வேற லெவல் தள்ளுபடி: உச்ச விலையில் இருந்த "எல்ஜி வெல்வெட்" இப்போ பட்ஜெட் விலையில்- 6 ஜிபி ரேம், 48 எம்பி கேமரா!

|

எல்ஜி வெல்வெட் கடந்த ஆண்டு அக்டோபரில் எல்ஜி விங் ஸ்மார்ட்போன் உடன் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் இரட்டை டிஸ்ப்ளேவுடன் கிடைக்கிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், டிரிபிள் ரியர் கேமரா அமைப்போடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆரம்பத்தில் அறிமுகம் செய்த போது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு அம்சத்தோடு ரூ.49,900 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன்

எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன்

தற்போது இந்த சாதனம் அதிரடி விலைக்குறைப்பில் கிடைக்கிறது. எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் ஆனது ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் அமேசான் மூலமாக ரூ.29,999 என கிடைக்கிறது. இருப்பினும் இந்த இரண்டு தளங்களிலும் இரட்டை டிஸ்ப்ளே சாதனங்கள் சேர்க்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது தெளிப்படுத்தவில்லை. ஒற்றை டிஸ்ப்ளே எல்ஜி வெல்வெட் சாதனம் ரூ.36,990 ஆக இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் விலை இல்லா இஎம்ஐ விருப்பம், எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் உட்பட கேஷ்பேக் சலுகைகளையும் வழங்குகிறது.

ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி

இந்த ஸ்மார்ட்போன் பிற மாடல்கள் போல் ஸ்னாப்டிராகன் 765 ஜிக்கு பதிலாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. எல்ஜி வெல்வெட் கூடுதல் டிஸ்ப்ளே அனுமதி என டூயல் டிஸ்ப்ளே வசதியை கொண்டுள்ளது. இது எல்ஜி ஜி8 எக்ஸ் தின்க்யூ போன்ற பயன்பாடாகும். இது இரட்டை டிஸ்ப்ளே சாதனமாகவும், ஒற்றை டிஸ்ப்ளே சாதனமாகவும் கிடைக்கிறது.

எல்ஜி வெல்வெட் விவரக்குறிப்புகள்

எல்ஜி வெல்வெட் விவரக்குறிப்புகள்

எல்ஜி வெல்வெட் ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படுகிறது. இதில் 6.8 அங்குல முழு எச்டி+ (1,080x2.460 பிக்சல்கள்) முழுவிஷன் டிஸ்ப்ளே இருக்கிறது. கூடுதலாக பொருத்தப்படும் இரண்டாவது டிஸ்ப்ளே, 6.8 அங்குல முழு எச்டி + (1,080x2.460 பிக்சல்கள்) முழுவிஷன் POLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

ஸ்னாப்டிராகன் 845 SoC இந்த ஸ்மார்ட்போனில் வழக்கமான 765 ஜி SoC க்கு பதிலாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 SoC பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தி 2TB வரை சேமிப்பகத்தை விரிவாக்கும் வசதி இருக்கிறது.

48 மெகாபிக்சல் முதன்மை சென்சார்

48 மெகாபிக்சல் முதன்மை சென்சார்

எல்ஜி வெல்வெட் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது.

4,300 எம்ஏஎச் பேட்டரி

4,300 எம்ஏஎச் பேட்டரி குவால்காம் குவிக் சார்ஜிங் 4+ ஆதரவுடன் 4,300 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு IP68 மற்றும் MIL-STD-810G சான்றளிக்கப்பட்டுள்ளது. எல்ஜி வெல்வெட் 167.2x74.1x7.9 மிமீ அளவும் மற்றும் 180 கிராம் எடையும் கொண்டது. பாதுகாப்பு அம்சத்திற்கு ஸ்மார்ட்போனின் திரையின் கீழ் கைரேகை சென்சார் உள்ளது. இணைப்பு விருப்பங்களில் எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.1 மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும்.

புதுப்புது தோற்றத்தோடு அறிமுகம்

ஸ்மார்ட்போன் துறையில் பல்வேறு புதுவகை மாடல்களை புதுப்புது தோற்றத்தோடு அறிமுகம் செய்த எல்ஜி நிறுவனம் தனது மொபைல் பிஸ்னஸை இழுத்து மூடியது. தென்கொரிய நிறுவனமான எல்ஜி உலகளவிலான ஸ்மார்ட்போன் பிஸ்னஸில் இருந்து வெளியேறுவதாக சமீபத்தில் அறிவித்தது. மேலும் இந்த முடிவின் மூலம் ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு மற்றும் மின்சார வாகன கூறுகள், ஸ்மார்ட் வீடுகள் ஆகியவற்றின் வளர்ச்சிப் பாதைக்கு முன்னேற எல்ஜி நிறுவனத்துக்கு உதவியாக இருக்கும் என அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சாதனங்களுக்கான அப்டேட்

சாதனங்களுக்கான அப்டேட்

அதேபோல் தற்போது எல்ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சாதனங்களுக்கான அப்டேட் அடுத்த குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்படும் எனவும் பிராந்தியத்தின் அடிப்படையில் அதுமாறுபடும் எனவும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
LG Velvet Smartphone Now Available at RS.29,999: 6GB RAM, 48Mp Camera and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X