மூன்று கேமராக்களுடன் எல்ஜி எக்ஸ்6 ஸமார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?
எல்ஜி எக்ஸ்6 சாதனத்தில் 3500எம்ஏஎச் பேட்டரி உள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
எல்ஜி நிறுவனம் இன்று மூன்று ரியர் கேமராக்களுடன் புதிய எல்ஜி எக்ஸ்6 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் தற்சமயம் தென்கொரியாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த எல்ஜி எக்ஸ்6 ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
எல்ஜி எக்ஸ்6 ஸ்மார்ட்போன் மாடல் 6.26-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல்
திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

சிப்செட்:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6762 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால்
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேமரா:
எல்ஜி எக்ஸ்6 ஸ்மார்ட்போனின் பின்புறம் 16எம்பி பிரைமரி லென்ஸ்+ 5எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை
நுண்ணறிவு அம்சம் வசதிகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை
சென்சார் உள்ளது.

பேட்டரி:
எல்ஜி எக்ஸ்6 சாதனத்தில் 3500எம்ஏஎச் பேட்டரி உள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் கருப்பு மற்றும் நீல நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

விலை:
இந்த எல்ஜி எக்ஸ்6 ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.20,556-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications