எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: பல்வேறு புது அம்சங்கள்!

|

எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி மற்றும் டூயல் ஸ்க்ரீன் அம்சத்தோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன்

எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன்

எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு புதிய வடிவமைப்பை கொண்டுள்ளது. எல்ஜி வெல்வெட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் எல்ஜி விங் ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிற மாடல்கள் போல் ஸ்னாப்டிராகன் 765 ஜிக்கு பதிலாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. எல்ஜி வெல்வெட் கூடுதல் டிஸ்ப்ளே அனுமதி என டூயல் டிஸ்ப்ளே வசதியை கொண்டுள்ளது. இது எல்ஜி ஜி8 எக்ஸ் தின்க்யூ போன்ற பயன்பாடாகும்.

எல்ஜி வெல்வெட் விலை

எல்ஜி வெல்வெட் விலை

எல்ஜி வெல்வெட் இந்தியாவில் ரூ.36,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், எல்ஜி வெல்வெட் டூயல் ஸ்கிரீன் காம்போவின் விலை ரூ.49,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் 30 முதல் விற்பனைக்கு வரும். மேலும் இது அரோரா சில்வர் மற்றும் நியூ பிளாக் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

எல்ஜி வெல்வெட் விவரக்குறிப்புகள்

எல்ஜி வெல்வெட் விவரக்குறிப்புகள்

எல்ஜி வெல்வெட் ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படுகிறது. இதில் 6.8 அங்குல முழு எச்டி+ (1,080x2.460 பிக்சல்கள்) முழுவிஷன் டிஸ்ப்ளே இருக்கிறது. கூடுதலாக பொருத்தப்படும் இரண்டாவது டிஸ்ப்ளே, 6.8 அங்குல முழு எச்டி + (1,080x2.460 பிக்சல்கள்) முழுவிஷன் POLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

வெறும் ரூ.3,597-க்கு மூன்று கேமரா,18W சார்ஜிங் கொண்ட ஒப்போ ஏ33: பிளிப்கார்ட் தீபாவளி விற்பனை!

ஸ்னாப்டிராகன் 845 SoC

ஸ்னாப்டிராகன் 845 SoC

இந்த ஸ்மார்ட்போனில் வழக்கமான 765 ஜி SoC க்கு பதிலாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 SoC பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தி 2TB வரை சேமிப்பகத்தை விரிவாக்கும் வசதி இருக்கிறது.

48 மெகாபிக்சல் முதன்மை சென்சார்

48 மெகாபிக்சல் முதன்மை சென்சார்

எல்ஜி வெல்வெட் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது.

4,300 எம்ஏஎச் பேட்டரி

4,300 எம்ஏஎச் பேட்டரி

குவால்காம் குவிக் சார்ஜிங் 4+ ஆதரவுடன் 4,300 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு IP68 மற்றும் MIL-STD-810G சான்றளிக்கப்பட்டுள்ளது. எல்ஜி வெல்வெட் 167.2x74.1x7.9 மிமீ அளவும் மற்றும் 180 கிராம் எடையும் கொண்டது. பாதுகாப்பு அம்சத்திற்கு ஸ்மார்ட்போனின் திரையின் கீழ் கைரேகை சென்சார் உள்ளது. இணைப்பு விருப்பங்களில் எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.1 மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
LG Velvet Launched in India with Dual Screen Accessory: Price, Specification

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X