Home
Mobile

ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி உடன் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்!

ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி உடன் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்!

ஸ்மார்ட்போன்களுக்குள் தான் வாழ்க்கை நடக்கிறது. பணம் செலுத்துவது முதல் சாத்தியமான வாழ்க்கை துணையை கண்டறிவது வரை, ஒரு வேலையை திறம்பட செய்வது முதல் மற்றும் ஹாயாக அமர்ந்து கேமிங் செய்வது வரை கிட்டத்தட்ட அனைத்துமே ஸ்மார்ட்போன்களின் வழியாகவே நடக்கிறது. ஸ்மார்ட்போன்கள் வெறுமனே தகவல் தொடர்பு சாதனங்களாக இருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது, அதிலும் குறிப்பாக 5ஜி நெட்வொர்க்குகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், ஸ்மார்ட்போன்கள் இன்றியமையாதவைகளாக ஆகிவிட்டன; மற்ற நவீன கால கேஜெட்களை விட முக்கியமானவைகளாக உருமாறிவிட்டன.

எனவே தான், நீங்கள் வாங்க விரும்பும் ஒரு ஸ்மார்ட்போனானது அனைத்து வகையான விஷயங்களிலும் திறமையாக செயல்படுவதை நிரூபிக்க வேண்டி உள்ளது. அது பார்க்க அழகாக இருக்க வேண்டும், மேலும் அது சிறப்பாக செயல்பட வேண்டும். ஒரு நாள் முழுவதுமான பேட்டரி லைஃப்பை வழங்க வேண்டும், இல்லையெனில், அது வேகமாக சார்ஜ் செய்யப்பட வேண்டும், கடைசியாக மற்றும் மிகவும் முக்கியமாக அது உங்களுடைய வாழ்வின் அனைத்து அழகான தருணங்களையும் துல்லியமாக படம்பிடிக்க வேண்டும், இப்படியாக நீங்கள் எதையுமே தவறவிடவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அப்படியான ஒரு ஸ்மார்ட்போன் தான் ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி, ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் எப்படி அனைத்து அம்சங்களிலும் மதிப்புமிக்கதாக இருக்கிறது? வாருங்கள் விளக்கமான பார்க்கலாம்!

இதுவொரு கலைப்படைப்பு!

சந்தேகமே வேண்டாம், ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி சட்டென்று கவனத்தை ஈர்க்கும் வடிவமைப்பை பெற்றுள்ளது. ஒரு மாலை நேரத்தில் இந்த போனை வெளியே எடுத்த போது இதன் பளபளப்பான ஃபினிஷ் அனைவரின் கண்களையும் கவர்ந்ததை என்னால் வெளிப்படையாகவே பார்க்க முடிந்தது. அதுமட்டுமின்றி நான் சென்ற காபி ஷாப்பில் இருந்த சிலர் இதன் விண்கலம்-போன்ற வடிவமைப்பு மற்றும் தனித்துவமான பேக் பேனல் வடிவமைப்பை பார்த்து, இந்த ஸ்மார்ட்போனை பற்றி விசாரிக்கவும் தவறவில்லை. இதன் வடிவமைப்பை பற்றிய விவாதித்தில் இதுவொரு "பீஸ் ஆப் ஆர்ட்" என்கிற முடிவுக்கு வந்தோம்.

ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி உடன் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்!

ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் விளிம்பில் இருக்கும் வட்ட வடிவ கேமரா ஐலேண்ட் மற்றும் அதன் விட்டம் முழுவதும் பொறிக்கப்பட்ட துல்லியமான பள்ளங்களானது பக்கவாட்டு தண்டவாளங்களுடன் சீராக ஒன்றிணைகப்பட்டு இது எதிர்காலத்தில் இருந்து வந்த ஒரு ஸ்மார்ட்போனை போல தெரிகிறது. இது ஒரு தனித்துவமான அடையாளத்தை கொண்டுள்ளது, ஆகவே இது பெரும்பாலான ஸ்மார்ட்போன்களின் கூட்டத்தில் இருந்து தனித்து நிற்கிறது!

ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஆனது கேலக்டிக் சில்வர் மற்றும் சோனிக் பிளாக் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வருகிறது. முந்தையது, விண்மீன்களுக்கு இடையேயான ஒளியின் அழகால் ஈர்க்கப்பட்டு, ஐஸ்-ப்ளூவின் நுட்பமான குறிப்புடன் வெள்ளி நிறத்தை வெளிப்படுத்துகிறது மற்றும் சற்றே குறைவான பளபளப்பான ஃபினிஷை பெற்றுள்ளது. மறுகையில் உள்ள சோனிக் பிளாக் வேரியண்ட் ஆனது குறிப்பிடத்தக்க மேட் ஃபினிஷை கொண்டுள்ளது. இந்த 2 வகைகளும் சமீபத்திய ஏஜி கிராஃப்டை நம்பியுள்ளன, இது நிறுவனத்தின் பாரம்பரியமான நான்-க்ளாஸி அமைப்பை விவரிக்கும் ஒரு ஆடம்பரமான வழியாகும், இதன் மூலம் ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போன் உங்கள் கைகளுக்குள் நன்றாக பொருந்தும்; அதேசமயம் கைரேகைகள் பதியாது; மேலும் நழுவுவதற்கான வாய்ப்புகளும் கூட மிகவும் குறைவாகவே இருக்கும்.

காட்சிகளில் மூழ்கிவிடுங்கள்!

என்னை சுற்றியுள்ளவர்கள் ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் வடிவமைப்பால் ஈர்க்கப்பட்டது ஒருபக்கம் இருக்க, நான் இந்த ஸ்மார்ட்போனின் 6.7 இன்ச் சூப்பர் ஃப்ளூயிட் டிஸ்ப்ளேவில் மூழ்கிவிட்டேன் என்றே கூறலாம். இதன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டிற்கு நன்றி! இது பவரை சேமிப்பதற்காக உங்கள் பயன்பாட்டின் அடிப்படையில் மாறுபடும். மேலும் இதன் பேனல் அதிவேக காட்சிகளை வழங்குவதற்கு தேவையான சான்றிதழ்களையும் பெற்றுள்ளது. அதில் எச்டிடிஆர்10+ ஆதரவு, 100% டிசிஐ பி3 கலர் கேமட் மற்றும் எஸ்ஜிஎஸ் லோ ப்ளூ லைட் போன்றவைகள் அடங்கும்.

மேலும் இந்த பிராண்டில் முதல் முறையாக, ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஆனது, எல்டிபிஎஸ் டிஸ்ப்ளேவில் ADFR 2.0 தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது, இது பயன்பாட்டின் அடிப்படையில் 40Hz, 45Hz, 60Hz, 90Hz மற்றும் 120Hz வரை மாறுபடும் ரெஃப்ரெஷ் ரேட்டை வழங்கும். உதாரணமாக, ஒரு திரைப்படத்தைப் பார்க்கும்போது அல்லது உங்கள் ட்விட்டர் டைம்லைனை ஸ்க்ரோல் செய்யும் போது, ​​அல்லது ரெட்ரோ கேம் விளையாடும் போது, ரெஃப்ரெஷ் ரேட் ஸ்டாண்டர்ட் 60Hz க்கு குறைக்கப்படும்.

ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி உடன் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்!

செயல்திறன் என்று வந்துவிட்டால் ஒரு மிருகம்!

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 ப்ராசஸர் மற்றும் 16ஜிபி வரையிலான LPDDR5X ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது சிபியு செயல்திறனில் 30% முன்னேற்றத்தை வழங்குகிறது, அதே நேரத்தில் எச்டிஆர் கேமிங்கை ஆதரிக்கும் வகையில் ஜிபியு 10% வரை உயர்த்தப்பட்டுள்ளது. அட்வான்ஸ்டு ரேம் மேனேஜ்மென்ட் உடன் கூடிய அதிநவீன ஸ்டோரேஜுடன் இணைந்த சிப்செட், எனது காபிக்காக நான் காத்திருந்த நேரத்தில் எனது பல வேலைகளை மிகவும் எளிமையாக செய்ய வழிவகுத்தது. உங்களுக்கு தெரியுமா? ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஆனது 44 அப்ளிகேஷன்களை பின்னணியில் ஆக்டிவ் ஆக வைத்திருக்கும் என்று!

சத்தியமாக நான் 44 ஆஃப்களை திறந்து வைக்கவில்லை! நான் சிறிது நேரம் கேமிங் செய்தேன். ​​எனது உணவு வந்த பிறகு அதை அப்படியே நிறுத்திவிட்டு, பின்னர் நிறுத்திய இடத்தில் இருந்து மீண்டும் தொடங்கினேன். இடையில், கூகுள் வழியாக நான் இருந்த கஃபேயின் வரலாற்றை கொஞ்சம் பார்த்தேன், கூடவே சில மெயில்களை சரிபார்த்தேன், பின்னர் மெசேஜ்களுக்கு பதிலளித்தேன். இப்படியாக இந்த ஸ்மார்ட்போன் மல்டி-டாஸ்கிங்கை வேறொரு உச்சத்திற்கு கொண்டு சென்றது.

கேண்டிட் புகைப்படங்கள் ஒருபோதும் இதைவிட சிறப்பாக தோன்றியதில்லை!

ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி உடன் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்!

ஒரு உணவகத்தில் நம் முன் இருக்கும் தட்டுகளில் உள்ள உணவை ருசிப்பதற்கு முன் நாம் அனைவரும் என்ன செய்வோம்? இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்வதற்காக புகைப்படங்களை எடுப்போம், ஸ்மார்ட்போன் கேமராக்களை முடிந்த வரை நன்றாக பயன்படுத்துவோம் அல்லவா? நான் என்னுடைய பீட்சாவை புகைப்படம் எடுத்த போது அது மெனுவில் இருந்த போட்டோவை விட சிறப்பாக வந்தது என்றே கூறலாம்.

ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஆனது இமேஜ் கிளாரிட்டி என்ஜின் 2.0 உடன் புதிய ட்ரிபிள் கேமரா செட்டப் உடன் வருகிறது. இதன் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் மிகவும் துல்லியமான விவரங்களை வழங்குகிறது மற்றும் இன்ஸ்டாகிராமிற்கு தகுதியான வண்ணங்களுடன் ரியல்லைஃப் போன்ற படங்களை வழங்குகிறது. 120 டிகிரி அல்ட்ரா-வைட் கேமராவை பயன்படுத்தி நான் இருந்த ஓட்டலின் அழகியலை ஒரு விரிவான காட்சியில் படம்பிடித்தேன். எனக்கு கொடுக்கப்பட்ட உணவு குளிர்ச்சியாகிறது என்பதை உணரும் முன், எந்த தேவையற்ற சிதைவும் இல்லாமல், அதை ஒரு சிங்கிள் ஃபிரேமில் மிகவும் அழகாகவும் படம் பிடித்தேன்.

100W சூப்பர்வூக் - உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்!

ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி உடன் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்!

பல வகையான வேலைகளை செய்த பிறகு, என் போனில் சார்ஜ் குறைந்து இருப்பதை உணர்ந்தேன். இந்த ஸ்மார்ட்போனின் 5,000mAh பேட்டரியானது, ஹார்ட்கோர் உபயோகத்தில் கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் நீடித்தது, அதற்காக சார்ஜ் செய்யாமலேயே இருக்க முடியுமா? அதிர்ஷ்டவசமாக, இதில் 100W சூப்பர்வூக் சார்ஜிங் உள்ளது. ஸ்மார்ட்போனை ப்ளக்-இன் செய்த 10 நிமிடங்களில் பேட்டரி 52% ஆனது, 100% சார்ஜ் ஆக மற்றொரு 15 நிமிடங்களும் ஆனது!

சட்டென 100% சார்ஜ் ஆனதும் இது சாதாரண ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இல்லை என்பதை தெளிவாக புரிந்துகொள்ள முடிகிறது. ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஒரு கலைப்படைப்பாகவும், பல வேலைகளை செய்யும் ஒரு டிவைஸ் ஆகவும் இருக்கிறது. இது வெளியில் அழகாக தெரிந்தாலும், உள்ளே ஒரு மிருகம் போல் செயல்படுகிறது. ஒன்பிளஸ் நிறுவனம் ஒவ்வொரு சிறிய விவரத்திலும் நன்றாக வேலை செய்துள்ளது, அதிநவீன வன்பொருளின் மேல் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை சேர்த்து, ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி ஸ்மார்ட்போனை ஒரு மதிப்புமிக்க மற்றும் எல்லைகளை தாண்டும் ஒரு ஃபிளாக்ஷிப்பாக உருவாக்கி உள்ளது.

என்னை போலவே நீங்களும் ஸ்மார்ட்போன்களில் இருந்து அதிகம் விலகி இருக்க முடியாத ஒரு நபராக இருந்தால், ஒன்பிளஸ் 11ஆர் 5ஜி விற்பனை தொடங்கிவிட்டது என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வரும் பேஸிக் வேரியண்ட்டின் விலை ரூ.39,999 ஆகும் மற்றும் 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் வேரியண்ட்டின் விலை ரூ.44,999 ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Life is Better With the OnePlus 11R 5G
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X