பட்டியல் : எந்தெந்த கருவிகளுக்கு ஆண்ட்ராய்டு ஓ கிடைக்கக்கூடும்.!

|

கூகுள் அதன் புதிய இயங்குதளமான அண்ட்ராய்டு ஓ-வை அறிவித்துள்ளது.பெர்ம்வேரின் முதல் மற்றும் இரண்டாவது டெவெலப்பர் மாதிரிக்காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த பதிப்பில் மூன்றாவது மற்றும் நான்காவது மாதிரிகள் உருவாகிய பின்னர், ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் அதன் இறுதிப் பதிப்பு பகிரங்கப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது, ஒரு சில ஒரிஜினல் எக்யூப்மென்ட் மெனுபேக்சரர் (அசல் கருவி உற்பத்தியாளர்கள்) தங்கள் சாதனங்களை ஆண்ட்ராய்டு ஓ பெர்ம்வேர் பெறும் என்று உறுதிப்படுத்தியுள்ளனர், மேலும் அவை நோக்கியா 6, நோக்கியா 5, நோக்கியா 3, ஒன்ப்ளஸ் 3 மற்றும் 3டி ஆகிய கருவிகளுடன் கூகுள் கருவிகளும் ஆண்ட்ராய்டு ஓ பெறுகின்றன. அவைகள் என்ன கருவிகள் மற்றும் மேலும் என்னென்ன கருவிகள் இந்த புதிய இயங்குதளத்தை பெறும் என்பதை பற்றிய தொகுப்பே இது.

கூகுள் போன்கள்

கூகுள் போன்கள்

ஆண்ட்ராய்டு ஓ பெறும் சாதனங்களின் பட்டியலை கூகுள் நியூர்வனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் அதன் கூகுள் பிக்சல், பிகாஸ்ல் எக்ஸ்எல், நெக்சஸ் 5எக்ஸ், நெக்சஸ் 6பி, பிக்சல் சி மற்றும் நெக்ஸஸ் ப்ளேயர் ஆகிய கருவிகள் ஆண்ட்ராய்டு ஓ பீட்டா பதிப்பை பெறலாம்.

நோக்கியா

நோக்கியா

நோக்கியா 3, நோக்கியா 5, மற்றும் நோக்கியா 6 ஆகிய கருவிகளுக்கு ஆண்ட்ராய்டு ஓ மேம்படுத்தல் கிடைக்கும் என்று சமீபத்தில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்திய எச்எம்டி க்ளோபல் உறுதிப்படுத்தியுள்ளது.

ஒன்ப்ளஸ்

ஒன்ப்ளஸ்

ஒன்ப்ளஸ் 3 மற்றும் ஒன்ப்ளஸ் 3டி ஆகிய கருவிகளுக்கு ஆண்ட்ராய்டு ஓ மேம்படுத்தல் கிடைக்கும். ஒன்ப்ளஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பீட் லாவ் இதை ட்விட்டரில் அறிவித்தனர். இக்கருவிகளுடன் சேர்த்து இந்த புதிய அப்டேட் ஆனது வரவிருக்கும் ஒன்ப்ளஸ் 5 கருவியில் கூட இணையலாம்.

இதர ஒரிஜினல் எக்யூப்மென்ட் மெனுபேக்சரர்

இதர ஒரிஜினல் எக்யூப்மென்ட் மெனுபேக்சரர்

சாம்சங், எச்டிசி, சோனி, எல்ஜி, மோட்டோரோலா, லெனோவா, ஹூவாய் மற்றும் பல பெரிய ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்கள் இந்த புதிய இயக்க முறைமைக்கு தகுதியுடைய சாதனங்களின் பட்டியலை இன்னும் வெளிப்படுத்தவில்லை.

சாம்சங்

சாம்சங்

எப்போதுமே தாமதமாக அதன் கைப்பேசிகளுக்கு ஓஎஸ் கொண்டுவரும் சாம்சங் நிறுவனம் இந்த முறை அதன் கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்7 மற்றும் பிற பிரபலமான சாதனங்கள் உள்ளிட்ட அதன் பிளாக்ஷிப் சாதனங்களில் கூகுளின் புதிய இயங்குதளத்தை கொண்டுவர கிட்டத்தட்ட உறுதியாக உள்ளது.

சோனி

சோனி

லெனோவாவின் மோட்டரோலாவை பொறுத்தம்மட்டில் ஆண்ட்ராய்டு ஓ அதன் இசெட் மற்றும் ஜி தொடர்களுக்கு கிடைக்கக் கூடும். இதேபோல், மற்ற நிறுவனங்களான சோனி, எல்ஜி, ஹவாய் மற்றும் பலர் - ஓஎஸ்ஸை அதன் பிரபலமான கைபேசிகளில் வெளியிடுவார்கள் என்பதும் உறுதி.

Best Mobiles in India

English summary
List of devices eligible for Android O update – Nokia 6, Nokia 5, Nokia 3, OnePlus 3, 3T and others. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X