48எம்பி கேமராவுடன் அசத்தலான எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!
எல்ஜி நிறுவனம் தென்கொரியாவில் தனது புதிய எல்ஜி வெல்வெட் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சாம்பல், பச்சை,வெள்ளை உள்ளிட்ட சில நிறங்களில் வெளிவந்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அனைத்து சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்ஜி வெல்வெட்
எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் முழு எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 × 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 20:5 திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு
வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போனில் 2.4ஜிகதஹெர்ட் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 765ஜி 7என்எம் பிராசஸர் வசதி உள்ளது, மேலும் 5ஜிபி ஆதரவு உடன் அட்ரினோ 620ஜிபியு வசதியும் இவற்றுள் அடக்கம். மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை
அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரிநீட்டிப்பு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

இந்த ஸ்மார்ட்போனில் 4300எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட்சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. பின்பு இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி கூடஇவற்றுள் அடக்கம்.

5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, என்எப்சி, புளூடூத், ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில்ரூ.55,780-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications