4500எம்ஏஎச் பேட்டரியுடன் அசத்தலான எல்ஜி எக்ஸ்5 அறிமுகம்.!
எல்ஜி எக்ஸ்5 ஸ்மார்ட்போனில் 64-பிட் மீடியாடெக் எம்டி 6750செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
எல்ஜி நிறுவனம் தற்சமயம் எல்ஜி எக்ஸ்5 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் மற்றும் 4500எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் நீல நிறத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் மாடல் தென் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது விரைவில் இந்திய மொபைல் சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எல்ஜி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

எல்ஜி எக்ஸ்5 :
எல்ஜி எக்ஸ்5 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 720பிக்சல் திர்மானம் மற்றும் 18:9
என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
எல்ஜி எக்ஸ்5 ஸ்மார்ட்போனில் 64-பிட் மீடியாடெக் எம்டி 6750செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த எல்ஜி எக்ஸ்5 ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை,ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

விலை:
எல்ஜி எக்ஸ்5 ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.22,800-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications