முடிச்சுவிடுங்க: உச்சவிலை ஸ்மார்ட்போன் இப்போ இந்த விலையில்- ரூ.40,000 விலைக்குறைப்பு- இதுதான் கடைசி வாய்ப்பு!

|

எல்ஜி விங் ஸ்மார்ட்போனுக்கு ரூ.40,000 வரை பிளிப்கார்ட்டில் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.69,990 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.30,000-க்கு கீழ் கிடைக்கிறது.

எல்ஜி விங் ஸ்மார்ட்போன்

எல்ஜி விங் ஸ்மார்ட்போன்

எல்ஜி விங் ஸ்மார்ட்போன் பிரத்யேக வடிவமைப்போடு அறிமுகம் செய்யப்பட்டது. சுழல் டிஸ்ப்ளேவுடன் வந்த முதல் ஸ்மார்ட்போனாக இது இருந்தது. எல்ஜி விங் ஸ்மார்ட்போனானது கடந்த அக்டோபர் மாதம் ரூ.69,990 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட்டில் ரூ.40,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எல்ஜி விங் ஸ்மார்ட்போன் ரூ.29,999 என்ற விலையில் கிடைக்கிறது.

பிளிப்கார்ட் பிளாக்ஷிப் பெஸ்ட் விற்பனை

பிளிப்கார்ட் பிளாக்ஷிப் பெஸ்ட் விற்பனை

பிளிப்கார்ட் பிளாக்ஷிப் பெஸ்ட் விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதன்மை ரக ஸ்மார்ட்போன்களுக்கு பிரத்யேக தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை தின விற்பனையானது ஏப்ரல் 12 முதல் தொடங்கி ஏப்ரல் 15 வரை நடைபெறுகிறது. இந்த சலுகை தின விற்பனையில் எல்ஜி விங் ஸ்மார்ட்போன் ரூ.69,990-க்கு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போன் ரூ.40,000 சலுகை அறிவிக்கப்பட்டு சுமார் ரூ.29,999-க்கு கிடைக்கிறது.

சுழல் வடிவ டிஸ்ப்ளே

சுழல் வடிவ டிஸ்ப்ளே

எல்ஜி விங் ஸ்மார்ட்போனில் சுழல் வடிவ டிஸ்ப்ளே இருக்கிறது. இரண்டு டிஸ்ப்ளேவையும் டி வடிவத்தில் வைத்து பயன்படுத்தலாம். இதன் டிஸ்ப்ளே 90 டிகிரி வரை சுழலக்கூடியது. இதில் இருக்கும் இரண்டு டிஸ்ப்ளேக்களையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தும் வடிவுமுறையைக் கொண்டிருக்கிறது.

இரட்டை டிஸ்ப்ளே வடிவமைப்பு

இரட்டை டிஸ்ப்ளே வடிவமைப்பு

எல்ஜி விங்கின் முக்கிய அம்சம் இரட்டை டிஸ்ப்ளே வடிவமைப்போடு உள்ளது. இது சுழலும் போது 'டி' எழுத்து போன்ற வடிவத்தை காட்டுகிறது. இதுவரை பயன்படுத்திய ஸ்மார்ட்போனில் இருந்து இது நம்மை வேறுபடுத்தி பிரத்யேக பயன்பாட்டை கொடுக்கிறது. வீடியோ பார்ப்பதற்கு மாறுபட்ட அனுபவத்தை நிறுவனம் வழங்குகிறது.

வெவ்வேறு பயன்பாட்டில் இரண்டு டிஸ்ப்ளே

வெவ்வேறு பயன்பாட்டில் இரண்டு டிஸ்ப்ளே

அழைப்புகள் மேற்கொள்ளும் அதே சமயத்தில் ஜி.பி.எஸ் வழிசெலுத்தல் போன்ற பிற பயன்பாட்டையும் மேற்கொள்ளலாம். கீழ் டிஸ்ப்ளேயில் புகைப்படத்தை ஸ்க்ரால் செய்யும் போது மேல் டிஸ்ப்ளேயில் அது ஜூம் மோடில் காட்டும். கீழ் திரையில் உள்ள டிஸ்ப்ளேயிலும், மேல் திரையில் உள்ள டிஸ்ப்ளேயிலும் மாறுபட்ட பயன்பாடை மேற்கொள்ளலாம்.

