4500எம்ஏஎச் பேட்டரி கொண்ட எல்ஜி எக்ஸ் பவர் 2 அறிமுகம்.!
டிஸ்ப்ளே, செயலி, சேமிப்பு, கேமரா, நௌவ்கட், வண்ண வகை, பேட்டரி, அளவீடு, இணைப்பு வசதி.!?
இன்னும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ள மொபைல் வேர்லட் காங்கிரஸ் 2017 நிகழ்விற்கு முன்னதாகவே எல்ஜி நிறுவனம் அதன் மிட் ரேஞ்சர் கருவியான எக்ஸ் பவர் 2 ஸ்மார்ட்போனை வெளியிட முடிவு செய்துள்ளது. உடன் இந்த ஸ்மார்ட்போன் முதலில் லத்தீன் அமெரிக்காவில் மார்ச் மாத வாக்கில் கிடைக்கும் பின்னர் அமெரிக்க, ஆசியா, ஐரோப்பா மற்றும் பிற பகுதிகளில் தொடர்ந்து விற்பனைக்கு வரும்.
எல்ஜி எக்ஸ் பவர்2 கருவியின் விலையானது பகுதிக்கு ஏற்ப மாறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொதுவான அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு கொண்ட இக்கருவியின் பெரிய சிறப்பம்சமாக அதன் பெரிய பேட்டரி திகழ்கிறது. மேலும் இக்கருவி கொண்டுள்ள சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.!

டிஸ்ப்ளே
சரியான விலை மற்றும் கிடைக்கும்தன்மை ஆகிய தகவல்கள் தெரியவில்லை என்றாலும், எல்ஜி எக்ஸ் பவர்2 கருவியின் முக்கிய குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு 5.5 இன்ச் எச்டி (720x1280 பிக்சல்கள்) கொண்ட செல் டச் டிஸ்ப்ளே கொண்டிருக்கும்.

செயலி, சேமிப்பு
ஒரு 1.5 ஜிகாஹெர்ட்ஸ்அக்டா கோர் செயலி மூலம் இயக்கப்படும் இக்கருவி 2டிபி வரை மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக மெமரி நீட்டிப்பு ஆதரவு வழங்குகிறது மற்றும் 16 ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் 2ஜிபி ரேம் வழங்குகிறது.

கேமரா
கேமரா பற்றி பேசிகையில், எல்ஜி எக்ஸ் பவர் 2 கருவியானது, எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற சென்சார் மற்றும் மென்மையான ஒளி வழங்கும் உடனான ஒரு 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டுள்ளது.

நௌவ்கட், வண்ண வகை
மற்றொரு பெரிய சிறப்பம்சமாக இந்த ஸ்மார்ட்போன் பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும். பிளாக் டைட்டன், ஷைனி டைட்டன், ஷைனி தங்கம், மற்றும் பளபளப்பான நீல வண்ண வகைகளில் இந்த சாதனம் கிடைக்க செய்யப்படும்.

பேட்டரி
மேலே குறிப்பிட்டபடி, இக்கருவியின் பெரிய சிறப்பம்சமாக ஒரு முறை சார்ஜ் செய்ய ஒரு முழு வாரம் கூட செயல்படும் திறன் கொண்ட 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் தொடர்ந்து சுமார் 15 மணி நேரம் வீடியோக்கள் பின்னணி, 14 மணி நேரம் நேவிகேஷன் அல்லது சுமார் 18 மணி நேரம் ப்ரவுஸிங் வழங்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இது பாஸ்ட் சார்ஜ் ஆதரிக்கிறது மற்றும் நிறுவனத்தின் படி ஒரு மணி நேர சார்ஜ் செய்ய சுமார் 50 சதவீத பேட்டரி நிரப்ப முடியுமாம்.

அளவீடு, இணைப்பு வசதி
164 கிராம் எடை மற்றும் அளவீடுகளில் 154.7x78.1x8.4 மிமீ கொண்டுள்ள இக்கருவி 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 4.2, யூஎஸ்பி 2.0 யூஎஸ்பி ஓடிஜி ஆகிய இணைப்பு வசதிகளுடன்கூகுள் அசிஸ்டென்ட் ஒருங்கிணைப்பு, ஒரு பெரிய காட்சி, மற்றும் மீண்டும் ஒரு இரட்டை கேமரா அமைப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க
சியோமி மி 5சி - பென்ஞ்மார்க் பட்டியலில் சிக்கியது.!


Click it and Unblock the Notifications