ரூ.9,490 முதல்: எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் LGW11, LGW31, LGW31+!

|

எல்ஜி டபிள்யூ 11, டபிள்யூ 31 மற்றும் டபிள்யூ 31+ ஸ்மார்ட்போன் 6.52 இன்ச் 20: 9 எச்டி+ ஃபுல்விஷன் டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஆரம்பவிலை ரூ.9,490 ஆக உள்ளது.

எல்ஜி இந்தியா

எல்ஜி இந்தியா

எல்ஜி இந்தியாவில் டபிள்யூ சீரிஸின் கீழ் புது ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அது டபிள்யூ 11, டபிள்யூ 31 மற்றும் டபிள்யூ 31+ ஸ்மார்ட்போன்களாகும். இந்த ஸ்மார்ட்போன் கடந்தாண்டு வெளியான டபிள்யூ 10 மற்றும் டபிள்யூ 30 ஆகியவற்றின் வாரிசாகும்.

ஆக்டோகோர் மீடியாடெக் ஹீலியோ பி22

ஆக்டோகோர் மீடியாடெக் ஹீலியோ பி22

இந்த ஸ்மார்ட்போனில் பெரிய டிஸ்ப்ளே ஆக்டோகோர் மீடியாடெக் ஹீலியோ பி22 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது. அதோடு இதில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களில் கேமராக்களை பொருத்தவரை ஒரே மாதிரியான மெகாபிக்சல் இருந்தாலும் எண்ணிக்கையில் மாற்றம் உள்ளது.

எல்ஜி டபிள்யூ 11, எல்ஜி டபிள்யூ 31, எல்ஜி டபிள்யூ 31+ விலை

எல்ஜி டபிள்யூ 11, எல்ஜி டபிள்யூ 31, எல்ஜி டபிள்யூ 31+ விலை

எல்ஜி டபிள்யூ 11, எல்ஜி டபிள்யூ 31 மற்றும் எல்ஜி டபிள்யூ 31 + ஆகியவை மிட்நைட் ப்ளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள் குறித்து பார்க்கலாம். LG W11 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.9,490 ஆகும். LG W31 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.10,990 ஆகும். அதேபோல் LG W31+ 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியின் விலை ரூ.11,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

LG W11, LG W31, LG W31 +: சிறப்பம்சங்கள்

LG W11, LG W31, LG W31 +: சிறப்பம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போனில் 1600 ×720 பிக்சல்கள் தீர்மானம், 20:9 விகிதத்துடனான 6.52 அங்குல எச்டி+ முழுவிஷன் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. அதோடு இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 22 செயலி மூலம் இயக்கப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சமாக 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பக வசதி இருக்கிறது. அதோடு இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலமாக 512 ஜிபி வரை சேமிப்பகத்தை விரிவாக்கலாம்.

Whatsapp அறிமுகம் செய்த அட்டகாச அம்சம்: இனி ஒரு வாரத்தில் மெசேஜ் தானாகவே அழிந்துவிடும்!Whatsapp அறிமுகம் செய்த அட்டகாச அம்சம்: இனி ஒரு வாரத்தில் மெசேஜ் தானாகவே அழிந்துவிடும்!

13 எம்பி முதன்மை கேமரா

13 எம்பி முதன்மை கேமரா

எல்ஜி டபிள்யூ 11 ஸ்மார்ட்போனில் 13 எம்பி முதன்மை கேமரா மற்றும் 2 எம்பி சூப்பர் வைட்-ஆங்கிள் லென்ஸ் என இரட்டை பின்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதோடு எல்ஜி W31 மற்றும் W31+ ஸ்மார்ட்போனில் 13 எம்பி முதன்மை சென்சார், 5 எம்பி சூப்பர் வைட்-ஆங்கிள் மற்றும் 2 எம்பி ஆழ சென்சார் என மூன்று பின்புற கேமரா அமைப்புகளை கொண்டுள்ளது. அதோடு இதில் எல்இடி ஃபிளாஷ் வசதி இருக்கிறது. மூன்று ஸ்மார்ட்போன்களிலும் முன்புறத்தில் 8MP செல்பி கேமரா வசதி இருக்கிறது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை எல்ஜி டபிள்யூ 31 மற்றும் டபிள்யூ 31 ப்ளஸ் ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் வசதி இருக்கிறது. ஆனால் டபிள்யூ 11 மாடலில் கைரேகை சென்சார் இல்லை. அதேபோல் டபிள்யூ தொடரில் கூகுள் அசிஸ்டெண்ட் பட்டன்கள் இருக்கிறது. மூன்று ஸ்மார்ட்போன்களும் 4000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. அதோடு இதில் இரட்டை சிம், 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் இணைப்பு ஆதரவுகளோடு இருக்கிறது.

Best Mobiles in India

English summary
LGW11, LGW31, LGW31+ Smartphone Launched with HD+ Full Vision Display

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X