மூன்று ரியர் கேமரா: விலை ரூ.12,490-எல்ஜி W30 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
இந்தியாவில் மூன்று ரியர் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் அதிகளவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அந்தவரிசையில் எல்ஜி நிறுவனமும் இந்தியாவில் புதிய எல்ஜி று30 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை தற்சமயம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

6.21-இன்ச் முழு எச்டி பிளஸ்
எல்ஜி W30 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.21-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பினபு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 18:5:9 திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 632
இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 632சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது,பின்புஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

எல்ஜி W30 ப்ரோ ஸ்மார்ட்போன் சேமிப்பு
எல்ஜி று30 ப்ரோ ஸ்மார்ட்போன் சேமிப்பு பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும் என்று எச்எம்டி எல்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சாதனம் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஜி W30 ப்ரோ ஸ்மார்ட்போன் கேமரா
எல்ஜி W30 ப்ரோ ஸ்மார்ட்போன் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி 13எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி
டெப்த் சென்சார் + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் என மூன்று ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 16எம்பி செல்பீ கேமராஇவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன்
வெளிவந்துள்ளது.

3500எம்ஏஎச் பேட்டரி
இந்த ஸ்மார்ட்போனில் 4050எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். இந்த ஸ்மார்ட்போனின் எடை 172.7கிராம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ரூ.12,490-விலையில்இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications