5கேமராக்களுடன் களமிறங்கும் அசத்தலான எல்ஜி வி40 திங்க்.!
எல்ஜி வி40 திங்க் ஸ்மார்ட்போனின் பின்புறம் 16+13 மெகாபிக்சல் மற்றும் 13மெகாபிக்சல் சென்சார் வசதிகளுடன் கேமராக்கள் பொறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்ஜி நிறுவனம் கடந்த சில மாதங்களாக புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யவில்லை, ஆனால் அந்நிறுவனம் இப்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி விரைவில் 5கேமராக்களுடன் புதிய எல்ஜி வி40 திங்க் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராவும் அதன்பின்பு இரண்டு செல்பீ கேமராக்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் களமிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

எல்ஜி வி40 திங்க்:
எல்ஜி வி40 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:
எல்ஜி வி40 திங்க் ஸ்மார்ட்போனின் பின்புறம் 16+13 மெகாபிக்சல் மற்றும் 13மெகாபிக்சல் சென்சார் வசதிகளுடன் கேமராக்கள்
பொறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமராக்கள் பற்றிய அம்சங்கள் தெரிவிக்கப்படவில்லை.

3டி ஃபேஸ் ஸ்கேனிங்:
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 3டி ஃபேஸ் ஸ்கேனிங் அம்சம் இடம்பெற்றுள்ளது, குறிப்பாக ஐபோன் சாதனத்தில் இருக்கும்
பல அம்சங்கள் இந்த எல்ஜி வி40 ஸ்மார்ட்போனில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு ஆண்ட்ராய்டு
ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

செயற்கை நுண்ணறிவு அம்சம்:
இதற்குமுன்பு வந்த எல்ஜி வி30 ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள செயற்கை நுண்ணறிவு அம்சம் இந்த ஸ்மார்ட்போனிலும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல்
வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நினைவகம்:
இந்த எல்ஜி வி40 திங்க் சாதனத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128பி உள்ளடக்க மெமரி இடம்பெறும், அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் கருப்பு மற்றம் சாம்பல் நிறத்தில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications