ஆன்லைன் விற்பனையில் ஆப்டிமஸ் வரிசை ஸ்மார்ட்போன்!

By Super
|

ஆன்லைன் விற்பனையில் ஆப்டிமஸ் வரிசை ஸ்மார்ட்போன்!
எல்ஜி நிறுவனம் 2 புதிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி உள்ளது. ஆப்டிமஸ் 3டி மேக்ஸ் மற்றும் ஆப்டிமஸ் எல்-7 என்ற இந்த ஸ்மார்ட்போன்கள் சிறப்பான தொழில் நுட்ப வசதிகளை வழங்கும்.

ஆப்டிமஸ் 3டி மேக்ஸ் ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரை வசதியினை வழங்கும். இந்த திரையின் மூலம் டிஎப்டி எல்சிடி தொழில் நுட்பத்தினை பெறலாம். எல்-7 ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் எல்சிடி திரையினை கொண்டது.

இந்த எல்-7 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தினை கொண்டது. எல்ஜி ஆப்டிமஸ் 3டி மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினையும் கொடுக்கும்.

இயங்குதளத்தில் மட்டுமல்ல இந்த 2 ஸ்மார்டபோன்களின் பிராசஸரும் கூட சற்று வித்தியாசம் கொண்டதாக உள்ளது. ஆப்டிமஸ் 3டி மேக்ஸ் ஸ்மார்ட்போன் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸரையும், எல்ஜி ஆப்டிமஸ் எல்-7 ஸ்மார்ட்போன் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரினையும் கொண்டது.

இந்த 2 ஸ்மார்ட்போன்களும் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும், 0.3 மெகா பிக்ஸல் கேமராவினையும் கொண்டதால், துல்லியமான புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதயினையும் பெறலாம்.

எல்-7 ஸ்மார்ட்போன் 1,700 எம்ஏஎச் பேட்டரியினையும், ஆப்டிமஸ் 3டி மேக்ஸ் ஸ்மார்ட்போன் 1,520 எம்ஏஎச் பேட்டரியினையும் கொடுக்கும்.

ஃபிலிப்கார்ட் வலைத்தளத்தில் எல்-7 ஸ்மார்ட்போனை ரூ. 18,990 விலையிலும், ஆப்டிமஸ் 3டி மேக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ.28,990 விலையிலும் பெறலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X