எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் வாங்க ஐடியா இருக்கா?- முன்பதிவே சலுகையோடு!

|

எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மூலமாக இந்தியாவில் முன்பதிவு நடைபெற்று வருகிறது. பிளிப்கார்ட்டில் எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போனுக்கு அறிமுக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன்

எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன்

எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மூலமாக இந்தியாவில் முன்பதிவு நடைபெற்று வருகிறது. எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.36,990 எனவும் டூயல் ஸ்க்ரீன் உடன் கிடைக்கும் மற்றொரு மாடல் ரூ.49,990 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் அறிமுக சலுகை

பிளிப்கார்ட் அறிமுக சலுகை

பிளிப்கார்ட் வெல்வெட் ஸ்மார்ட்போனுக்கு அறிமுக சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்ட் மூலம் இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.5000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது. அதேபோல் ஃபெடரல் வங்கி டெபிட் கார்டுகளுக்கு 10% தள்ளுபடி, ஆர்பிஎல் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு ரூ.5000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது.

டூயல் ஸ்கிரீன் அல்லாத ஸ்மார்ட்போன்

டூயல் ஸ்கிரீன் அல்லாத ஸ்மார்ட்போன்

பிளிப்கார்ட்டில் டூயல் ஸ்கிரீன் அல்லாத ஸ்மார்ட்போன் தற்போதுவரை ஆன்லைனில் வாங்கக் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. எல்ஜி டூயல் ஸ்கிரீன் காம்போ அரோரா சில்வர் மற்றும் நியூ பிளாக் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி

ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி

இந்த ஸ்மார்ட்போன் பிற மாடல்கள் போல் ஸ்னாப்டிராகன் 765 ஜிக்கு பதிலாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. எல்ஜி வெல்வெட் கூடுதல் டிஸ்ப்ளே அனுமதி என டூயல் டிஸ்ப்ளே வசதியை கொண்டுள்ளது. இது எல்ஜி ஜி8 எக்ஸ் தின்க்யூ போன்ற பயன்பாடாகும்.

அமேசான் மூலம் சிலிண்டர் புக்கிங்: சலுகையோடு முன்பதிவு செய்யலாம்!

எல்ஜி வெல்வெட் விவரக்குறிப்புகள்

எல்ஜி வெல்வெட் விவரக்குறிப்புகள்

எல்ஜி வெல்வெட் ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படுகிறது. இதில் 6.8 அங்குல முழு எச்டி+ (1,080x2.460 பிக்சல்கள்) முழுவிஷன் டிஸ்ப்ளே இருக்கிறது. கூடுதலாக பொருத்தப்படும் இரண்டாவது டிஸ்ப்ளே, 6.8 அங்குல முழு எச்டி + (1,080x2.460 பிக்சல்கள்) முழுவிஷன் POLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

இந்த ஸ்மார்ட்போனில் வழக்கமான 765 ஜி SoC க்கு பதிலாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 SoC பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தி 2TB வரை சேமிப்பகத்தை விரிவாக்கும் வசதி இருக்கிறது.

48 மெகாபிக்சல் முதன்மை சென்சார்

48 மெகாபிக்சல் முதன்மை சென்சார்

எல்ஜி வெல்வெட் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது.

4,300 எம்ஏஎச் பேட்டரி

4,300 எம்ஏஎச் பேட்டரி

குவால்காம் குவிக் சார்ஜிங் 4+ ஆதரவுடன் 4,300 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு IP68 மற்றும் MIL-STD-810G சான்றளிக்கப்பட்டுள்ளது. எல்ஜி வெல்வெட் 167.2x74.1x7.9 மிமீ அளவும் மற்றும் 180 கிராம் எடையும் கொண்டது. பாதுகாப்பு அம்சத்திற்கு ஸ்மார்ட்போனின் திரையின் கீழ் கைரேகை சென்சார் உள்ளது. இணைப்பு விருப்பங்களில் எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.1 மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும்.

source: ndtv.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
LG Velvet Smartphone Pre-Order Starting on Flipkart with Discounts

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X