விரைவில் களமிறங்கும் அசத்தலான எல்ஜி விங் ஸ்மார்ட்போன்.!

|

எல்ஜி நிறுவனம் தனது புதிய எல்ஜி விங் ஸ்மார்ட்போன் மாடலை வரும் அக்டோபர் 28-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. குறிப்பாக எல்ஜி விங் இரட்டை காட்சி கொண்ட சுழல் டிஸ்ப்ளே வடிவமைப்போடு வெளிவரும். இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் ஏற்கனவே தென்கொரியாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பாப்-அப் செல்பீ கேமரா, சிப்செட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

விரைவில் களமிறங்கும் அசத்தலான எல்ஜி விங் ஸ்மார்ட்போன்.!

எல்ஜி எக்ஸ்ப்ளோரர் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் வடிவமைப்பு பயனர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிரத்யேகமாக இரட்டை டிஸ்ப்ளே அம்சத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது. கூடுதலாக, இந்த ஸ்மார்ட்போனில் சில சுவாரஸ்யமான அம்சங்கள் இருக்கின்றன.

எல்ஜி விங்கின் முக்கிய அம்சம் இரட்டை டிஸ்ப்ளே வடிவமைப்போடு உள்ளது. இது சுழலும் போது 'டி' எழுத்து போன்ற வடிவத்தை காட்டுகிறது. இதுவரை பயன்படுத்திய ஸ்மார்ட்போனில் இருந்து இது நம்மை வேறுபடுத்தி பிரத்யேக பயன்பாட்டை கொடுக்கிறது. வீடியோ பார்ப்பதற்கு மாறுபட்ட அனுபவத்தை நிறுவனம் வழங்குகிறது.

விரைவில் களமிறங்கும் அசத்தலான எல்ஜி விங் ஸ்மார்ட்போன்.!

அழைப்புகள் மேற்கொள்ளும் அதே சமயத்தில் ஜி.பி.எஸ் வழிசெலுத்தல் போன்ற பிற பயன்பாட்டையும் மேற்கொள்ளலாம். கீழ் டிஸ்ப்ளேயில் புகைப்படத்தை ஸ்க்ரால் செய்யும் போது மேல் டிஸ்ப்ளேயில் அது ஜூம் மோடில் காட்டும். கீழ் திரையில் உள்ள டிஸ்ப்ளேயிலும், மேல் திரையில் உள்ள டிஸ்ப்ளேயிலும் மாறுபட்ட பயன்பாடை மேற்கொள்ளலாம்.

எல்ஜி விங் ஒற்றை திரை ஸ்மார்ட்போனாக பயன்படுத்தப்படலாம். இரண்டு திரைகளைக் கொண்டிருக்கும் சாதனம் நல்ல எடையும் உணர வைக்கிறது. இந்த தொலைபேசி தோராயமாக 260 கிராம் எடையும், 169.5 x 74.5 x 10.9 மிமீ நீளமும் கொண்டது. இது செயல்படும் போது தாக்கத்தை குறைக்க ஹைட்ராலிக் டெம்பர் பொருத்தப்பட்டுள்ளது.

விரைவில் களமிறங்கும் அசத்தலான எல்ஜி விங் ஸ்மார்ட்போன்.!

எல்ஜி விங் 6.8 அங்குல வளைந்த பி-ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது முழு எச்டி + தெளிவுத்திறன் மற்றும் உயர் விகித விகிதம் 20.5: 9 உடன் வருகிறது. G-OLED பேனலுடன் இரண்டாவது திரை 3.9 அங்குலங்களில் வருகிறது. இது முழு HD + தெளிவுத்திறன் மற்றும் 1.15: 1 விகிதத்தைக் கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி SoC செயலி, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி முதல் 256 ஜிபி உள் சேமிப்பு விருப்பங்களுடன் வருகிறது.

விரைவில் களமிறங்கும் அசத்தலான எல்ஜி விங் ஸ்மார்ட்போன்.!

எல்ஜி விங் ஸ்மார்ட்போனில் பாப்-அப் செல்பி கேமராவாக 32 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி செகண்டரி சென்சார் + 12எம்பி tertiary சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் பிரத்யேக கேமரா அமைப்பு குறித்து பார்க்கையில். இது ஒரே நேரத்தில் பல்வேறு புகைப்படங்களை எடுக்க ஆதரிக்கிறது. கிம்பல் பயன்முறையில் இயங்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
LG Wing with 64 Mega Pixel Camera Launching in India on October 28 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X