ஒற்றை திரை ஸ்மார்ட்போனாக பயன்படுத்தப்படலாம்

ஒற்றை திரை ஸ்மார்ட்போனாக பயன்படுத்தப்படலாம்

எல்ஜி விங் ஒற்றை திரை ஸ்மார்ட்போனாக பயன்படுத்தப்படலாம். இரண்டு திரைகளைக் கொண்டிருக்கும் சாதனம் நல்ல எடையும் உணர வைக்கிறது. இந்த தொலைபேசி தோராயமாக 260 கிராம் எடையும், 169.5 x 74.5 x 10.9 மிமீ நீளமும் கொண்டது. இது செயல்படும் போது தாக்கத்தை குறைக்க ஹைட்ராலிக் டெம்பர் பொருத்தப்பட்டுள்ளது.

எச்டி + தெளிவுத்திறன் டிஸ்ப்ளே

எச்டி + தெளிவுத்திறன் டிஸ்ப்ளே

எல்ஜி விங் 6.8 அங்குல வளைந்த பி-ஓஎல்இடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது முழு எச்டி + தெளிவுத்திறன் மற்றும் உயர் விகித விகிதம் 20.5: 9 உடன் வருகிறது. G-OLED பேனலுடன் இரண்டாவது திரை 3.9 அங்குலங்களில் வருகிறது. இது முழு HD + தெளிவுத்திறன் மற்றும் 1.15: 1 விகிதத்தைக் கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி SoC செயலி, 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி முதல் 256 ஜிபி உள் சேமிப்பு விருப்பங்களுடன் வருகிறது.

32 மெகாபிக்சல் கேமரா

32 மெகாபிக்சல் கேமரா

எல்ஜி விங் ஸ்மார்ட்போனில் முதல் பாப்-அப் செல்பி கேமராவாக 32 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மூன்று பின்புற கேமராக்கள் இதில் உள்ளது. அது 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 12 மெகாபிக்சல் புற ஊதா கேமராவுடன் இணைக்கப்பட்டுள்ளது, திரை சுழலும் போது புகைப்படங்களை எடுப்பதற்கான ஸ்விவல் பயன்முறையை ஆதரிக்கிறது, அதோடு 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவும் உள்ளது.

மொபைல் பிஸ்னஸ் இழுத்து மூடப்பட்டது

மொபைல் பிஸ்னஸ் இழுத்து மூடப்பட்டது

ஸ்மார்ட்போன் துறையில் பல்வேறு புதுவகை மாடல்களை புதுப்புது தோற்றத்தோடு அறிமுகம் செய்த எல்ஜி நிறுவனம் தனது மொபைல் பிஸ்னஸை இழுத்து மூடியது. தென்கொரிய நிறுவனமான எல்ஜி உலகளவிலான ஸ்மார்ட்போன் பிஸ்னஸில் இருந்து வெளியேறுவதாக சமீபத்தில் அறிவித்தது. மேலும் இந்த முடிவின் மூலம் ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு மற்றும் மின்சார வாகன கூறுகள், ஸ்மார்ட் வீடுகள் ஆகியவற்றின் வளர்ச்சிப் பாதைக்கு முன்னேற எல்ஜி நிறுவனத்துக்கு உதவியாக இருக்கும் என அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு சாதனங்களுக்கான அப்டேட்

வாடிக்கையாளர்களுக்கு சாதனங்களுக்கான அப்டேட்

அதேபோல் தற்போது எல்ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சாதனங்களுக்கான அப்டேட் அடுத்த குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்படும் எனவும் பிராந்தியத்தின் அடிப்படையில் அதுமாறுபடும் எனவும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
LG Wing Smartphone Gets Rs.40,000 Discount at Flipkart Flagship Fest Sale

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X