மூன்று கேமரா வசதியுடன் களமிறங்கும் எல்ஜி வி40 திங்க் ஸ்மார்ட்போன்.!
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 3டி ஃபேஸ் ஸ்கேனிங் அம்சம் இடம்பெற்றுள்ளது, குறிப்பாக ஐபோன் சாதனத்தில் இருக்கும் பல அம்சங்கள் இந்த எல்ஜி வி40 திங்க் ஸ்மார்ட்போனில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் நிறுவனங்கள் தொடர்ந்து மூன்று கேமரா வசதியுடன் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகிறது என்று தான் கூறவேண்டும். சமீபத்தில் சாம்சங் நிறுவனம் மூன்று கேமராக்கள் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. அந்த வரிசையில் எல்ஜி வி40 திங்க் என்ற ஸ்மார்ட்போன் மாடலை மூன்று கேமரா வசதியுடன் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது எல்ஜி நிறுவனம்.
குறிப்பாக இந்த எல்ஜி வி40 திங்க் ஸ்மார்ட்போனின் விலை மட்டும் சற்று உயர்வாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு அடுத்த மாதம் துவகத்தில் எல்ஜி வி40 திங்க் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
எல்ஜி வி40 திங்க் ஸ்மார்ட்போனில் 6.4-இன்ச் க்யுஎச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல்
திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம். குறிப்பாக கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு வசதியுடன்
இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

கேமரா:
எல்ஜி வி40 திங்க் ஸ்மார்ட்போனின் பின்புறம் 16+13 மெகாபிக்சல் மற்றும் 13மெகாபிக்சல் சென்சார் வசதிகளுடன் கேமராக்கள் பொறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் செல்பீ கேமராக்கள் பற்றிய அம்சங்கள் தெரிவிக்கப்படவில்லை.

3டி ஃபேஸ் ஸ்கேனிங்:
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 3டி ஃபேஸ் ஸ்கேனிங் அம்சம் இடம்பெற்றுள்ளது, குறிப்பாக ஐபோன் சாதனத்தில் இருக்கும் பல அம்சங்கள் இந்த எல்ஜி வி40 திங்க் ஸ்மார்ட்போனில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

செயற்கை நுண்ணறிவு அம்சம்:
இதற்குமுன்பு வந்த எல்ஜி வி30 ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள செயற்கை நுண்ணறிவு அம்சம் இந்த ஸ்மார்ட்போனிலும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நினைவகம்:
இந்த எல்ஜி வி40 திங்க் சாதனத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128பி உள்ளடக்க மெமரி இடம்பெறும், அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் கருப்பு மற்றம் சாம்பல் நிறத்தில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்போனின் விலை ரூ.39,999 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications