Home
Mobile

செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் எல்ஜி வி30எஸ் தின்க் அறிமுகம்.!

கைரேகை சென்சார், குரல் மற்றும் முக அங்கீகார வசதி 4ஜி வோல்ட், வைபை, ப்ளூடூத், என்எப்சி, யுஸ்பி டைப்-சி 2.0, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash

எல்ஜி நிறுவனம் செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் எல்ஜி வி30எஸ் தின்க் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா துவங்கும் முன் வெளியிடப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வாய்ஸ் ஏ.ஐ. குரல் மூலம் ஸ்மார்ட்போன் செட்டிங்ஸ் மற்றும் செயலிகளை இயக்க முடியும் என்று எல்ஜி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. கூகுள் அசிஸ்டண்ட் போன்ற பல்வேறு அம்சங்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

எல்ஜி வி30எஸ் தின்க் சாதனத்தில் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களை எந்த வலைத்தளத்தில் வாங்க வேண்டும் என்ற தகவல்களை கியூ.ஆர். கோடு மூலம் ஸ்கேன் செய்து தெரிந்துகொள் வசதி செய்துதரப்பட்டுள்ளது, அதன்பின்பு பிரைட் மோட் எனும் வசதி இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது, இதன் மூலம் புகைப்படங்களின் அழகை மேம்படுத்த பல்வேறு வழிமுறைகளை பரிந்துரைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 எல்ஜி வி30எஸ் தின்க்:

எல்ஜி வி30எஸ் தின்க்:

எல்ஜி வி30எஸ் தின்க் ஸ்மார்ட்போன் மாடல் 6.0-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 2880x1440 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் வெளிவந்துள்ளது.

 குவால்காம்:

குவால்காம்:

இந்த எல்ஜி சாதனம் பொறுத்தவரை ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 மற்றும் அட்ரினோ 540 GPU செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த எல்.ஜி. UX 6.0+ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

6ஜிபி ரேம்:

6ஜிபி ரேம்:

எல்ஜி வி30எஸ் தின்க் சாதனம் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்டக்க மெமரியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:

கேமரா:

இக்கருவி 16எம்பி +13எம்பி டூயல் ரியர் கேமரா வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு f/1.6, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ் இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனுடைய செல்பீ கேமரா 5எம்பி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

கைரேகை சென்சார், குரல் மற்றும் முக அங்கீகார வசதி 4ஜி வோல்ட், வைபை, ப்ளூடூத், என்எப்சி, யுஸ்பி டைப்-சி 2.0, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
பேட்டரி:

பேட்டரி:

இந்த எல்ஜி வி30எஸ் தின்க் ஸ்மார்ட்போன் 3300எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு பச்சை நிறம் சார்ந்த புதிய மொராக்கன் புளூ, பிளாட்டிம் கிரே நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இதன் விலைப் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
LG V30S ThinQ launched at MWC 2018 complete specs and features; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X