ரூ.15,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்.!
தற்போது சாம்சங் முதல் சியோமி வரை பல்வேறு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. குறிப்பாக பல முன்னணி நிறுவனங்கள் தரமான 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதால் அதிக வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் விரைவில் இந்நிறுவனங்கள் பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது இந்தியாவில் ரூ.15,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி: பிளிப்கார்ட் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எப்14 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.14,490-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த போனை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும். மேலும் எக்ஸிநோஸ் 1330 ஆக்டோ-கோர் பிராசஸர், 50எம்பி ரியர் கேமரா, 13எம்பி செல்பி கேமரா, 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இதில் போனில் உள்ளன.
ரியல்மி narzo 50 5ஜி: அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி narzo 50 5ஜி மாடலை ரூ.12,999-விலையில் வாங்க முடியும். மேலும் 6.6-இன்ச் ஃபுல் எச்டி டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி,48எம்பி டூயல் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, மீடியாடெக் Dimensity 810 5G பிராசஸர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.
ரெட்மி 11 பிரைம் 5ஜி: பிளிப்கார்ட் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட ரெட்மி 11 பிரைம் 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.13,999-விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும். அதாவது 6.58-இன்ச் டிஸ்பிளே, 50எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன்.
லாவா Blaze 5G: அமேசான் தளத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட லாவா Blaze 5G ஸ்மார்ட்போனை ரூ.11,999-கே உள்ளது. பின்பு 6.5-இன்ச் டிஸ்பிளே, 5000 எம்ஏஎச் பேட்டரி, மீடியாடெக் Dimensity 700 பிராசஸர், 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி: 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட இன்பினிக்ஸ் ஹாட் 20 5ஜி ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.13,499-விலையில் வாங்க முடியும். மேலும் 50எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா, 5000 எம்எஎச் பேட்டரி, 6.6-இன்ச் டிஸ்பிளே, Dimensity 810 பிராசஸர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
iQOO Z6 5G: அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட iQOO Z6 5Gஸ்மார்ட்போனை ரூ.14,999-விலையில் வாங்க முடியும். மேலும் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட், 50எம்பி ரியர் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.


Click it and Unblock the Notifications