சிம்ம சொப்பனம் இதுதான்.. பேஸ்புக், வாட்ஸ்அப் எதுமில்ல.. பிளாக் & ஒயிட் டிஸ்பிளே.. 50MP கேமரா.. எந்த மாடல்?
பேஸ்புக், வாட்ஸ்அப், யூடியூப் போன்ற எந்தவொரு ஆப்களும் இல்லாமல், வெறும் போன் கால், அலாரம், மியூசிக், காலண்டர் போன்ற அத்தியாவசிய பீச்சர்களுடன் மட்டுமே பிளாக் & ஒயிட் ஓஎல்இடி டிஸ்பிளேவுடன் லைட் போன் 111 (Light Phone III) வெளியாகி ஸ்மார்ட்போன் மார்கெட்டையே மிரளவிட்டுள்ளது. இதுபோன்ற போன்களை வாங்கி பயன்படுத்துவது பலரது கனவாக இருக்கிறது. இந்த லைட் போன் 111 மாடலின் விலை என்ன? விற்பனை எப்படி? எங்கு ஆர்டருக்கு கிடைக்கிறது உள்ளிட்ட முழு விவரம் இதோ.
லைட் போன் 111 அம்சங்கள் (Light Phone III Specifications): இந்த போனில் 3.92 இன்ச் (1240 x 1080 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட பிளாக் & ஒயிட் மாடலாகும். மேட் ஃபினிஷிங்கில் (Matte Finish) ரக்கட் லுக் கொடுக்கிறது. லைட்ஓஎஸ் (LightOS) வருகிறது.

இந்த ஓஎஸ் மூலம் மியூசிக் (Music), பாட்காட்ஸ் பிளேயர் (Podcast Player), டெக்ஸ்டிங் (Texting), டைரெக்டரி (Directory), டைரெக்சன்ஸ் (Directions), நோட்ஸ்/வாய்ஸ் மெமோ (Notes/voice memo), காலெண்டர் (Calendar), டைமர் (Timer) மற்றும் அலாரம் (Alarm) ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்த முடியும். வேறு ஆப்கள் கிடையாது.
அதேபோல வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். இந்த லைட் போன் 111 போனில் 6 ஜிபி ரேம் + 128 மெமரி வருகிறது. டூயல் சிம் சப்போர்ட் (Dual SIM Support) வருகிறது. ஆகவே, நானோ சிம் (Nano SIM) மற்றும் ஈசிம் (eSIM) பயன்படுத்தலாம். அட்ரினோ 613 ஜிபியு (Adreno 613 GPU) கிராபிக்ஸ் சப்போர்ட் வருகிறது.
ஆகவே, பிளாக் & ஒயிட்டிலும் பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்கலாம். இந்த லைட் போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 அட்வான்ஸ்டு எடிஷன் 4என்எம் (Octa Core Snapdragon 4 Gen 2 Advanced Edition 4nm) சிப்செட் வருகிறது. இந்த போனில் 50 எம்பி ரியர் கேமரா வருகிறது. எல்இடி ஃபிளாஷ் உள்ளது.

ஷட்டர் பட்டன் (Shutter Button) வருகிறது. டாப் மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Top-mounted Fingerprint Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வருகின்றன. இந்த லைட் மாடலில் 1800mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி உடன் 124 கிராம் எடை மட்டுமே கொண்டிருக்கிறது.
12 மிமீ தடிமன் வருகிறது. IP54 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் மற்றும் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), ஜிபிஎஸ் (GPS), என்எப்சி (NFC) போன்ற கனெக்டிவிட்டி பீச்சர்கள் கொண்டிருக்கிறது. ஆகவே, பக்கா பர்பாமென்ஸ் எதிர்பார்க்கலாம்.
இந்த லைட் போன் 111 மாடலின் விலை ரூ.66,805ஆக இருக்கிறது. இருப்பினும், 50 சதவீத டிஸ்கவுண்ட் உடன் வெறும் ரூ.33,360 பட்ஜெட்டில் ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கிறது. ஜூலை 15ஆம் தேதி வரையில் ஆர்டர் செய்வோருக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கும். 2025 ஜனவரி மாதம் முதல் ஷிப்பிங் தொடங்குகிறது.
அமெரிக்காவில் முதலில் விற்பனைக்கு கிடைக்கும். மற்ற நாடுகளில் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது. ஸ்மார்ட்போன் போன்களுக்கு மாற்றாக பீச்சர் போன்களை பயன்படுத்த விரும்புவோருக்கு இந்த இந்த லைட் போன் 111 மாடலானது, மேலும் ஒரு பிரீமியம் ஆப்ஷனாக இருக்கும். அதோடு பிளாக் & ஒயிட் டிஸ்பிளே வருவதால், பீல் குட் கொடுக்கும்.


Click it and Unblock the Notifications








