ஸ்னாப்டிராகன் 425 சிப்செட் வசதியுடன் எல்ஜி ஸோன் 4 அறிமுகம்.!
இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்கவில் எல்ஜி நிறுவனம் அதன் புதிய எல்ஜி ஸோன் 4 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் ஐபோன் 6 போன்று சிறிய வடிவமைப் கொண்டுள்ளது, அதன்பின்பு பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்ஜி ஸோன் 4 மொராக்கோ ப்ளூ நிறத்தில் வெளிவந்துள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த அட்டகாசமான எல்ஜி ஸோன் 4 ஸ்மார்ட்போன் மாடல்.

எல்ஜி ஸோன் 4 :
எல்ஜி ஸோன் 4 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.0-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்720 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 425:
எல்ஜி ஸோன் 4 ஸ்மார்ட்போனில் குவாட்-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 425 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.2 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த எல்ஜி ஸோன் 4 ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த எல்ஜி ஸோன் 4 ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

8எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்றஇணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


2500எம்ஏஎச்:
எல்ஜி ஸோன் 4 ஸ்மார்ட்போனில் 2500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் விலைப் பொறுத்தவரை114.99 டாலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








