இந்தியா: 5கேமராக்களுடன் எல்ஜி வி40 திங்க்யூ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
இக்கருவியில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது.
இந்திய சந்தையில் 5கேமராக்களுடன் எல்ஜி வி40 திங்க்யூ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் தற்சமயம் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது, பின்பு இஎம்ஐ வசதி மற்றும் எக்சேஞ்ச் வசதி
கூட இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

இந்த எல்ஜி வி40 திங்க்யூ ஸ்மார்ட்போனில் அனைத்து சிறப்பம்சங்களும் மிக அருமையாக தான் இருக்கிறது, இருந்தபோதிலும் விலை மட்டும் சற்று உயர்வாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது எல்ஜி வி40 ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
எல்ஜி வி40 திங்க்யூ ஸ்மார்ட்போன் பொதுவாக 6.4-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 3120 x 1440பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதி இவற்றுள் அடக்கம்.

சிப்செட்:
இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை
இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் குவால்காம் குவிக்சார்ஜ் 3.0 ஆதரவு இருப்பதால் இந்த ஸ்மார்ட்போனை விரைவில் சார்ஜ் செய்ய முடியும்.

கேமரா:
எல்ஜி வி40 திங்க்யூ ஸ்மார்ட்போனில் 12எம்பி+16எம்பி+12எம்பி கொண்ட மூன்று ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதேபோன்று 8எம்பி+ 5எம்பி செல்பீ கேமரா ஆதரவும் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

சேமிப்பு:
இக்கருவியில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
இவற்றில் உள்ளது. பின்பு கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக், கூகுள் குரல் கட்டளை ஆதரவு போன்ற பல்வேறு சிறப்பம்சங்களும் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி-விலை:
எல்ஜி வி40 திங்க்யூ ஸ்மார்ட்போன் 3300எம்ஏஎச் பேட்டரி மற்றும் ப்ளூடூத் 5எல்இ, வைஃபை 802.11ஏசி, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி,3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,990-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications