிளே, 50எம்பி குவாட் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 6000 எம்ஏஎச் பேட்டரி, 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.

ரூ.20,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் தரமான 5G ஸ்மார்ட்போன்கள்.!

லாவா பிளேஸ் 5ஜி

6.51-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளேஇ 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் Dimensity 700 சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது லாவா பிளேஸ் 5ஜி (Lava Blaze 5G) போன். இந்த போனை அமேசான் தளத்தில் ரூ.10,999-விலையில் வாங்க முடியும்.

ரூ.20,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் தரமான 5G ஸ்மார்ட்போன்கள்.!

iQOO Z6 Lite 5ஜி போன்

iQOO Z6 Lite 5ஜி போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.13,999-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போனை தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும். குறிப்பாக ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர், 5000 எம்ஏஎச் பேட்டரி, 50எம்பி ரியர் கேமரா, ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
List of amazing 5G smartphones under Rs 20,000 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X