48 எம்பி கேமரா, 4ஜிபி ரேம்: ரூ.13,490 விலையில் அறிமுகமான எல்ஜி டபிள்யூ 41 தொடர் ஸ்மார்ட்போன்கள்!
48 எம்பி குவாட் கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட சிறந்த அம்சங்களோடு எல்ஜி டபிள்யூ 41. எல்ஜி டபிள்யூ 41+, எல்ஜி டபிள்யூ 41 ப்ரோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தற்போது தனது சமீபத்திய மாடலாக டபிள்யூ 41 தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளன. இந்த தொடரில் டபிள்யூ 41, டபிள்யூ 41+, டபிள்யூ 41 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் ரூ.13,490 என்ற ஆரம்ப விலை முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

தற்போது வெளியாகியுள்ள டபிள்யூ சீரிஸ் 48எம்பி பின்புற குவாட் கேமரா அமைப்பு, ஸ்மார்ட் ஏஐ, டிஸ்ப்ளே துளை, பாதுகாப்பு அம்சத்திற்கு பின்புற கைரேகை சென்சார், 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட அம்சங்களோடு வந்துள்ளன.

எல்ஜி டபிள்யூ 41 ஸ்மார்ட்போன்கள் சேமிப்பு உள்மைவில் இருக்கும் வேறுபாடை தவிர ஒரே மாதிரியான அம்சங்களையே கொண்டுள்ளது. எல்ஜி டபிள்யூ 41 ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் 64 ஜிபி சேமிப்பு வசதியின் விலை ரூ.13,490 எனவும் எல்ஜி டபிள்யூ 41+ ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு மாடல் விலை ரூ.14,490 எனவும் எல்ஜி டபிள்யூ 41 ப்ரோ ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.15,490 எனவும் வருகிறது.

ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி கார்டு மூலமாக 512 ஜிபி சேமிப்பு விரிவாக்கக்கூடிய வசதி இருக்கிறது. எல்ஜி டபிள்யூ 41 தொடரில் வரும் ஸ்மார்ட்போன்கள் 6.55 இன்ச் எச்டி ப்ள்ஸ முழு விஷன் டிஸ்ப்ளே வசதியை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஓசி உடன் வருகின்றன.

எல்ஜி டபிள்யூ 41 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்புற கேமரா அமைப்பு குறித்து பார்க்கையில் 48 எம்பி பிரதான கேமரா, 5 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 2 எம்பி மூன்றாம் நிலை கேமரா ஆகியவையை கொண்டுள்ளது. எச்டிஆர் டைனமிக் ரேஞ்ச் அம்சத்தோடு குவாட் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. முன்பக்கத்தை பொருத்தவரையில் 8எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 ஆதரவு, பாதுகாப்பு அம்சத்திற்கு கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது. மேலும் பிரத்யேகமாக கூகுள் அசிஸ்டென்ட் பட்டன், கூகுள் லென்ஸ் ஆதரவு அம்சங்களும் இதில் இருக்கிறது. யூஎஸ்பி டைப் சி போர்ட், வைபை, ப்ளூடூத் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன.


Click it and Unblock the Notifications